நாட்டில் மதவாதத்தை தூண்டி அதன் மூலம் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுபாலன சேவா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்திவரும் நிலையில் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் இஸ்லாமியர்களை அவதூறு செய்துள்ளார் அமைச்சர்.
பொதுபாலன சேவா என்ற பௌத்த மத அடிப்படைவாத அமைப்பின் பின்னணியில் ராஜபக்ச குடும்பமே செயற்படுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் முஸ்லீம்கள் மீதான பெருந்தேசிய வன்முறை ஒன்றை இலங்கை அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் கட்டவிழ்த்துவிடத் தயாராகிவருவருகிறதா எனச் சந்தேகங்கள் எழுகின்றன.
இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறையைத் தூண்டும் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளை அடக்கவோ, கைதுசெய்யவோ பிரித்தானிய அரசு இன்று இலங்கையில் இல்லை. அத்துடன் சமரசம் செய்துவைக்க சேர், பொன்னம்பலம் இராமநாதன் என்ற தமிழனும் இன்றில்லை, இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம் மதத்தைத் தழுவிய தமிழர்களாக தங்களை வெளிப்படுத்தி தமிழனாக வாழ முற்பட்டால்! சிறுபான்மையின் ஒற்றுமைப் பலம்கண்டு, சிங்களம் சிறிது அடக்கியாவது வாசிக்கமுற்படலாம்.