இலங்கையில் ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும், பாதிக்கப்பட்டோர் இன்னமும் செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை கூற பயப்படுவதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய அதிகாரம் மிக்க சகோதரர்கள் ஊடக அடக்குமுறையை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கருத்துரைத்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, கடந்த காலங்களில் வெள்ளை வேனில் கடத்திச்செல்லப்பட்ட கலாசாரத்தின் பாதிப்பு இன்னும் தொடர்வதாக கூறியுள்ளது. இன்னமும் மக்கள் தமது கருத்துக்களை ஊடகங்களிடம் கூறுவதற்கு அச்சம் கொண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.