இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை.
போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு ஆதாரங்கள் இருந்தும் அதிகார வர்க்கம் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எந்த காத்திரமான நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இலங்கையில் நடைபெற்றது போன்று உரிமைக்காகப் போராடும் பெரும்மான்மையான உலகமக்கள் இவ்வாறு கொல்லப்படலாம். இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அதிகாரவர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணம். ராஜபக்ச ஆட்சி தண்டனை பெறாமல் பாதுகாப்பதன் பின்னணி இதுதான்.
ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாடுகளின் அரசுகளுக்கு குறைந்த பட்சம் அழுத்தங்களையாவது பிரயோகிக்க இவ்வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் இதனைப் பொதுத்தளத்தில் முன்வைக்கிறோம்.
[flv:https://inioru.com/ava/wc.flv 480 368]
கொடுமை!
சிஙலனுக்கு இந்த கொடுமையை யார் கொடுப்பார் திருப்பி
Its Really cruel.What the Rajabakshe Governement did with the Tamil Peoples is Brutality-Ethnic Cleaning.I condeming rajabakse Govertment for his act ..Insha Allah……
கொடுத்ததை திருப்பி பெருகின்ரொம். இன்னும் வரும்.நாம் என்ன மலர் கொத்தா கொடுத்தொம் மாலை வாஙக. துப்பகியால் சுட்டொம், திருப்பி துப்பாகி குன்டுதான் வரும்.
அய்யா நண்பரே,,,என்ன கெடுதல் செய்து விட்டோம்… இதை பெறுவதற்கு….?விளக்க முடியுமா…?நன்றிசங்கர்
30 வருடங்கள் பின்னோக்கி பாருங்கள் நண்பரே முதன் முதலாக கொடுத்தது யார் என்று ஒருகன்னத்தில் அடித்தால் திருப்பி மறு கன்னத்தை காட்ட நங்கள் ஒன்றும் இயேசு அல்ல
மேதகு பிரபகரன் திருப்பி கொடுப்பார்!!!
பிரபாகரன் திருப்பிக் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இயக்கத்தின் பேரால் வாங்கியதை எப்போது தமிழ் மக்களிடம் திருப்பிக் கொடுப்பார்கள்?
pray to the lord jesus christ
Praying is not enough but good deed is more essential! Do someting good to the persecuted rathar than making some preachers fat.
தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துயரின், அவலத்தின் மிக சொறப பகுதி இது.
Defiantly Captain will rebirth in this earth to destroy ds swine
“நான் நீ பேதமில்லைஇ ஓர் தாய் பெற்ற பிள்ளை இந்தப் பாடல் வரிகைளை அம்பாந்தோட்டை வலய சிங்கள மொழி ஆசிரியர்கள் பாடுவதைகேட்கும் போது மலர்ந்துள்ள சமாதானத்தின் பயன்களை முழு நாடும் அனுபவித்து வருவது என்பதை உணரக் கூடியதாய் உள்ளது”
தேனி .கொம்
“நான் நீ பேதமில்லைஓர் தாய் பெற்ற பிள்ளை” என்ற பாடல் சிங்கள மக்களைக் குறித்துப் பாடுவதுதான் இப் பாடல். சிங்கள மக்கள் ஒருபோதும் தமிழரை ஒரு தாய் பிள்ளை என்று சொல்வதில்லை. சிங்களவருக்கு தமிழர் யாவரும் பறத் தெமிலா தான். இந்த உண்மையை மறைக்கிறவன் தன்னையும் முட்டாளாக்கி பிறரையும் முட்டாளாக்குவதுதான். சமாதானம் யாருக்கு மலர்ந்துள்ளது?
intha kodumaiku pathil solliyea aaka wendum,???,
I saw a film “Apocalypto” which depicts the scences of an uncivilised society some thousands of years ago. The above picture potrays “we are not far away from those age”. We are still living in an uncivilised world.
What the bloody f*** religious society of this world doing???
