தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பது தொடர்பான உத்தேச சட்டமூல வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காத்திரமான காவல்துறை சேவையொன்று அவசியமானதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரமளித்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்டம், குற்றவியல் சட்டம், விசாரணைகள், மக்கள் தொடர்பு, இரசாயன பகுப்பாய்வு, முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை விமானநிலையத்தில் கடவுச்சீட்டுக்களின் உண்மைத் தன்மையை ஆராயும் தனிப்பிரிவு அமைக்கப்ப்ட உள்ளது.
இலங்கை இராணுவம் எவ்வாறு அழிப்பது என்பது குறித்து பலநாடுகளுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஆக, இலங்கை என்பது உலக அடக்குமுறை இயந்திரத்தின் பரிசோதனைக் கூடம் போன்று செயற்படுகிறதா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுகிறது.
காற்றீல் பறக்கும் கடிதாசிகளீல் நான் குறீத்து வைத்த கனவுகள் எல்லாம் கண்முன்னே பறப்பதை என்னால் தடுக்க முடியவில்லை.அங்கும்,இங்குமாய் ஓடிச் சேர்த்தவைகளீல் என் கனவைக் காணவில்லை.இலங்கை என் கனவு.தீவுப் பகுதியை கனேறீ வாபாக கனவு கண்டு, அலையடிக்கும் கரையில் கோட்டல்கள கற்பனை செய்து இலங்கையை சிங்கப்பூராக்க நான் நினைத்தது உண்டு.அனால் இது எல்லா அடக்கு முறகளீனதும் பரிசோதனைக் கூடமாக இருக்கிறதே.
குழந்தைகளூக்கு எல்லாம் பொடியள் என்றூ பெயரிட்டு,போருக்கு அனுப்பிக் கொண்டிருந்த வன்முற வேண்டாம்.இரத்தம் சிந்தா இல்ங்கையே வெண்டும்.நிலமும்,மண்ணூம்,புல்லும்,புழுதியும் வாழ்வதற்காகவே.சிங்களவர் முன்னரும் வந்து கொண்டிருந்தார்கள், நம் உறவாய்க் கலந்தார்கள்.மச்சானாய், மாமாவாக இணந்தார்கள்.இந்த முப்பது வருட இடைவெளீயில் யாரும் வரவில்லை இப்போது வருகிறார்கள்.கலாச்சாரம் அழிகிறது,பண்பாடு போகிறது என்றூ யாரும் கவலைப்பட வேண்டாம்.மீண்டும் யுத்தம் ஒன்றக் கனவு கண்டு நமது இலங்கை மண்ணக் காயப்படுத்த வேண்டாம்.சிதைந்து அழிந்து சேதாரமாகக் கிடக்கின்ற மண்ணக் கட்டி எழுப்புவோம்.