இலங்கையின் இலவசக் கல்வி நோயாளியாகி இரத்தம் இல்லாமல் மரணப்படுக்கையில் சாய்ந்து கிடக்கிறது அதற்கு இரத்தம் வழங்கி மறு வாழ்வளிக்காமல் மரணப்படுகுழியில். கல்வித்துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி வராவௌ தலைமையில் அமைக்கப்பட்ட புத்தி ஜீவிகள் குழுவின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றக்குழு அறையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
1973, 74, 75 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இவ்வாறான நிலைமை தோன்றியதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் பயங்கரமான சூழல் உருவாகி நாட்டையே ஆக்கிரமித்தது.
பாடசாலை கல்வி பல்கலைக்கழக உள்ளீர்ப்பதற்கான இஸட் புள்ளிகள் தற்போது உயர் கல்வி வினாத்தாள்களில் கேள்விகள், பிழைகள், வினாத்தாள் திருத்த வேலைகளை விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு என கல்வித்துறையை அரசாங்கம் வேண்டுமென்றே சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
இலவசக் கல்வி இதயம் போன்றது. அதுவும் இயங்காமல் இருக்கின்றது. அந்த இதயத்தை இயக்க வைக்கும் டாக்டர்களை போலானவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் அவர்களும் இயங்கவில்லை.
மருந்து வகைகளை வழங்கி நோயை குணப்படுத்தாது தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இலவசக் கல்வியென்ற நோயாளி இரத்தம் இல்லாமல் மரணப் படுக்கையில் சாய்ந்து கிடக்கிறது. அதற்கு இரத்தம் வழங்கி மரணத்திலிருந்து பாதுகாக்காது மரணத்தில் தள்ளி விடும் நடவடிக்கைகளை அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் மேற்கொண்டு வருகிறது.
நீண்ட கால திட்டம்
கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியை ஒதுக்க வேண்டும் இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும் எனவே அதற்காக 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும்.
அதனை அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை ஆராய்வதற்காக எதிர்க்கட்சியின் தலைமையின் கீழ் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். இலவசக் கல்வியை பாதுகாத்து தற்போது தோன்றியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு கல்விமான்கள் பெற்றோர் மாணவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் அணி திரள வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வராவெவ
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி
கல்வித்துறை பிரச்சினையென்பது நாட்டுப் பிரச்சினை அனைத்து பிரஜைகளினதும் ஏன் பிறக்கப் போகும் பிள்ளைகளின் எதிர்காலப் பிரச்சினையாகுமென்றும் இங்கு உரையாற்றிய கல்வி சீர்த்திருத்த குழுவின் தலைவரும் முன்னாள் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான வராவௌ தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எனவே சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து செல்லும் கல்வித்துறை பிரச்சினைகளை இன்றைய அரசர்களுக்கு விளங்கும் விதத்தில் எடுத்துக் கூற மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மூடப்பட வேண்டுமா? உயர் கல்வி பரீட்சைகள் தேவையா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென்றும் வராவௌ தெரிவித்தார்.
புத்தசிலை நடலாம்…மசூதி உடைக்கலாம்… காணிகளை பிடுங்கலாம்… ஆனால் கல்வியில் கைவைச்சால் ஒட்டுமொத்த இலங்கையும் உனக்கு தீமூட்டும்.
All of us know that C. W. W. Kannanagara brought Free Education. I also learnt that the number of kids enrolling in the Grade I had started to go down.