இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வரைபை இலங்கை அரசாங்கத்திடம் நிருபமா ராவ் காண்பித்துள்ளார். அரசாங்கம் கூறும் புதிய அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கில் இந்தியாவில் சமஷ்டி முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய அரசியல் அமைப்பையும் இந்தியா உடனான இணக்கப்பாட்டையும் தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தபர அமில தேரர் தெரிவித்தார்.
தேசிய பிக்கு முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தபர அமில தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
“பிரிவினைவாதத்தின் ஆயுதப் போராளிகள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இலங்கையில் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் முழு அளவில் தோற்கடிக்கப்படவில்லை என நாம் பல முறை வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால் யுத்த வெற்றியின் மயக்கத்தில் இருந்த பொது மக்களும் அரசியல் தலைவர்களும் எமது கூற்றின் மீது கவனம் செலுத்தவில்லை.
இலங்கையில் காணப்பட்ட சிறு பிரச்சினைகளை அவதானக் குறைவாக அரசாங்கம் செயற்பட்டமையால் இன்று அவை அபாயகரமானவையாக தலைதூக்கியுள்ளன. இதனால், இந்தியா தனது பொருளாதார அரசியல் கேந்திர நிலையமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றது.
நிருபமாராவின் வருகையின் பின்னணியும் இதுதான். இலங்கையில் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது சர்வதேசத்திற்கு பல உறுதிமொழிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.
அவற்றை நிறைவேற்ற தவறியதாலேயே இந்தியா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பல அழுத்தங்களை கொடுத்துள்ளன.
இரட்டை வேடம் போடுவதில் அரசாங்கம் தனது கெட்டித்தனத்தை காட்டியுள்ளது. ஜீ.எஸ்.பி. எங்களுக்கு வேண்டாம் என்று பிரித்தானிய தூதரகம் முன்பு ஒரு குழுவை களமிறக்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அதேவேளை, திறைச்சேரி செயலாளரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி ஜீ.எஸ்.பி.க்காக கையேந்தி நிற்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் ஐ.நா.வுடனான உறவும் அதே போன்றுதான் இலங்கை சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் சர்வதேசத்திற்கு மற்றுமொரு முகத்தையும் காட்டி வருகின்றது” என்றார்.
சேது சமுத்திர திட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் இலங்கை கடற்படை:
சேது சமுத்திர திட்டத்தின் மாற்று பாதை ஆய்வை, இலங்கை கடற்படையினர் தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். இந்திய கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக சேது சமுத்திரம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் கடல்வழி போக்குவரத்து மேம்பாடு, வளர்ந்த நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. குறிப்பாக சீனாவுக்கு இத்திட்டம் நிறைவேறுவதில் பல்வேறு சிக்கல் எழுந்தன. இலங்கையுடன் உள்ள நட்புறவை பயன்படுத்தி திட்டத்தின் பாதகங்களை அறியும் முயற்சிக்கு தயாரானது.
இதற்கிடையில், ‘வழித்தடத்தில் ராமர் பாலம் வருவதாக,’ சர்ச்சை எழுந்து,கோர்ட்டு விசாரணைக்கு சென்றது. ‘மாற்று பாதையில் திட்டத்தை நிறைவேற்றும் சாரம்சங்களை கண்டறியுமாறு,’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி, மாற்று பாதை ஆய்வுகள் தற்போது மன்னார் வளைகுடாவில் நடந்து வருகிறது. தேசிய கடல்ஆராய்ச்சி மையத்தினர் இதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆராய்ச்சிக்கான பிரத்யோக மிதவைகள் கடலில் பல இடங்களில் நிறுவப்பட்டு, அதை கண்காணிக்கும் பணியில் மீனவர்கள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய மாற்று பாதையில் நல்ல ஆழமான சூழல் இருப்பதால், பெரிய அளவிலான கப்பல்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, சேது சமுத்திரம் திட்டத்தின் மாற்று பாதை ஆய்வுகளை கவனிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தங்கள் வசமுள்ள இலங்கை கடற்படையின் பிரத்யோக உதவி, அந்நாட்டுக்கு கைகொடுத்துள்ளது. இதனால், சமீப காலமாக இலங்கை கடற்படை இந்திய எல்லையில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய கடற்படைக்கும் இத்தகவல் கசியத் தொடங்கி யிருப்பதால், அவர்களும் உஷார் நிலையில் உள்ளனர்.
இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனாலேயே, தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் இந்திய எல்லை பலகை வைக்க உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சத்தீவை தொடர்ந்து சேது சமுத்திரம் திட்டத்திலும் சீனா தலையிடுவது, மாற்று பாதை ஆய்வில் இன்னும் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
ஆதாரத்திற்கும் வாசகர்களின் கருத்துக்களுக்கும்:
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6920
இதே நேரத்தில் பாலைத் தீவிலும் கச்ச தீவிலும் சீன நாட்டவரின் பயன்பாட்டில் உள்ள ரென்ட் கொட்டகைகள் காணப்பட்டதாகவும் இனம்தெரியாத நடமாட்டங்கள் இருந்ததாகவும் பாலை தீவு புனித அந்தோனியார் தேவாலைய வருடாந்த வழிபாட்டு ஆராதனைகள், விழா நிகழ்வுகளில் பங்குகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாலைத் தீவின் பெரும்பாலான பகுதிகளிற்கு மக்களை அனுமதிக்காத கடற்படையினர் பாரிய கடற்படைத்தளம் ஒன்றை அமைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு முதலமைச்சரின் இந்திய வரவேற்ப்பு, வடக்கில் இந்திய துணைத் தூதுவராலயம், கிளிநொச்சியில் ENDLF ன் அலுவலகம் என்று செய்திகள் வரும் நிலையில்….. என்னத்திற்கும் தேர்தல் முடியட்டும்… பொறுத்திருந்து பார்ப்போம்…..ஹ்ம்ம்ம்.
ஆடு புலியாட்டத்தில் எல்லாம் எதிர்பார்த்தவையே…. மக்கள் தான்…..