எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பொதுத் தேர்தல் பணமாக 180 கோடி ரூபா செலவிடப்படவிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. அரசாங்கம் தேர்ல் தொடர்பில் அறிவிப்பை மேற்கொண்டதன் பின்னர் இந்தப் பணம் திட்டமிட்டப்படி செலவிடப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் இந்த நாடாளுமன்றின் ஆட்சிக் காலம் நிறைவடைவதனால், தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செயலகம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தவிர, அடுத்த தேர்தல் ஆணையாளராகப் பசில் ராஜபக்ச நியமிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.