இலங்கையில் சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதனூடாக தனது அதிகாரத்தையும் பெரும்பான்மைப் பலத்தையும் தகவமைத்துக் கொள்ளும் பேரினவாத அரசுகளின் உச்சபட்ச வடிவமே ராஜபக்ச சர்வாதிகாரம். மேற்கு நாடுகளதும், சீனாவினதும், இந்தியாவினதும் பிராந்தியப் பொருளாதாரப் போட்டி ராஜபக்ச சர்வாதிகாரத்தின் ஊக்கியாகத் தொழிற்படுகின்றது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சாட்சியின்றிய மனிதப்படுகொலையைக் கண்டுகொள்ளாத அத்தனை நாடுகளும், படுகொலைகளின் பின்னணியில் செயலாற்றிய அத்தனை வல்லரசுகளும் இலங்கையில் தேசிய இனங்கள் தமது பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும் என மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.
கிறீஸ் மனிதனின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது அவர்களின் அரசிற்கு எதிரான எழுச்சி புத்துணர்வு தருவதாக அமைந்தது. தமிழ்ப் பேசும் முஸ்லீம் தேசிய இனம் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடு இணைந்து பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் புதிய அரசியல் புறச்சூழலை ராஜபக்ச குடும்ப அரசு உருவாக்கியுள்ளது. ஒருபுறத்தில் பேரினவாத அரசும் மறுபுறத்தில் தமிழ் இனவாதப் போராட்டமும் முஸ்லீம் தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் இடையே திட்டமிட்டு ஏற்படுத்திய முரண்பாடுகளை முஸ்லீம்கள் இனம்காண ஆரம்பித்துள்ளனர். ஒடுக்கும் ராஜபக்ச அரசிற்கு எதிரான அவர்களின் குரல் முன்னெப்போதையும் விட பலமாக ஒலிக்கின்றது.
அனுராதபுரத்தில் பல நூறு ஆண்டுகள் பழமைமிக்க மசூதியை புத்த பிக்குகள் குழுவொன்று இடித்துத் தரைமட்டமாக்கியது. பேரினவாத ஊடகங்கள் மசூதியை இடித்தவர்களில் படங்களைப் பிரசுரித்து பாராட்டுத் தெரிவித்தன.
பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார்.
பாபர் மசூதியைஅ இடித்தவர்கள் கூறிய அதே வார்த்தைகள்.
இதற்குப் பதிலளித்த ராஜபக்ச குடும்பத்தின் பிரதான கொலையாளியான கோதாபய ராஜபக்ச மசூதியை மீண்டும் கட்டித்தருவது குறித்த நடவடிக்கையை மேற்கொள்வது தனது வேலையல்ல எனத் திமிரோடு கூறியிருக்கின்றார்.
மசூதியை தாம் தான் இடித்ததாக பௌத்தபிக்குக்கள் குழுவொன்று வெளிப்படையாக உரிமை கோரியும் அவர்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சிங்கள-பௌத்த மேலாதிக்க உணர்விற்கு தூபமிட்டு வளர்க்கும் இலங்கை அரசு வடகிழக்குத் தமிழத் தேசிய இனத்தைப் போன்றே முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தையும் மலையக தமிழ்த் தேசிய இனத்தையும் தமது அடிமைகளாக்க முற்படுகின்றது.
அரசிற்கு எதிரான போராட்டத்தை வெறும் மதவாதப் போராட்டமாகக் குறுக்கிக் கொள்ளாது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரோடும் இணைந்த மக்கள் விடுதலைக்கான போராட்டமாக முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தோர் முன்னெடுக்கும் போதே வெற்றியை நோக்கிய நகர்வாக அது அமையும்.
ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலில் தாரூஸ்மான் அறிக்கை சமர்பிக்க 9 நாடுகள் எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 02:39.36 AM GMT ]
நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மாலைதீவு, பங்களாதேஸ், அல்ஜீரியா, கியூபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தாரூஸ்மான் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமுதாயம் இனியாவது உணர்ந்துகொள்ளுமா தாங்களும் தமிழர்கள்தான் என்று?
முஸ்லிம் சமுதாயம் இனியாவது உணர்ந்துகொள்ளுமா தாங்களும் தமிழர்கள்தான் என்று?