Pope has his branches of churches across the world, he is also said to be one of the most influential. Whenever some cruelty happens…he will say “I am praying for those….” but he has done nothing for the cause…..
“INHUMAN GLOBAL POLITICS”
“CAPITALISTIC ECONOMY”
“SELFISH RELIGIONISMS”
WHAT BLOOODY F***** WORLD …WE ARE IN?????????????????????????????
எல்லோரு பார்வையாளர்களாகவே இருங்கள். யாராவது எந்த உருமை அமைப்புக்காவது அனுப்பினீர்கள்? ஆங்கில ஊடகங்களுக்கு அனுப்பினீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்.
நீங்கள் யாருக்கு அனுப்பினீர்கள்?
ஓன்றை மறவாதீர்கள்.
இத் தகவல்களைத் தருவோர் சிங்களப் படை வீரர்கள்.
எனவே இன்னொரு பரிமாணமும் நமக்கு விளங்க வேண்டும்.
நமது போராளிகளும் கொடுஞ்செயல் புரியாதவர்களல்ல. அதுவும் நினைவு கூரத்தக்கது.
adaa pavinkalaa………… this is not the time to blame our Tamils.. we have to be together.. just be against with sinhales.. together.. for our tamils….
“இரக்கமும் மனிதனேயமுள்ள சிங்களப் படை வீரர்கள் மனம் வருந்தி இப்படிநடக்கிறார்கள்.”
பல இலட்சம் கொடுத்து வாஙப் பட்ட படஙள் இவை. இலஙையிலும் வெளினாட்டிலும் பலசிங்களப் படை வீரர்கள் இப்படியான படஙகளை வைத்துக் கொண்டு பேரம் பேசியபடி திரிகிறார்கள். பின்பு இப்படியான சுவெனிருக்கு நல்ல மவுசு என்பது இவர்களுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்?
இந்தக் கொலைகள் நடந்த வேளையில் தான் கருணாநிதி (செம்ம்மொழி புகழ்) டெல்லியில் தனது பேரப் பிள்ளைகளுக்காக பேரம் பேசிக்கொண்டிருந்தவர். இந்த உடல்களில் ஒன்று அவரது பேரப்பிள்ளையாக இருந்தால்?
சிங்கள தேசத்தின் இனப்படுகொலைக் காட்சிகளால் – காந்தி தேசம் அம்மணமாகக் காட்சி!
புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன.
இறுதி யுத்த காலத்திலும், விடுதலைப் போராளிகளும், பொது மக்களும் சிங்களப் படைகளிடம் வேறு வழியற்ற நிலையில் சரணடைந்த காலத்திலும், அதற்குப் பின்னரான இன்று வரையான இந்த ஒரு வருட காலத்திலும் இந்த மிலேச்சத் தனமான இனப் படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளது. இன்னமும் நடாத்தப்பட்டு வருகின்றது.
சிங்களர்களின் வரலாறுகளில், அவர்களது கொடூர குணங்கள் ஆங்காங்கே பதிவுகளாக உள்ள போதும், இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறே வெட்கித் தலை குனியும் அளவிற்கு தற்போதைய சிங்கள தேசத்தின் இன வன்முறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில், நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகளும் கால்களும் கட்டப்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படும் காணொளிக் காட்சியை சனல் 4 எனப்படும் பிரித்தானிய தொலைக் காட்சி ஒளிபரப்பி, சிங்கள தேசம் நடாத்திய இனப் படுகொலையை அம்பலப்படுத்தியது.
