28.11.2008.
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பாதுகாப்பாக 12வது இடத்தில் உள்ளபோதும், பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜயரட்ன கூறினார்.
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்கள் முகங்கொடுக்கும் பாலியல் இம்சைகளுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்டநடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குப் போதுமான அறிவு இல்லையென அவர் கூறியுள்ளார்.
அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டதாகவும், இந்த பாலியல் இம்சைகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லையென அவர்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்த எஸ்.எஸ். வுpஜயரட்ண, நாட்டில் எதிர்வரும் காலங்களில் சட்ட உதவி சேவைகளை வழங்குவதற்கு சட்ட உதவி ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். தற்போது நாடளாவிய ரீதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் 48 கிளைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மோதல்கள் மற்றும் சுனாமியால் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டுமெனவும் எஸ்.எஸ்.விஜயரட்ண குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாறவில பகுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியொருவர் பொலிஸார் என தம்மை அடையாளம் காட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த மூவரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.