இலங்கையில் இனப்படுகொலைய நடத்தி ஆயிரமாயிமாய் மக்களைக் கொன்றொழித்த பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வந்ததும் கொழும்பு 7 உயர்குடிகள் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தியுள்ளனர். சந்திரிக்கா குமாரணதுங்க, ரனில் விக்ரமசிங்க உட்பட பாரம்பரிய உயர்குடியினர் மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர்.
பாசிஸ்ட்டிடமிடுந்து மக்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படவில்லை. மாறாக இலங்கையின் உறுதியான ஏகபோக அரசுகளின் அடியாட்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதே தனது பிரதான கடமை என அறிவித்த இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மீண்டும் தான் ஜனாதிபதியாகப் போட்டியிட மாட்டேன் என்றார்.
ராஜபக்ச குடும்ப சர்வாதிகார ஆட்சியின் போது விலக்கி வைக்கப்பட்டிருந்த கொழும்பு உயர்குடிகள் மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்தன. கொலைகளை நடத்துவதற்காக கொழும்பு தயாரிக்கப்பட்டு தெருவில் இறக்கப்பட்ட ராஜபக்சவிற்குப் பதிலாக இலங்கையை இன்னொரு வகையில் சுரண்டிக்கொழுத்த கொழும்பு மேட்டுக்குடிகள் இழந்த ஆட்சியை மீட்டுள்ளன.
ராஜபக்சவின் தேர்தல் திட்டங்கள் முழுவதையும் அன்னிய நாடுகளின் ஆதரவோடு இறுதிக் கட்டம்வரை தகர்த்தெறிந்த கொழும்பு உயர்குடிகளின் அரசியல் கலாச்சாரமே மைத்திரிபால குறிப்பிடும் இலங்கையின் புதிய அரசியல் கலாச்சாரம்.
இந்த அரசியல் கலாச்சாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்கவும், அப்பாவிச் சிங்கள மக்களைச் சுரண்டவும் தன்னைத் தகவமைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது









தமிழர்களின் அரசியல் கலாச்ச்ச்சரம் 60 ஆண்டுகளிற்கு முன்பே கொழும்பு 7
இல் ஆர்ம்பிக்கப்பட்டு இன்றும் தமிழரை அரசியல் பாலைவனத்தில்
தவிக்கவிட்டுள்ளது.
இன்று கொழும்பு 7 இன் ஆதிக்கம் தமிழர் அரசியலில் காணப்படவில்லை . அண்ணாச்சி 50 வருடங்களுக்கு முன்னாலேயே நிக்கிறீங்க போல .
ஒரே ஒரு விதி விலக்கு சுமந்திரன். அவரையும் கூட உங்களைப்போன்ரவர்கள் அவரை குறை சொல்ல முடியாது .
எனெனில் பல சந்தர்ப்பங்களில் மன்னனது குரலும் கொழும்பு மேட்டுக்குடி சுமந்திரனது குரலும் ஒன்றாகவே ஒலிக்கிறது
60 ஆண்fடுகளிற்கு முன்பு தொடங்கியதன் விளைவுகளே இன்று தமிழர்
அனுபவிக்கின்றார்கள். இது கூட சொல்லியா புரிய வேண்டும்