நடந்து கொண்டிருக்கும் போரில் இலங்கை சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட இறுதியில் விடுதலைப் புலிகளை வெல்ல முடியாமல் போகலாம் என இந்தியா எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளார்கள் எனினும் அவர்கள் தமது ஆற்றலை மீள வளர்த்துக் கொண்டு பாரிய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் தமது தலைவிதியை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதே தமது வாதம் எனவும் விடுதலைப்புலிகளின் வன்முறைகளால் இதனை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படையினர் கடந்த சில வாரங்களாக பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர். அவர்கள் மோதலில் வெற்றிபெறலாம் ஆனால் யுத்தத்தில் வெற்றிபெறுவார்கள் என்பது தனக்கு நிச்சயமில்லை எனவும் எம்.கே. நாரயணன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை அரசாங்கம் தன் பக்கம் ஈர்க்கவில்லை, அரசாங்கம் தமிழ் மக்களின் ஆதரவினை பெறும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடையாது என்பது தனக்கு தெரியும் என கூறியுள்ள நாராயணன் இது சிறந்த ஆலோசனை எனவும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளார்கள் எனினும் அவர்கள் தமது ஆற்றலை மீள வளர்த்துக் கொண்டு பாரிய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்”
இந்த கூற்றிற்கு ஆயிரம் அர்த்தங்கள் கொள்ளலாம்.இலங்கையை நோக்கிய மறைமுக எச்சரிக்கையாகவும் எடுக்கலாம்.இவர்களே புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்து இலங்கை அரசை நெருக்கடி படுத்துவார்கள்.