பிரான்ஸ் 24 தொலைக்காட்சி திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படும் தமிழ்ப் பிரதேசங்கள் குறித்தும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புக் குறித்தும் சாட்சியங்களுடன் ஆவணச் செய்திப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் ஆதரவுடன் கிழக்கில் குடியேற்றப்படும் சிங்கள மக்களின் சாட்சிகளும் அதனால் பாதிப்படைந்த தமிழ் மக்களின் சாட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தவிர, இலங்கை அரச துணைப்படைகள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன. இது தொடர்பாக அரச சார்புப் பத்திரிகைகள் விசனம் தெரிவித்துக் கருத்து வெளியிட்டுள்ளதுடன் இது இலங்கையை அவமானப்படுத்தும் செயல் எனவும் கூறியுள்ளன.