14.01.2009.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில் இலங்கை ஜனாநாய ஒன்றியம் (எஸ் எல் டீ எவ்) எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக ஒரு போராட்டத்தை நடத்த உள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சோலியன் குடும்பி சும்மா ஆடாதெங்கோ! மகிந்த அரசு லசந்தாவின் படுகொலையை கண்டித்து அறிக்கைவிட்ட கேலிக்கூத்து முடிந்து அதன் தொடர்ச்சி லண்டனில் இலங்கை ஜனாநாய ஒன்றியம் (எஸ் எல் டீ எவ்) ஊடாக தொடர்கிறது. கொலைகாற மகிந்த அரசுக்கு நன்றிக்கடன் செய்யும் போராட்டம் இது பாருங்கோ. லசந்தாவை மகிந்த அரசு கொலை செய்யவில்லையாம். வேறு யாரோ கொலை செய்து புனிதமான அகிம்மைசயான மகிந்த அரசை கலங்கப்படுத்திவிட்டார்களாம்.எனவே லசந்தாவை கொலை செய்த தங்களது ஏஐமான் ராஐhபக்ச மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கவும் கொலையாளிகளை கண்டுபிடிக்கவும் கோரித்தானாம் இலங்கை ஜனாநாய ஒன்றியம் (எஸ் எல் டீ எவ்) இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்போகிறதாம். என்ன இருந்தாலும் மகிந்த அரசின் வெளிநாட்டு பிரச்சாரர்கள் அல்லவா இவாகள். தங்கள் கடமையை ஒழுங்காக செய்கிறார்கள்.
சங்கர் அவர்களே நீர் எந்த ஆதாரத்தை வைத்து இலங்கை அரசுதான் லசந்த விக்கிரமதுங்காவை கொலை செய்தது என்று சொல்கின்றீர். உம்மைப்போன்றவர்களின் கண்களுக்கு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு செய்யும் நன்மைகள் ஒன்றும் தெரியாது. இலங்கை சனநாயக ஒன்றியம் உம்மைப்போன்றவர்கள்போல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இலங்கை அரசை ஆதரிப்பதில் என்ன குற்றத்தைக் கண்டீர்.
என்ன இது !!!!!!!!! எஸ்எல்டிஎப் பத்திரிகா தர்மம் கதைக்குது!!! இப்ப கொஞ்ச காலமாக இவங்கட தொழில் 1.
தேசம் நெற்றுக்கு எதிராக விசமப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பது 2. கைநாட்டுப்போராட்டம் 3. கழுத்தறுப்பு ஈமெயில்கள் 4.கிசு கிசு இணையத்தளம் திறந்து தெசம் ஆசிரியர்களையும் அவர்கள் குடும்பங்களையும் தர்ற்றுதல் 5 துணைக்கு ஒரு உண்மைக்டுதாசி 6. கூட்டங்களில் சண்டித்தனங்கள் 7. பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தல் 8.தேசம் ஆசிரியர்க்கு கொலை மிரட்டல் கூட விட்டுவிட்டு இப்ப சாத்தான் வேதம் ஓதின கதையாய் பத்திரிகா தர்மத்திற்காக போராட்டம் போடுகினமாம். இதை கேட்டால் தலையை எங்க மோதுறது.
மகிந்தாவடன் சந்திப்புக்கள் மகிந்தாவின் காசில் பயணங்கள் மகிந்தாவின் காசில் புத்தக வெளியீடுகள் அதுக்கு பிராயச்சித்தமாக கவர் குடுக்கிறார்கள்.
கொலை செய்தத மகிந்தாவின் காடையர்கள் என்று தெரியவர இது ஒரு துன்பியல் சம்பவம் எண்டும் அறிக்கையும் விடுவியள்
நாலு மொட்டைகள் சேர்ந்து நடாத்தும் லூஸ் பொடிக்கு இந்தப் போராட்டம் தேவைதானா?
நாளை லசந்தாவின் கொலையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
ஜ வியாழக்கிழமைஇ 15 சனவரி 2009 ஸ ஜ தேசிங்கன்(பிரித்தானியா) ஸ
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில் இரு போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் வியாழக்கிழமை 15 ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை 10> னழறபெைெ ளவசநநவஇ டழனெழn ளுறு1(சுஐஊர்ஆழுனேு வுநுசுசுயுஊநு) நெயசநளவ வரடிந ளவயவழைn றநளவஅளைெைவநச. என்ற இடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
சர்வதேச எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு (சுளுகு) சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம (ஐயுவுயுது)> புலம்பெயர்ந்த ஊடகவியலாளர் அமைப்பு (நுதுN) ஆகியன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன.
