நிரந்தர மக்கள் தீர்பாயம் இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை அரச இனப்படுகொலை தொடர்பாக தனது உத்தியோகபூர்வ தீர்ப்பை வெளியிட்ட இந்த அமைப்பு இதுவரை ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் மறுக்கப்படும் உண்மைகளை முன்வைத்துள்ளது. முதலாவதாக இலங்கை அரசு நடைபெற்ற இனப்படுகொலைக்கும் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கும் குற்றவாளிகள் என்று தீர்ப்புக் கூறுகிறது, இலங்கையில் அனைத்தும் முடிந்துவிட்டது என்றும் ராஜபக்ச அரசு போர்க்குற்ற விசாரணை நடத்தினாலே போதுமானது என்று கூறும் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு இத் தீர்பாயம் பதில் கூறியுள்ளது.
தொடரும் இனப்படுகொலையில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பங்களிப்புக் குறித்து விபரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றிற்கான ஆதரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தீர்ப்பறிக்கையின் முழுவடிவம்:
vaimai vellum