இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கில் தமிழக மாணவர்கள் இன்று காலை புதுடெல்லியில் பேரணியை நடத்துகின்றனர்.
ஈழத் தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கையின் சிங்கள அரசாங்கம் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று புதுடெல்லியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இந்தப் பேரணி ஆரம்பமாகி உள்ளது.
இந்த பேரணியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் தலைமையில் மாணவர்கள் நேற்று முன்தினம் (நவ12) புதுடெல்லி புறப்பட்டனர்.
மாணவர் பெருமன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவர் பாரதி, பொதுச் செயலாளர் திருமலை ஆகியோருடன் ஆயிரக்கணக்காண மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.