தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பிடியாணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் பேரவையின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் நீதிகேட்டு இந்த வழக்குத் தாக்கல் இடம்பெற்றது.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல், பிரித்தானியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பில் இந்த வழக்கை, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கின்றார்.
முதன்மை போர்க்குற்ற நபராக சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ள நிலையில், அவருடன் லண்டன் வந்திருந்த அவரது பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் சஜி கலகே உட்பட பலருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேஜர் ஜெனரல் சஜி கலகே, தமிழ் மக்களிற்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா படையணிகளில் ஒன்றிற்கு தலமை தாங்கியிருந்தவர்.
இதேவேளை, இவர்கள் இருவரும் அடங்கிய குழுவினர் திட்டமிட்டதற்கு முன்பாக நேற்று பிரித்தானியாவைவிட்டு அவசரமாக வெளியேறி, இன்று சிறீலங்காவை சென்றடைந்துள்ளனர்.
இன்றைய வழக்குப் பதிவு நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் சுகந்தன், அனோஜா, ரவி, ஸ்கந்தா போன்றவர்களும், உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சுரேன் சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப் பெற்ற ஐ.நா. விசாரணைக் குழு பாதிக்கப்பட் அனைத்து தமிழர்களிடமிருந்தும் சாட்சியங்களாகவும், ஆதாரங்களாகவும் மேலதிக விவரங்ளை பெறவிரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
நீங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உறவினர்கள்பாதிக்கப்பட்டிருந்தாலோ, 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள்சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனுப்பிவைக்கலாம்.
ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருப்பவருக்கு , தமிழ் அமைப்பைச்சார்ந்தவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அவர்களிடமிருந்து விவரங்களைச்சேகரித்து அவர்களே அனுப்பலாம். இதை கடமையாய் கருதி செய்யவேண்டும்
உலகம் திரும்பிப் பார்க்க இலங்கை தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் இறுதிவாய்ப்பாகும். அனுப்பிவைக்கவேண்டியது தமிழர்களின் வரலாற்று கடமையாகும்
விசாரனை குழுவிற்கு தமிழர்கள் தங்களது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவரகளுக்கு கிடைக்கபெற்று அதன் படி தீர்ப்புகள் அமைந்து விடும் என்பதை மறவாதீர்.
ஓருவர் ஓரு தடவைதான் அனுப்பமுடியும். எத்தனை மின்னஞ்ல்கள் வருகின்றன என்பது கவனிக்கப்படுகிறது புகார்கள முதலில் அனுப்புங்கள் ஆதாரங்கள் தற்போது அனுப்பவேண்டியதில்லை. அனுப்பப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
தமிழகத்தை சேர்ந்தவராய் இருந்தால், நம்மால் முடிந்தது, பாதிக்கபட்ட பல ஈழத்தமிழர் குடும்பங்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்…. அவர்களை அணுகி இத்தைகைய புகர்களை அனுப்பும்படிபடி வேண்டிக் அவர்கள் அந்த புகார்களை அனுப்புவதற்கு தேவையான உதவி செய்யலாம்
புகார்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி panelofexpertsregistry@un.org
விரும்பினால் அதே நேரத்தில் பீ.பீ.சீ. இல் unsubmission@cwvhr.org க்கு அனுப்பினால் ஓரு பிரதி இவர்களிடம் சேமிக்கப்படும்.
உலகத் தமிழ் பேரமைப்பு, சார்பாக தென் செய்தி என்ற செய்திமடலில் வந்தவையே மேற்குறிப்பிடபட்டவையாகும்
கேணல் ரமேஸ் இராணூவத்தால் விசாரிக்கப்படும் போது சாதாரண உடையில் காணப்படுகிறார் ஆனால் போரில் கொல்லப்பட்டதாய் காட்டப்பட்ட செய்திகளீல் இராணூவ உடையில் காண்பிக்கப்பட்டது அப்படியானால் இராணூவ உடை எவ்வாறூ வந்தது?
போர் குற்றம் புரிந்தது என்று சொன்னால் புலிகளைத் தான் குற்றவாளிக் கூண்டில்
நிறுத்த வேண்டும். இதில் பலர் இன்று உயிரோடு இல்லை. இருக்கிறவர் சிலரை தண்டிக்க முடியாது. எய்தவன் யாரோ இருக்க அம்மை நொந்து பயன் ஏது? தமிழனுக்கு தமிழனே போர் குற்றம் புரிந்தான். தண்டிக்க படவேண்டியதாக இருந்தால் லண்டனில் உள்ள சுரேன் அமெரிக்காவில் உள்ள உருத்திரகுமாரையுமே முதலில் தண்டிக்க படவேண்டும். அதுவும் தற்போதைக்கு சாத்தியம் இல்லை.மேற்குலகத்திற்கும் கிழக்குலகத்திற்கும் இருக்கும் வணிகப்போர் நிஜயப் போராக மாறும்போது நாடோடித்தமிழீழ அரசியல் வாதிகளை வளைத்துப் பிடிப்பார்கள். இதுவே தந்திரம்.சமயோகித புத்தி. இதுவெல்லாம் வரலாற்று இயங்கியல் கூறும் அனுபவங்கள்.
ஈழத்தமிழரின் நிலையென்ன? புலம்பெயர்ந்த தமிழனின் நிலையென்ன?? புலம்பெயர்ந்த தமிழனால் ஈழத்தமிழன் கெட்டழிந்தான். ஈழத்தமிழன் பு.தமிழனின் கதையை இனி கேக்கப்போவதில்லை.எந்த ஆலோசனையும் நஞ்சாகவே கருதப்படும்.
இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான் செட்டி. இதுவே தமிழரின் நிலை..
சந்திரன் ராசா, வன்னியில் கொன்றொழிக்கப்பட்ட குழந்தைகள், சிறார்கள், கற்பிணிகள், வயோதிபர், இவர்கள் புலிகளின் உறவினர், அதாவது இவர்கள் புலிகளே. இவர்கள் போர்குற்றம் புரிந்தவர்கள். இவர்கள் கொல்லப்பட்டதும் சரியே.
எந்தநாட்டில் இருக்கிறீர்கள், வைத்தியரை உடன் அனுப்ப!
பி. கு.: மார்க்சிசம், தொழிலாளர், முதலாளி, வர்க்கப்போராட்டம், இவற்றை வைத்து ஏதவது எழுதலாமென்று எண்ணினேன், ஒன்றுமே முடியவில்லை. நீங்கள் இதை இங்குநிரப்பி விடுங்கள் தவுசெய்து.
ராஜபக்ச, பொன்சேகா போன்றோரின் குற்றங்கள் பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லைப் போலத் தெரிகிறது.
எனவே, தயவு செய்து “லண்டனில் உள்ள சுரேனும் அமெரிக்காவில் உள்ள உருத்திரகுமாரும்” செய்த மனித உரிமை மீறற் குற்றங்களைப் பட்டியலிட்டால் எல்லாரும் பயனடைவர்.
நீங்கள் ராஜபக்சவுக்கு ஆதரவாக ஊர்வலம் போகும் போதும் அவை பயன்படலாம்.