இலங்கையில் அப்பாவி மக்களை பலி கொள்ளும் போரினை உடனே நிறுத்த வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இரு சங்கங்களின் செயலாளர்கள் எஸ்.கண்ணன், கே.எஸ். கனகராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இலங்கைப் பிரச் சனைக்கு போர் மூலம் தீர்வு காண இயலாது. சாவின் விளிம்பிலுள்ள அப்பாவி தமிழ் மக்களை பாதுகாத்திடவும், தமிழர் பிரச்ச னைக்கு உரிய தீர்வு கண்டிடவும் விடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவமும் உட னடியாக போரினை நிறுத்தி ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு தமிழர் களுக்கு அதிக அதிகாரத்துடன் கூடிய சுயாட்சி அந்தஸ்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதனை தாமதப்படுத்துவது தமிழர் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் உரிய தீர்வு காண்பதை தடுப்பதாகவே அமையும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை உடனே துவங்கிட இலங்கை அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்துகிறது.
மத்திய காங்கிரஸ் அரசாங்கம் ராஜிய உறவுகளை பயன்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.