இலங்கையுடனான வர்த்தக உறவுகளை இரண்டுமடங்காக அதிகரிப்போம் என இந்தியத் தூதுவர் வை.கே.சிங் தெரிவித்துள்ளார். ஒரு புறத்தில் தமிழ்த் தேசியக் கோமாளிகள் சீனாவைக் சுட்டிக்காட்டி இந்தியாவைப் பயமுறுத்துகிறோம் என்று கூத்தாட்டம் நடத்திக்கொண்டிருக்க மறுபுறத்தில் இந்திய பல்தேசிய நிறுவனங்களதும் இந்திய அரசினதும் முழுமையான ஆதரவோடு இலங்கை அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் மூன்று வருடங்களில் இலங்கையுடனான இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமரிக்க டொலராக அதிகரிக்கப் போவதாக சிங் மேலும் கூறியுள்ளார். இந்திய அரச அங்கீகாரத்துடன் 2011 – 2012 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 160 மில்லியன் டொலர்களை இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதாகவும் மேலும் அவர் புள்ளிவிபரங்களைத் தெரிவித்தார். இந்த முதலீடுகள் வடக்கிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி நில ஆக்கிரமிப்பை நடத்தவும், மக்களை வறியவர்களாக்கவும் பயன்படுகிறது. இந்த முதலீடுகளின் மறுபக்கம் தான் 13 வது திருத்தச் சட்டம் என்ற வெற்றுக் காகிதம்.
Sri Lanka should open a Consulate General in every State Capital in the Indian Union. The Deputy High Commission at Chennai (Madras) should also be reduced to a Consulate. This is the first step towards a new relationship between the two countries and all the communities living in both. We need to work in a new dimension. We need a new platform to work for the benefit of all. We have to demonstrate mutual respect for International Law and Diplomatic Protocol.