அதே சனல் 4 தொலைக் காட்சி நிறுவனம் பெருந்தொகையான தமிழ் இளைஞர்களும், சிறுவர்களும் பெரும்பாலும் நிர்வாணப்படுத்தப்பட்டு, பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்வதற்குத் தயாராக, வாய்க்கால் போன்ற பதுங்கு குழிகளுக்குள் இருத்தப்பட்டிருப்பதையும், பலர் சுட்டுக் கொல்லப்பட்டும் பிணங்களாகக் கிடப்பதையும், சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்ட இரு பெண் யுவதிகளின் கொலை செய்யப்பட்ட உடலங்களையும் காண்பித்து, இந்தப் படுகொலைகள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டன என்பதை, அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் வாக்குமூலத்தையும் பெற்று ஒளிபரப்பியுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சனல் 4 தொலைக்காட்சியால் அம்பலப்படுத்தப்பட்ட காணொளிக் காட்சியக் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று சிறிலங்கா அரசால் நிராகரிக்கப்பட்டது.
இந்தக் காணொளிக் காட்சியை ஆராய்ந்த பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் காணொளிக் காட்சி உண்மையானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது சனல் 4 தொலைக் காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிகத் தெளிவாக, அந்த முகங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்தப் புகைப்படங்களையும் சிங்கள அரசு நிராகரித்துள்ளது. ஆனாலும், மனித உரிமைகள் அமைப்புகளும், ஐ.நா. அமைப்புக்களும் அந்தத் தமிழர்களைப் பார்வையிடக் கோரினால், சிங்கள தேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது என்பது தெரியவில்லை. இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட சிப்பாய்களில் ஒருவர், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் – என்று சனல் – 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும் – என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் – 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் – முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார் – என்று கூறினார்.
சனல் – 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் – விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் – தலைவர் பிரபாகரன் – எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மே 20 அன்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் ஒரு படுகொலைக் காட்சியைச் சித்தரிக்கும் நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு விடுதலைப் போராளியை தென்னை மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்து, அவரை சிறிய கத்தி ஒன்றால், சிறுகச் சிறுக வெட்டிக் கொல்லும் கோரக் காட்சி தொடர்ந்து நான்கு புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
அவரைக் கொலை செய்தவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினால் அவரது உடலைப் போர்த்து ஏளனம் செய்துள்ளார்கள். முள்ளிவாய்க்காலுடன் சிங்களக் கொடூரங்கள் முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை என்பதை வெளிவந்து கொண்டுள்ள தகவல்களும் காட்சிகளும் மீண்டும் உணர்த்துகின்றன.
இந்தக் கொடூரங்களைப் பார்த்த பின்னரும், ஈழத் தமிழினம் மீது கூட்டுப் படுகொலையை நடாத்திய இந்திய தேசம் சிங்களத்தின் மீதான போர்க் குற்ற விசாரணைகளுக்கு இன்றுவரை தடைக்கல்லாக இருப்பதுதான் உலகின் மிகக் கேவலமான தமிழினத் துரோகமாக நோக்கப்படுகின்றது.
சிங்கள தேசத்தின் இனப் படுகொலைக் காட்சிகளால் காந்தி தேசம் தற்போது முற்றிலும் அம்மணமாகக் காட்சி தருகின்றது.
உலகத் தமிழ் உறவுகளே…!
எங்கள் ஈழத்தில் சிங்களம் நடாத்திய, நடாத்திவரும் படு கொலைகளையும், தமிழின அழிப்பையும் இனியும் அனுமதிக்கப் போகிறீர்களா?
இருபத்தோராம் நூற்றாண்டின் நாகரிகம் மிக்க மனிதர்களே…!
இன்னுமா எங்கள் மக்களின் அவலங்களை வேடிக்கை பார்க்கப் போகின்றாய்?
புலம்பெயர் தமிழர்களே…!
உங்கள் உறவுகளுக்கான போர்க் களத்தை நிறைக்க வாருங்கள்…!
பொங்கி எழுங்கள்…!
எங்கள் தேசம் விடுதலை பெறும் வரை போராடுவோம் வாருங்கள்!
சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா.வை நோக்கி நீதி கோரும் போராட்டம் குறித்த அறிவித்தல் வெகு விரைவில் அறியத் தரப்படும்.
