எண்ணெய் மற்றும் எரிவாயு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் இந்திய தனியார் துறைகள் முதலீடு செய்யும் என்று இலங்கை சென்றுள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு கடன் அளிக்குமாறு இந்திய வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.
தவிர, இந்திய வர்த்தகத்திற்கான சிறப்புப் பொருளாதார வலையம் ஒன்றை அமைப்பதற்கான ஆனந் சர்மா குழுவினர் இலங்கை அரசுடன் இணக்கத்திற்கு வந்துள்ளனர். திருகோணமலையில் இதற்கான நிலத்தை வழங்குவதற்காக இலங்கை அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்தேசியக் நிறுவனங்களின் நலனுக்காக இந்தியாவில் பழங்குடி மக்களை அவர்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றி ஆயிரக்கணக்கானோரை இந்திய அரசு அகதிகளாக்கியுள்ளது. தமது சொந்த நாட்டினுள்ளேயே இந்திய அரசின் நிலப்பறிப்பிற்கு எதிராக மாவோயிஸ்டுக்கள் தலைமையில் இந்தியப் பழங்குடி மக்கள் போராடி வருகிறார்கள்.
இப்போது இலங்கையில் இனப்படுகொலையில் சாம்பல் மேடுகளை இந்திய அரசு தனது கையகப்படுத்தி மக்கள் மீதான யுத்ததை ஆரம்பிக்க இந்திய அரசு போர்க்க்குற்றவாளிகளுடன் ஒப்பந்தங்களை எழுதுகின்றது.









சம்பந்தன் ஐயாவின் சொந்தநிலத்திர்க்குமா சோதனை வரும்?
It will be Sri Lanka Police all over the island. Whether North and East will get Land Powers or not is for the imagination of everybody. Other than that we should not worry about this seriously.