இந்த எதிர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து ஊடகவியலாளர்கள் ஜனநாயக விரும்பிகளை ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
இதேவேளை…
இலங்கை ஜனாநாய ஒன்றியம் (எஸ் எல் டீ எவ்) எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைத் து}தரகத்திற்கு முன்பாக மற்றும் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதர்சனம் .கொம்
ராஜபக்சவுக்கும் எஸ்.எல்.டி.எப்பு வுக்கும் ஓரு பழ மொழி : தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
ஆனா என்ன ராஜபக்சவுக்கு கிசுகிசு பத்திரிகை தான் இல்ல்லை
இது தொடர்பாக மக்களின்/ சர்வதேச சமூகத்தின் சந்தேகம் அரசின் மீது தான் என்ற போதும் கொலையாளர்கள் யார்? என்பது இதுவரை தீர்மானிக்கப்படாத ஒரு சமாச்சாரம்.
“இப்படியிருக்க சோலியன் குடும்பி சும்மா ஆடாதென்று. . .” பொது நோக்கைக் கேலியாக்குவதும்.
“இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நன்மை செய்கிறது” என்று காட்ட முனைவது இரண்டுமே தவறு தான்.
அரசென்பது தமது இறமைக்குட்பட்ட மக்களால் தம்மை நிறைவாக வைத்திருக்குமாறு கொடுக்கப்பட்ட ஒரு அங்கீகார நிறுவனம்.
அப்படியிருக்க பொpதும் கவனம் காட்டாத உயிரழிவுகள்/ உயிரச்சுறுத்தல்/ வாழ்வாதாரங்கள் அழிந்த நிலை/ பிரதேசச் சூறையாடல் என்று இப்பேர்ப்பட்ட பல துன்பங்களைத் தமிழ் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு நன்மை செய்திருக்கிறது என்பதை எப்படி சொல்ல முடியும்?
தனது பிரசைகளை பாசிசப் பயங்கரவாதி ஒருவனிடமிருந்து பாதுகாக்கவேண்டிய கடமையை செய்த போது சந்தர்ப்பம்/ இருந்த நிலமைகள் என்பன ஒப்பீட்டளவில் நன்மையாகக் கொள்ளப்படுகிறது.
மற்றும் அனைத்துமே பற்றாக்குறைகளும் பாதிப்புமாவே பாpசாக்கிக்கொண்டிருக்கிறது. இது சிங்கள மக்களுக்கும் நன்மை செய்யவில்லை.
அவர்கள் குரல்களும் நசுக்கப்படுகின்றன என்பற்கு “லசந்த” வின் படுகொலை/ இதற்கு முன் நடந்த ஜனநாயக மீறல்களும் கொலைகளும்/ பொருளாதா சிக்கலல்கள்/ விலைவாசியுயர்வு எனப் பல தீமைகள் அவர்களுக்கும் பகிரப்பட்டுள்ளன.
ஆதலின் இத்தகைய எந்த மீறல்களுக்கும் எதிரான செயற்பாடுகள் அரசுக்கெதிரான செயற்பாடுகளே!
இந்தப் பொது நோக்கில் முரண்பாடுகளை மறந்து ஒருமித்து செயற்படுவதே உகந்ததாகும்
தேசம் ஒருபுறம்/ எஸ்எல்டிஎவ் ஒரு புறமாக ஒரே குரலை முன் வைக்கும் போது ஐக்கியம் கேலியாகப் பார்க்கப்படும். பக்கம் சாராத பொதுவான கோஷங்கள் / அறிக்கைகள் என்ற உடன்பாட்டுக்குள் ஏன் வரக்கூடாது?
