மூன்று தசாப்தங்களாக இலங்கையின் அடிப்படைப் பிரச்சனை பயங்கரவாதமே என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய பிரச்சனை யுத்தாதல் பாதிப்படைந்து இடம்பெயர்ந்தவர்கள் குறித்ததே எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை கே.பி இந்திய ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலிலும் இவ்வாறே தெரிவித்துள்ளார்.இதே வேளை இலங்கை அரசைப் பொறுத்த வரைக்கும் இனிமேல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பன குறித்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் நாங்கள் பயங்கரவாதத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிறுவிவிட்டோம் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹெட்லைன்ஸ் ருடே என்ற தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோதாபயவின் கூற்றுக்கள் தமிழ் மக்களைப் போராடக் கோருகிறது. இந்திய இலங்கை அரசுகள் ஒரே குரலில் பேசுகின்றன. இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த அரச ஆதரவாளர்களும் இதே கருத்துக்களையே முன்வைக்கின்றனர்.
கோத்தபாய எனும் கொசு கடிக்கும் இடமெல்லாம் தடிக்கிற்து அதை அடித்து விரட்ட நான் வேப்பிலை கொளூத்துகிறேன்.ஆனால் கோத்தபாயக் கொசு எமனையே தான் பச்சடி போட்டதாய்ப் புலம்புகிறது.பார்ப்போம் எத்தனை காலம் இதன் ஆட்டம் என்றூ.
நிகழ்ச்சி நிரல் தவறாமல் நடந்து கொண்டே போகிறது.இது ஒன்றும் ஆவதற்கில்லை.நாமே போராட வேண்டும்!அது எந்த வழியாயினும் சரி.
// நாங்கள் பயங்கரவாதத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிறுவிவிட்டோம் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.// . இது உண்மையில் மென்ரல் பிரச்சனை. புலிகளும் அரசும் செய்தது ஒன்றைத்தான். அதாவது கல்யாணத்திற்கு முன் உடலுறவு கொண்டால் பிழை பின் உறவு கொண்டால் சரி என்பது போல் உள்ளது. அதிகாரம் உள்ளவர்கள் கொல்லலாம் என்பது போல் அமைகிறது. ஜனநாயகம் ஆயுதங்களுக்கு அப்பாற்பட்டது அதைக்காக்க ஆயுதங்களால் இயலாது. ஒருபயங்கரவாதத்தை இன்னொரு பயங்கரவாத அரசு அழித்ததே தவிர ஜனநாயகம் காக்கப்பட்டது என்பது முழுத்தவறு. பெரும்பான்மையின் தீர்மானம் தான் ஜனநாயகம் என்றால் அது தவறானது. இலங்கையில் காலம்காலமாக நடைவெறுவது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே தவிர ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் மனிதர்களுக்கும் பெளத்தறிவு கொண்டவர்களுக்கே தவிர சிங்கம் புலி என்று பெருமைபேசும் போக்கிலிகளுக்கல்ல