இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகம் 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கொழும்பில் இயங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவும் அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்ததாவது:
பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது அவர் இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகம் இயங்குவதற்கு அனுமதி மறுத்தார்.
இதனால், இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் இந்தியாவில் இருந்துகொண்டே செயற்பட்டார்.
சுமார் 20 வருடங்கள் கழித்து இஸ்ரேலியத் தூதுவர் மீண்டும் இலங்கையில் செயற்பட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.
இது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நாமும் அதிர்ச்சியடைகின்றோம்.
1948. Palestine and Kashmir. Self Determination.