தமிழர்களை தமிழர்களே எரியும் தீயில்போட்டு கொலை செய்ததை எடுத்துக்
காட்ட
முடியாமலும்
அந்தக் கொடிய் தமிழர்களின் மீது தகுந்த சட்டநடவடிக்கை எடுக்க முடியாமலும்போய்விட்டது.
இப்போ சிங்களவ்ர்களின் கொடுமைகளை மேம்படுத்தி அத்ன பின்னால் அந்தக் கொடியவர்கள்
மறைந்து வாழ்வதே தமிழர் செய்த் பெரும்பாவம். துரை
who ever did it badthings for bad things.. they are in aboroad with their family.. but now killed by army all pavapadda ealai people………… so u suport sinhala army??? soo bad.. try be nice ..
PLEASE TAMIL PEOPLE . WE HAVE TO BE IN ONE UMPRELLA… TRY NOT TO COMPLAINED OUR TAMILS..
SAFE OUR TAMILS ..
இந்த கொடுமையான நேரத்திலும் ஒப்பிடமுடியாத மனிதப் படுகொலையை ஒப்பிடும் மோடர் ஒரு சிலரே நம்மதியில் உள்ளார் என என்ணி மனம் ஆறுதல் அடைகிறது.
துரை
உங்களுக்கு அரசாஙத்தின் ஒரு அட்டூழியதையும் கண்டிக்க மனம் வராதா?
நீங்கள் வெறுப்பது புலிகளையா? அல்லது தமிழ் மக்களையா?
XXX – இப்படிநடந்ததுக்கு இராணுவம் மட்டும் பொறுப்பாளியா? இவ்வளவு அழிவுகளுக்கும் எல்.டி.டி.இ க்கும் சம பங்கு பொறுப்பு இருப்பதை ஒத்துகொள்ளுவீர்களா?
பிரச்சனையே ஒருபக்கத்தை மட்டும் சாடுவதால் தான்…..
நடுனிலைமயாக சீர்தூக்கி பார்த்தால் இலங்கை இராணுவத்தை மட்டும் பழிக்கவோ…இல்லை தூக்கிவைத்து ஆடவோ தேவையில்லை…
இரண்டுபக்கமும் பிழை இருக்கும் போது .. ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்??????
விடுதலைப் புலிகள்தான் இல்லைஎன்று சொல்கிறார்கள், அப்படிஎன்றால் அவர்கள்மேல் குற்றம் சாட்டி எப்படி நடபடிக்கை எடுப்பது? இலங்கை இராணுவம் ஐயோ பாவம் அவர்கள் என்ன செய்தார்கள் புலிகளின் பிடியில் இருந்தவர்களை மீட்டது மாத்திரமல்ல அவர்களுக்கு ஒரு சுபீட்சமான நல்வாழ்வையுமேல்லோ கொடுத்திருக்கிறார்கள். அதனால் யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் …….., இதுபோல் புலிகள் இருந்தாலென்ன இறந்தாலென்ன குற்றம் குற்றம் தான். இறந்தவர்களளைத் தொண்ட்டிஎடுத்து தண்டனை கொடுக்கவேண்டும்.
YXYX
முழு அனர்த்தத்திலும் புலிகட்கும் தமிழ்த் தேசிய தலைமைகள் அனைத்துக்கும் பங்குண்டு.
நம் முன்னாலுள்ள கேள்வி அதல்லவே.
இவ்வளவு மோசமான போர்க் குற்றம் நடந்துள்ளது. மிகவும் குரூரமான செயல்கள் நடந்துள்ளன. அவற்றுக்கு எவ்வகையில் ராணுவமன்றி வேறு யாரும் பொறுப்பாவர்?
தவறுகள் தன்மையிலும் அளவிலும் மிக வேறுபட்டவை.
தயவு செய்து “சம பங்கு” பேசிப் பேரினவாதத்துக்கும் இனப் படுகொலைக்கும் வெள்ளையடிக்காதீர்கள்.
“இருபத்தோராம் நூற்றாண்டின் நாகரிகம் மிக்க மனிதர்களே…!”
