இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டுமென ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன் மோகனிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார்.
முன்னதாக ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரது தண்டனையையும் ரத்தாக்க வேண்டும் என்று ஒரு புறத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு மறுபுறத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நீதி மன்றத்தைக் கோரியிருந்தமை தெரிந்ததே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த மறு நாளே சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அழித்து ஏழை மாணவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கினார். ஜெயலலிதா அரசு தலித் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அழித்த இரத்த வாடை இன்னும் அப்ப்டியே இருக்க மீனவர்கள் மீது அனுதாபம் காட்டுகிறார்.