அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானதாக அமையப் போகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈழவாதிகள் அல்லாத நாடாளுமன்றம் ஒன்றை ஜனாதிபதி கேட்கின்றார். இப்போது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பூரண அமைதி ஏற்பட்டுள்ளது.
எனவே அவரது மொழியில் கூறும் ஈழவாதிகள் இந்நாட்டு சிறுபான்மை இனங்களே.
ஜனாதிபதி வேண்டி நிற்பது தனிப் பெரும்பான்மை இனத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம் ஒன்றையேயாகும். இதற்கான திட்டத்தை வகுத்து சிறுபான்மையினரை முட்டி மோத விட்டுப் பிரித்தாளும் ஓர் ஆட்சியே இன்று நடைபெறுகிறது. இதற்காக வேண்டியே புதுப்புது அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு 116 அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தப்பட இருக்கிறது.
இதன் அடுத்த கட்ட அரங்கேற்றமே சிறுபான்மை இனங்களில் பிரதிநிதித்துவத்தை கூறுபோட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டு தொகுதி வாரிமுறை என்ற போர்வையில் வட கிழக்குக்கு வெளியேயுள்ள சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதாகும்.
இதுபோன்று பல விசித்திரங்கள் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே ஆபத்தான நாடாளுமன்றத்தில் அவதானமாக நடந்துகொள்ளக் கூடியவர்களையே நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்” என்றார்
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல : இரா. சம்பந்தன்
வடக்கு கிழக்கை இணைக்கமாட்டேன் என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். அது அவருடைய கொப்பனது சொத்தல்ல. அது எங்களுடைய என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் என். ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது
1977 ஆம் ஆண்டு எமது திருமலை மாவட்டத்தின் வடபுறத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோத ஒரு வீட்டுத்திட்டத்தை அமைத்தோம்.
அந்த வீட்டுத்தோட்ட கிராமத்திற்கு நாம் இட்ட பெயர் ”விபுலானந்த கிராமம்” என்பதாகும். அவ்வாறு முத்தமிழ் வித்தகர் எனப்போற்றப்படும் விபுலானந்தர் பிறந்தமண்ணில் இன்று நான் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
நாம் அடிமையாக வாழமாட்டோம். உரிமையுடன் வாழவேண்டும் என்று மிக உறுதியாக இருக்கலாம். இதுவே நம் மத்தியிலுள்ள பெரும் சவாலாகும்.
இன்று ஒரு பெரும் சவாலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். காரணம் 30 ஆண்டு காலமாக யுத்தம் நாட்டில் நடைபெற்றது. தந்தை செல்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் சமாதானமாக இனப்பிரச்சனை தீர்த்துக் கொள்ளப்படாததால் எமது மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் நிமித்தம் நமது இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அந்த ஆயுதபோராட்டம் முப்பது ஆண்டு காலமாக நடைபெற்றது. எமது போராளிகள் பல சாதனைகளைப் படைத்தார்கள். இது எல்லோருக்கும் அறிந்த விடயம்.
வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் கணிசமானளவு பிரதேசம் அவர்களுடைய பொறுப்பிலிருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஏனைய நாடுகளின் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தது அரசு. தற்போது அந்த இயக்கம் எம்மத்தியில் இல்லை என கூறிவருகின்றது.
ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிடமுடியாது. அந்த ஆயுதமேந்திய இயக்கம் நடத்திய போராட்டத்தின் நிமித்தமே எமது போராட்டம் சர்வதேச அரங்கில் முன்வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தச் சூழ்நிலையில்தான் தற்பொழுது பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தற்பொழுது நம் மத்தியில் ஆயுத இயக்கமுமில்லை. ஆயுத போராட்டமுமில்லை. முதன்முறையாக நீண்ட காலத்தின் பின் ஒரு பொதுத்தேர்தல் புதிய சூழலில் நடைபெறுகின்றது. இன்று சர்வதேச சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை எவ்வித முடிவை எடுக்கப்போகின்றார்கள் என அது காத்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் அடிபணிந்த நாட்டின் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழச் சம்மதம் தெரிவிக்கப்போகின்றார்களா? அல்லது தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி – தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வகுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் வாக்களித்து தாம் ஒரு பெரும் தேசிய இனம், சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கில் வாழ்ந்து அது எமது தாயகம் எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என முடிவெடுக்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதுவே தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவாலாகும். – என தெரிவித்தார்.