எந்த நாகரிகம் மிக்க மனிடர்களை நோக்கிக் கேட்கிறீர்கள்/?
இன்னமும் ஈராக்கில் படைகளை வைத்துள்ள நாடுகளின் நாகரிகம் மிக்க நாட்டுத் தலைவர்களையா? இன்னமும் ஆப்கானிஸ்தானில் போரை உக்கிரப் படுத்திக் கொண்டிருக்கும் நாகரிகம் மிக்க நாட்டுத் தலைவர்களையா?
பூகம்பத்தல் அல்லற்படும் நிலையிலிருந்த ஹெயிற்றிக்கு ராணுவத்தை அனுப்பிய நாகரிகம் மிக்க நாட்டுத் தலைவர்களையா?
இனியாவது உண்மையிலேயே நாகரிகமான மக்களை அறியுங்கள். அவர்களுடன் கை கோத்துநில்லுங்கள்.
கு”// சரணடைந்த காலத்திலும், அதற்குப் பின்னரான இன்று வரையான இந்த ஒரு வருட காலத்திலும் இந்த மிலேச்சத் தனமான இனப் படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளது. இன்னமும் நடாத்தப்பட்டு வருகின்றது.
//
தமிழீழக்குரலாரே… இன்னும் எத்தனை நாள் தான் இப்படி பச்சை பொய் சொல்லி பிழைக்கப்போகின்றீர்கள்? இந்தப்படமானது மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்! இந்த ஒளிப்படத்தை போலி என்று நான் சொல்ல வரவும் இல்லை….. இதிலிருக்கும் காட்சிகளை நான் நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் கொலைகள் இப்போதும் நடந்துகொண்டிருப்பதாக நீங்கள் கூறியிருப்பது உங்கள் கற்பனையே அன்றி வேறில்லை………
//புலம்பெயர் தமிழர்களே…!
உங்கள் உறவுகளுக்கான போர்க் களத்தை நிறைக்க வாருங்கள்…!
பொங்கி எழுங்கள்…!
///
உங்களைப்போன்றவர்கள் பொங்கிப்பொங்கித்தானே தமிழனின் தன் மானத்தை நந்திக்கடலில் அடகு வைத்தீர்கள்? இன்னுமின்னும் பொங்கி எதை சாதிக்கபோகின்றீர்கள்? மீதமிருக்கும் தமிழனையும் கொன்று குவிக்கபோகின்றீர்களா? இல்லை மூச்சுவிடும் இளம் தளிர்களை கசக்கி எரியப்போகின்றீர்களா???? சிந்தித்துப்பேசுங்கள்…….. உங்களைப்போன்ற முட்டாள் புல(ன்)ம் பெயர் மண்ணாங்கட்டிகளது பொய் வாய்ச்சவடால் காரணமாகத்தான் புணர்வாழ்வு முகாம்களில் வாடும் பிஞ்சுக்குழந்தைகளையும் இன்னும் மீத முடியாதுள்ளது. இப்போதுதான் உங்களுக்கெல்லாம் போராட மனம் வந்ததா? தமிழன் தோற்றுக்கொண்டு போகையில் “பெர்கர்” சாப்பிட்டுக்கொண்டு உண்ணாவிரதமிருந்த ஆண்மையற்ற பேடிகளல்லவா நீங்கள்? அப்போதே புறப்பட்டு வந்திருக்க வேண்டாமா? போராட்டத்துக்கு வழு சேர்த்திருக்க வேண்டாமா? சும்மா பொங்கு எழு என்று எழுதினால் மட்டும் போதாது அப்பனே…… உன் சுய புத்தியை கொண்டு கொஞ்சம் சிந்தித்துப்பார்……
குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும் தண்டிக்கவும் படுவார்கள்… அது இயற்கை நியதி 30 வருடம் பு(போ)லியாட்டம் போட்டவர்கள் தண்டிக்கப்பட்டது போல இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் ஆனால் அதற்கான விலையாக இப்போது நிம்மதிப்பெருமூச்சு விடும் தமிழனின் உயிரை கேற்காதீர்கள்…… தாய்மாறின் நிம்மதியை பறிக்காதீர்கள்……
சுயமாக சிந்தித்து ஜனநாயக ரீதியாகவும் அகிம்சை வழியிலும் போராடுவோம்…. உலகமும் எங்களுக்கு தோள் கொடுக்கும்!
