இலங்கையின் பிரதான எதீர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக அணி திரளத் தீர்மானித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இந்த பொதுவான கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளன.
இது தொடர்பிலான விசேட ஒப்பந்தத்தில் குறித்த கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இன்றைய தினம் கைச்சாத்திட உள்ளன.கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடாத்தும் நோக்கில் இந்த புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
தெற்காசியாவில் உருவாகியுள்ள ஏகபோக நாடுகளின் சந்தை மற்றும் ஆதிக்கப்போட்டியின் எதிரொலியாக இலங்கையில் அமரிக்கா சார்பு நாடுகள் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முனைகின்றன. மகிந்த பாசிசத்திற்கு பிரதியீடாக இன்னொரு பாசிசத்தை உருவாக்குவதே ஏகபோகங்களின் நோக்கமாகக் காணப்படுகின்றது.
1952. Mother Language Day. Dhaka, Bangladesh. Political Pluralism. D. A. Rajapakse – 8 kids – 5 boys and 3 girls. Abdullah, It is, Me. Sarath Fonseka – December 1950.