/தேசம் ஒருபுறம்/ எஸ்எல்டிஎவ் ஒரு புறமாக ஒரே குரலை முன் வைக்கும் போது ஐக்கியம் கேலியாகப் பார்க்கப்படும். பக்கம் சாராத பொதுவான கோஷங்கள் / அறிக்கைகள் என்ற உடன்பாட்டுக்குள் ஏன் வரக்கூடாது?/
சரணியான் இதே குரலை புலி வாசிக்கும்போது ஜக்கியம் பற்றி கதைப்பீங்களோ? சும்மா சும்மா விசுக்காதேங்கோ. எஸ்எல்டிஎவ் செய்யாத ஊத்தை வேலையா. செய்துகொண்டிருக்கிற ஊத்தை வேலையோ உமக்கு தெரிய வராது. ஜக்கியம் பற்றி ஒருக்கா எஸ்எல்டிஎவ்காரருடன் கதைச்சு ஒரு விடயத்தை நடத்திக் காட்டிப்போட்டு கதையும். பக்கம் சார்பு பக்கமில்லா சார்பு எல்லாத்துக்கும் என்ன அர்த்தம் எண்டு பிறகுதான் உமக்கு விளங்கும். புலி செய்தால் கொலை. காறி துப்புறன் எண்டு அறிக்கைவிட்ட ராஜேஸ்குமார்(மகேஸ்வரிக்கு) அரசு பொதுமக்களை கொல்லேக்கை காறி துப்பமாட்டார்.பக்க சார்பில்லாதவரில்லோ.
எஸ்.எல்.டி.எவ் ஆக்களைப்பற்றி அரசியல் சம்பந்தமாக நீங்கள் பலர் கற்றுக்குட்டிகளாக இருக்கிறீகள். எஸ்எல்டிஎவ் மலைவிழுங்கிகள். தங்களுடைய ஏகாதிபத்திய விசுவாச யாவாரத்திற்காக அவர்கள் எதையும் செய்வார்கள்.மக்கள் நலன் என்பதெல்லாம் இவங்களுக்கு இறாத்தல் என்ன விலை என்பதுதான். சென்றமாதம்வரை தீவிர மகிந்தா அரசின் விசுவாசிகளாக அடியாட்களாக வலம்வந்த இந்த பேர் வழிகள் சமீபகாலங்களில் ரனிலோடு ஏற்படுத்திக்கொண்ட இரகசிய உறவு உடன்படிக்கை காரணமாக இலங்கை அரசை எதிர்க்க கிளம்பியுள்ளனர். இவர்கள் பணத்திற்காக பதவிக்காக அதிகாரத்திற்காக இலங்கை மக்களை எங்கையும் விற்றுவிடுவார்கள். டிசம்பர் மாத நடுப்பகுதியில் எஸ்.எல்.டி.எவ் ன் முக்கிய தலைகள் சில கொழும்பில் இரகசிய சந்திப்புக்களை ரனிலோடு நடாத்தியதை இங்கு பலர் அறிந்தே உள்ளனர்.நீங்களெல்லாம் வெளிநாட்டில் இருந்தும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டுதான் இன்னமும் இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள்.இவர்களின் திருவிளையாடல்கள் என்னமாய் நடக்கப்போகுதுபாருங்கள். இந்த திருவிளையாடல்களில் ஒன்றுதான் இங்கிலாந்தில் நடக்கும் போராட்டம் என என்னுகிறேன். இதெல்லாம் மக்களின் துன்பங்களுக்காக லசந்தா அவர்களின் மேல்கொண்ட அக்கறையினால் அல்ல இவற்றின் மூலம் பேரம் பேசும் யாவார அரசியலே எஸ்.எல்.டி.எவ் முக்கியஸ்.தர்களின் நோக்கமாகும். எஸ்.எல்.டி.எவ்ன் முழு உள்வீட்டு அரசியலை தெரிந்த பலருக்கு இது வியப்பைத்தராது. இவர்களுக்கு மகிந்தாவும் ஒன்றுதான் ரனிலும் ஒன்றுதான். அடிப்படைப் பிரச்சனை தங்களுடைய அதிகார யாவாரம் நடக்கவேண்டும். இங்கு எஸ்.எல்.டி.எவ் தலைகள் அடிக்கடி தென்படும். இவர்கள் சந்திப்புக்கள் உறவுகள் பார்த்தால் இவர்கள் பின்னணி இவர்கள் அரசியல் உங்களுக்கு தானாக புரியும். இனியொரு நடாத்துகின்ற நண்பர்கள் (நான் நினைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் )அவர்களுக்கும் இவையெல்லாம் கட்டாயம் தெரிந்திருக்கும். இதுபற்றி இவர்கள் எழுதலாமே. பயந்துவிட்டார்களோ?