சோக மயமான காட்சிகள் தான் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை…….
ஆனால் இதுபோலவே மாற்றுக்கருத்தாள(தமிழ)ர்களும் மாற்று மத முஸ்லிம்களும் கொன்றொழிக்கப்பட்ட போது எங்களில் எத்தனை பேர் குரல் கொடுத்தோம்….????
சிங்களவன் கொன்றதை விட தமிழனை தமிழன் கொன்றொழித்ததுதான் அதிகம்… கேட்டால் இனம் தெரியாத நபர்களால் துரோகிகள் சுடப்பட்டார்கள் என்று ஏளனப்புன்னைகையோடு செய்தி படித்துக்கொண்டிருந்தவர்கள் தானே நாங்கள் எங்களுக்கும் எங்கள் இனத்திற்கும் இந்த தண்டணை வேண்டியதுதான்…. ஆனால் தண்டணை பெற்றும் திருந்தாமல் இன்னுமின்னும் கூக்குரலிடுக் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்யலாம்???????
கடவுள் என்று ஓன்று இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? மேலே ஒரு நண்பர் “யேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்ககள் ” என்று குறிப்பட்டு இருகிறார். அட பாவி மனிதர்களா இந்த மதத்தினால் தானடா இத்தனை ப்ரிட்சனிகளும், சாவுகளும். இன்னும் எங்கடா மடம் மதம் நு சொல்லிக்கிட்டு அலையறீங்க!! உங்களுகீழ எவன் டா மதம் பற்றி பேச சொன்னது. மீத உள்ளவர்களாவது கொஞ்ச நாள் வாழட்டும். தயவு செய்து ஒரு மதத்தை பற்றி உயர்த்தி பேசவேண்டாம்!! உங்களுக்கெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டிங்கடா!!!
தேரன்
ya absolutely correct friend! pls avoid spreading the religion in to other religion people. pls help to tamil people who are all in eelam. Atleast sent this video link to all the higher officials who r all known to u. pls save tamilians!
Also persuade those who are in controil of funds collected in the name of Tamil EElam to show accounts and make the funds available for the rehabilitation of Tamils at home.
Hello My Dear Thamizhar’s,
I will support to Tamizh Eelam any time any where. My heart is burning … congress Government killing Tamils always.
But Tamil people should knows this.
.நாம் என்ன மலர் கொத்தா கொடுத்தொம் மாலை வாஙக. துப்பகியால் சுட்டொம்இ திருப்பி துப்பாகி குன்டுதான் வரும்.” எங்களுக்கு அவர்கள் மலர்க் கொத்தா தந்தார்கள். எண்ணெய் நிரப்பிய பீப்பாய்களையும் எறிகணைகளையும் 58, 83 கலவரங்களையும் வெலிக்கடையையும் யார் தந்தார்கள்? புலி மீதுள்ள கடுப்பில் நியாயங்களை புறக்கணிக்க வேண்டாம்.
