ரஷ்ய அரசின் ஆயுத விற்பனை நிறுவனம் இலங்கை அரசிற்கு 14 இராணுவ ஹெலிகொப்டர்களை விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளது. போர் நிறைவுற்று சமாதானம் நிலவுவதாகக் கூறும் மகிந்த ராஜபக்சவின் குடும்ப பாசிச அரசு, யுத்தத் தளபாடங்களை தொடர்ச்சியாகக் கொள்வனவு செய்து வருகின்றது. தெற்காசியாவில் இந்திய அரசோடு இணைந்து மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்க்கும் நாடாக இலங்கை கருதப்படுகிறது. இந்த வருடம் இராணுவச் செலவீனம் 6.3 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரொய்ரர் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ரஷ்ய அரச நிறுவனத்தின் பிரதிநிதி இப் போர் உபகரணங்கள் கடன் அடிப்படையிலேயே இலங்கைக்கு வழங்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தெற்காசியாவில் ஆளும் வர்க்கத்தின் போர்ப் பிரகடனத்திற்கு எதிரான மக்களின் சார் சக்திகளின் ஒன்றிணைவு அவசியமானது.