“இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தீர்வின் தேவை குறித்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்” என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சினை தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே பான் கீ மூன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எனது அரசியல் பணிப்பாளரை அனுப்பியுள்ளோம். மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு ஒரு குழுவை நேரம் வரும் போது அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பாக நியூயோர்க்கிற்கு இரு வாரங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி பிரதிநிதியை நான் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் தொலைபேசியூடாக உரையாடியிருந்தேன் ” என்றார்.