எல்லோருக்கும் தமிழீழம் வேண்டும் தனிநாடு வேண்டும் விடுதலை வேண்டும் என்ற விருப்பத்தில் போராடப் புறப்பட்டார்கள். நாற்பத்தைந்து லட்சம் மக்களின் விடுதலைக்கு முப்பத்திரண்டு இயக்கம் உருவாகியது. குறிக்கோள் தனி ஈழம். போராட்டம் என்னும் பாரத்தை தோழில் தூக்கி நடக்கும் போது காலை வாரி விடுவது. விட்டு விலகுவது. பக்கத்தில் உள்ளவன் நாரியை குத்துவது. ஓடுவது, ஒடுக்குபவனுடன் சேர்வது என ஒவ்வொருவராக விலத்தி குரங்கின் கையில் கொடுத்த பூமாலையாக விடுதலைப்போராட்டத்தை பிய்தெறிந்தாகிவிட்டது. இறுதியில் நாம் தூக்கிய பாரமே ஒரு குறிப்பிட்டவர்களின் தோழ்களில் பொறுத்து அவர்களை நசித்து அழித்தது. தமிழனாக இருக்க எம்மால் முடியுமானால் விடுதலை என்றோ கிடைத்திருக்கும் ஆனால் எம்மால் அது முடியாது. வெள்ளாளனாக யாழ்பாணத்தானாக மட்டக்கிழப்பானாக தீவானாக புத்திசீவியாக இந்துவாக இஸ்லாமியனாக கிருத்துவனாக அந்த இயக்கமாக இந்த இயக்கமாக அந்த இசமாக இந்த இசமாக என்னும் எத்தனையோவாகத்தான் எம்மால் முடிகின்றது. ஆனால் அவ்வப்போது தமிழனை சிங்களவன் கொன்றுவிட்டானே என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இதைதானே அவன் 53 ல் இருந்து செய்கின்றான். இன்னும் செய்வான். எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை. தவிர்க்கவேண்டுமானால் தமிழ் தனி நாடு தேசியம் என்று உணர்ச்சிவசப்படுவதை விடுத்து சுருட்டிக்கொண்டு அடங்கிப்போவது ஒன்றே வழி. எமக்கெல்லாம் தெளிவாகத் தெரியும் நாங்கள் ஒன்றுபடவோ ஒரு கருத்தின் கீழ் வரவோ முடியாது என்பது. இன்னும் தேசியம் என்று உசுப்பிவிட்டு இருக்கின்ற உயிர்களை எடுக்காமல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஒன்றே வழி. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக் கூடாது என்று சொல்வார்கள். எங்களுக்கு முடம் மட்டுமில்லை சாதி மதம் பிரதேசவாதம் புத்திசீவிதம் அந்த இயக்கம் இந்த இயக்கம் என்று ஏராளமான கொடும் மருந்தில்லா வியாதியும் இருக்கின்றது.
“உத்தியோகபூர்ய விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்கு தேசிய பத்திரிகையாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். “
மன்னார் பிரதேசத்திலுள்ள எண்ணெய்வளம் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கையில் இந்தியக் கம்பனி ஒன்று ஈடுபடவுள்ளது என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார். இதற்கான விலைமனுக்கோரல் சர்வதேசஅளவில் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 2011ம் ஆண்டு ஜனவரி மார்ச் மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.”
வன்னியில் இரத்த ஆறு ஓடியது இதற்காகவும் தான். அவர்களுக்கு எங்கள் வளங்களும் நிலங்களும் உடல் உழைப்பும் வேண்டும். இவற்றைப் பற்றி புலி ஒரு போதும் சிந்தித்ததே இல்லை. எப்படியான சூழ்ச்சியை செய்து இந்தப் போரை நொருக்கி அடித்து விட்டார்கள்.
It is very tragic one. Please think why this terrible violence happened to our bother. Italian Sonia gave the courage to despot Rajapakse. The Italian lady was supported by Tamil traitor Karuna. She is Italian unfortunately she is deciding India. She is from Itali the soil which gifted Muzolini. Leave the Italian Lady. Karuna mortgaged tamils for his power. So we have to root out these two elements from our soil. That is the real homeage to our Martyr’ s who contributed their life for A Independent Tamil Land. so TAMILS OF THE WORLD UNITE. We are Ten cores in population. We are having a long long time immemorial tradition. Classic Language, Literature, tradition etc., etc., Further we are having a cause for a Our Independent Home land. We have to convince the International Community and fight in all source to rebuild up our force under one leadership.