இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகாரிகள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸின் இராஜாங்கச் செயலாளரிடம் ஜூன் மாதம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெப் அன்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை செப்டம்பர் 21ம் திகதி காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் குறித்த அறிக்கை இன்னமும் தயாரிக்கப்பட்டு வருகின்றமையினால் அதனை காங்கிரஸில் சமர்க்க முடியாது போனதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான சர்வதேசப் போர்க் குற்றங்களை மறைப்பதற்காக விடுதலைப் புலிகள் பாரியளவிலான போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கத்தினால் பிரசாரப்படுத்தப்பட்டது.
எனினும், இதுகுறித்து அமெரிக்கா தகவல்களைக் கோரியுள்ள நிலையில், அந்தப் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரங்களைத் தயாரிக்க முடியாதுள்ள, இலங்கை அரசாங்கம் தற்போது குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதை இழுத்தடிப்புச் செய்துவருவதாகத் தெரியவருகிறது.