நன்றி! தமிழ்வின் இணையம்
‘தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையலாம்’
இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவும், வருகின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் பல சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் இறக்கப்பட்டிருப்பதும், அங்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்கிறார் செய்தி ஆய்வாளரான நிராஜ் டேவிட்.
இதனால், இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பேரம் பேசும் திறன் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ஆயுத ரீதியாக மிகவும் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் கரம், ஆயுதங்களை மௌனிக்க வைத்தன் காரணமாக இன்று அடங்கிப் போயிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களிடம் இருக்கும் அரசியல் பலம் கூட மழுங்கடிக்கப்படக்கூடிய நிலை இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நிராஜ் கூறுகிறார்.
உண்மையில், ஒரு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மிகவும் ஒற்றுமையாக அரசியலைச் சந்ததிந்திருக்க வேண்டிய தமிழ் சமூகம் பிளவுபட்ட நிலையில் தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு இந்த தேர்தலில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கை விட கிழக்கு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்படலாம்
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தமிழ் கட்சிகளுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், அங்கு இருக்கும் மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஏனைய கட்சிகளில் இருக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கே போகும் வாய்ப்பு உள்ளது; ஆனால் கிழக்கு மாகாணத்தில் அத்தகைய நிலை வரும் போது அந்த பிரதிநிதித்துவம் ஏனைய சமூகங்களுக்கு சென்று விடும் என்று நிராஜ் டேவிட் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும், அப்போது ஆயுத ரீதியில் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு ஒரு கட்சிக்கு தெளிவாக வழங்கப்பட்டிருந்தது; அதனால் அந்தக் கட்சி அந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெற முடிந்தது. என்று அவர் கூறுகின்றார். ஆனால் இன்று அந்த நிலை கிடையாது என்றும், தமிழ் வாக்காளர்கள் கூட அண்மைய போர் மற்றும் ஏனைய நிலைமைகள் காரணமாக குழப்பிப் போய் இருப்பதாகவும் நிராஜ் டேவிட் கூறுகிறார்
– BBC
சம்பந்தனிடம் இந்தியாவிடம் அவர் பெற்ற உறுதிமொழி என்ன என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டபோது அவர் கூற மறுத்துவிட்டதாலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விலக நேர்ந்தது. அது உண்மையா?
த.தே.கூ. சோனியாவின் முகவர்கள் என்ற கூற்றச்சாட்டு சிவாஜி லிங்கம் கூறியது. அது உண்மையா?
இதுவரை த.தே.கூ. என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று சொல்லவே இல்லை.
9 பேரைப் பட்டியலிலிருந்து நீக்கியதற்கான விளக்கம் டில்லியில் தான் இருக்கிறதா?
இம் முறை த.தே.கூ. செய்யவுள்ள துரோகம் பற்றி மூடிமறைப்பதில் தமிழ் அச்சு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
மாற்று அரசியலுக்கான பாதை பற்றிய பேச்சையே தமிழ் அச்சு ஊடகங்கள் புறமொதுக்குகின்றன.
மக்கள் அறிய வேண்டிய மாற்றுக் கருத்து எதற்கும் தமிழ் அச்சு ஊடகங்களில் இடமில்லை.அ
மன்னார் உப்புக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அலுவலகம் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்தீன் மசூரின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மன்னாரில் அச்ச நிலை தோன்றியிருந்தது. உப்புக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் றிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது, பொலிசார் அவர்களைக் களைந்து போகுமாறு பணித்தனர்.
அச்சமயம் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் நூர்தீனின் ஆதரவாளர்கள் மன்னார் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, அவர்களின் வாகனங்களும் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்கூறிய கருத்துைர செய்திக்கு நன்றி . வார பலன், மாத பலன், வருட பலன் மற்றும் காதல் ராசி பலன்,ஆன்மீகம் போன்றவற்றை பற்றி தகவல் பெற http://www.yourastrology.co.in என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். மேலும், ‘ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர்’ இந்த தளத்தில் தான் முதல் முறையாக வெளியிட பட்டுள்ளது.
எரியும் வீட்டில் புடுங்கியது இலாபம் என்ற மாதிரி இருக்கு இந்த விளம்பரம். இந்த மடைத்தனத்திற்கு வேறு விளம்பரமா?
WARNING
Santhosh in the pretext of a response is acting in bad faith. He is advertising a product in a very dishonest way.
This has happened before to at this site.
Hi! Santhosh,
how can I contact u to buy this software?