சீனா, 2009 ம் ஆண்டில், இலங்கையில் பாதை அபிவிருத்தி, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்திமைய செயற்பாடுகள்,தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் என்பவற்றுக்கான 3.4 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் திட்டக்கடன்களாக 1.9 பில்லியன் டொலர்களையும், நிதிகளாக 279.6 மில்லியன் டொலர்களையும் சீனா, இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, மேற்கத்தைய நாடுகள், நிதியுதவிகளை குறைத்து வந்துள்ள நிலையிலேயே சீனா, இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.
இதேவேளை, சீனா, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு மொத்தமாக கிடைத்த நிதியுதவிகளில் 84.3 வீதத்தை வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஜப்பான் மற்றும் மணிலாவை தளமாகக்கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவே இலங்கையின் பாரிய நிதியளிப்பாளர்களாக இருந்து வந்தன. |