அரசாங்கத்தினால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, தனக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார். மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மனித தர்மம் பாதளத்தை நோக்கி சென்றுள்ளதாகவும், வெள்ளை வான் காலசாரத்தின் மூலம் எதிராளிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.