புலி சார் அமைப்புக்கள் தமது சார்புநிலை நாடுகளில் ஒன்றாகக் கருதி வந்த அமரிக்கா இப்போது இலங்கை அரசாங்கத்திற்கு சுதந்திரதின் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளது. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு அமெரிக்கா பூரண ஆதரவளிக்கும் அமைக்கா மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 63 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் இலங்கைத் அரசின் நெருங்கிய நட்பு நாடாக அமரிக்க தன்னை அறிவித்துள்ளது.
தமிழ்,தமிழ் என்றூ பேசிய விஜயகாந்த் சாரே கம்முன்னு கிடக்கும்போது,சீட்டுக்களூக்காக அம்மாவோடு பேரத்தில் மட்டும் கவனம் செலுத்தும்போது அமெரிக்காவின் ஈ-மெயில் ஒன்றூம் அதிசயம் அல்ல.
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்ற கருத்தை பொய்ப்பிப்பதற்காக அரசாங்கம் ஏராளமான உயிர்களைப் பலி கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் இலங்கைக்காக முன்னாள் அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக். நியூயோர்க்கில் வானொலி உன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். ஆயினும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை வழங்கி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தலே தற்போதைய அத்தியாவசியத் தேவையாகும். வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகம் மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் யுத்தத்தில் பலியானதற்கு விடுதலைப் புலிகளே பெருமளவில் பொறுப்புக் கூறவேண்டும். யுத்த வலயத்திலிருந்து பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தவறியதன் மூலம் விடுதலைப் புலிகள் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளனர் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இரண்டையும் இணைத்து வாசித்தால் !
வல்லரசுககளின் கபட நாடகங்கள் ஒன்றும் புதிதல்ல தமது நலன்கழுக்கு முரண்படுபவா்களை அவா்கள் உண்மையில் சனநாயகவாதிகளாக இருந்தாலும் தூக்கி எறிவதும், தம்மோடு உறவாடி சுரண்டலுக்கு துணையாக இருப்பவா்கள் கொடிய சா்வாதிகாரிகளாக இருந்தாலும் அவா்கள் நண்பா்கள் என்று அணைத்துக்கொள்வதும் சாதாரண விடயமல்லவா.
30 வருட இனிய நண்பன் எகிப்திய முபாரக் ஏனோ தெரியவில்லை இப்போது விரும்பப்படாத ஒருவராக தெரிகிறார் இதற்கு முன்பு இந்தோனேசியாவின் சுகார்டோவிற்கும் இதுவே நடந்தது,சிலா் நம்புகின்றார்கள் மக்கள் புரட்சி வெடித்து அரபு உலகம் சனநாயகத்தை தழுவப்போகின்றதென்று ஆனால் ஏமாற்றமே மிச்சமாகும்.
ராயபக்ச, அவா்களின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு நான் உங்கழுடன் நட்பாக இருக்க முடிவெடுத்துவிட்டேன் எயமான் என்று கூறிவிட்டார் இனிமேல் இலங்கையில் மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படுவது போல செய்திகள் அடிக்கடி வரலாம் அத்தோடு தென் சூடான் போன்று இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று யாரும் கேட்கமாட்டார்கள் ஆக ராயபக்ச 30 வருடங்களுக்கு மன்னராக வலம் வரலாம்.
இலங்கையில் இனப்பிரச்சனையா?? யார் சொன்னது??
நாடு கடந்த தமிழ் அரசினா் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை ஏனெனில் நமது தரவைகளில் இனி அமெரிக்க மாடுகளும் புல் மேயவரப்போகின்றன.
சூது வாது தெரியாத அப்பாவிபோல முகத்தை வைத்துக் கொண்டு முதுகில் குத்துவதல்ல அமெரிக்கா அது தனக்காக உழைப்பவர்கள தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு லிமிட்டுக்கு மேல நீங்கள் காலைத் தூக்கி மூக்கில் வைத்தால் அதோ கதிதான் முதுகு குப்புற விழ வேண்டியதுதான்.