இலங்கை தமிழனிடம் இஸ்லாமிய சமூகத்தவர்கள் மிது ஆதிக்க காழ்புணர்ச்சி உள்ளது
இவர்கள் தமிழ் இனத்தவர்கள் என்றலும் மதத்தால் இஸ்லமியர்கள் இஸ்லாமியர்கள் மிது நடத்தப்பட்ட தாக்குதலை இன்றளவும் மறக்வில்லை இவர்கள் http://www.youtube.com/watch?v=v5tBr16964Y
தமிழர் உடகாத்தல் மறைக்கப்பட்டமட்டகளப்பு இஸ்லாமிய சிறுமின் சாதனை
கிழக்கு மாகாண மட்டகளப்பு மாணவி http://www.youtube.com/watch?v=eoQqgI4w7jU&feature=player_embeddedஇவ்வாண்டு நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 190புள்ளிகளை பெறுவதற்கு காரணமாகயிருந்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன் என ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தைப்பெற்றுள்ளகாத்தான்குடி.3 ஷைகுல் பலாஹ் வீதியைச்சேர்ந்த இம்மாணவி காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப்பாடசாலையில் கல்வி கற்பதுடன் காத்தான்குடி தீனிய்யா மகளிர் அறபுக்கல்லூரியின் ஹிப்ழு மாணவியாகவுமுள்ளார்.முதலாமிடத்தைப்பெற்றுள்ள இம்மாணவி காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் உயர்தர பிரிவுக்குப்பொறுப்பான சிரேஷ்ட ஆசிரியர் எம்.எச்.ஏ.றஸுல்(எம்.ஏ) என்பவரின் மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் கடந்த ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 187புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப்பெற்ற மாணவன் பாஸுல் சஜா என்பவர் ரஸுல் ஆசிரியரின் சகோதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஸுல் ஆசிரியருடன் அவரின் மகள் பாத்திமா ஸீனா நிற்பதையும் படங்களில் காணலாம்.
வடக்கு மானாக சிறுவனை பற்றி பதிவு செய்த உடககள் மட்டகளப்பு சிறுமி பற்றி இதுவரை ஒரு ஊடகம் குட இந்த சிறுமின் பற்றி பதிவு செய்யவில்லை ஏன் இச் சிறுமி இஸ்லாமிய இனத்தவர் என்ற காரணதினளால்
இதுவரை இனிஒரு வாசகர்கள் கண்டிராத வீடியோ 2011 மட்டகளப்பு காத்தான்குடி கடற்கரயில் தமிழ் இஸ்லாம்யர்கள் ரம்சான் தொழுகை இடுபட்ட கட்சி http://www.youtube.com/watch?v=87CpKYxN2Ss
பௌத்தர்களுக்கு முதுகு எலும்பு இருக்கிறது. மதவெறிக்கூடத்தை இடித்துத் தள்ளிய அவர்களைப் பாராட்டுகிறேன்.
இப்படிச் சிந்திப்பவர்களால்,ஒடுக்கப்பட்ட இனமோ,வர்க்கமோ ஒன்றுபட வாய்ப்பேயில்லை.மனிதர்கள் மந்தைகள் அல்ல.மத வெறிக் கூட்டம்.
`எதை இறைவன் மிகப்பெரிய பாவம் என்று தடுத்தானோ எதனை நபி (ஸல்) அவர்கள் இடித்து தரைமட்டமாக்க சொன்னார்களோ அவ்வாறான ஒன்றை அதுவும் நமது சமுதாயத்தினர் கண்டிப்பாக செய்யவேண்டிய ஒன்றை அல்லாஹ் பிற சமுதாயத்தினரால் செய்ய நாடியுள்ளான்- அல்ஹம்துலில்லாஹ் Ansar-Qatar
Good work! It must have been done Muslims and Buddhists have done this noble task!nawas `
http:// kattankudi.info/2011/09/15/%e0%ae%85%e0%ae%a8%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87/#comments
பெளத்தர்கள் இதற்காக பல மசூதிகளை கட்டித் தர வேண்டும், அதற்காக இந்தியாவின் உதவியை அவர்கள் கோர வேண்டும்
the srilankan govenment should take good actice for this incident.the srilankan constitution says that srilanka is democratic country so all people has same rights.we cant devided as a mojority & minority.