இந்தியாவைச் சூழ உள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. உள்கட்டுமானத் துறை, தொலைத் தொடர்பு, சுற்றுலாத் துறை, மின்னுற்பத்தி போன்ற துறைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. ஒன்றை மறந்துவிடக்கூடாது, இந்தியாவின் உள்ளேயும் இதே வியாபாரங்களில் சீனாவின் ஆதிகம் உள்ளது.
சிறிய மற்றும் மத்தியதர வியாபார நிறுவனங்களுக்கான கடன்கள் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுடன சீனாவின் வியாபாரம் 2015 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்ப்படுகின்றது.
இலங்கை அரசியலில் இந்தியாவுடன் மோதிக்கொண்டு இவற்றைச் சீனா இழக்க விரும்புமா என்றால் நான் அப்படிக் கருதவில்லை. இதைவிட நுண்ணியமானதாகவே அது அமையும்.
இப்படிக் கூறியிருப்பவர் இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிகரன்.
இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை நியாயப்படுத்தும் ஹரிகரன் இந்த அரசியல் யதார்த்தைத்தையும் போகிற போக்கில் கூறியிருக்கிறார். கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரவர்க்கத்தின் குரலாக எப்போதும் ஒலிக்கும் ஹரிகரனின் குரலில் சில உண்மைகளும் அவ்வப்போது ஒலிப்பதுண்டு.
இலங்கையில் சீனா தலையிடுகின்ற அத்தனை விடையங்களிலும் இந்தியாவிலும் தலையீடு செய்கின்றது. ஹரிகரன் கூறியவை தவிர இந்திய அரசியலை நிர்ணயம் செய்யும் டாட்டா, அம்பானி போன்ற நிறுவனன்களின் பிரதான வியாபார மையமாக சீனா திகழ்கிறது.
இவை அனைத்தையும் இழந்து இலங்கை என்ற சுண்டெலி நாட்டுக்காக சீனாவும் இந்தியாவும் சண்டைபோட்டுக்கொள்ளும் என எதிர்பார்ப்பது கேலிக்குரியது.
இந்தியாவின் கொலை அரசியலுடன் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் கைகோர்த்துக்கொள்வதற்காக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாடுகளைக் கையாள்கிறோம் பேர்வளிகள் என்று பலர் உருவாகியுள்ளார்கள். மக்களை அடி முட்டாள்களாக்கும் இவர்கள் இலங்கையில் இன அழிப்பை நடத்திய இந்தியாவை மீண்டும் இழுத்துவர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
வலுவிழந்து மரணக்கிடங்கிலிருக்கும் 13 வது திருத்தச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதா இல்லையா என்று வெள்ளிபார்த்து இவர்கள் விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கும் போதே இலங்கையில் இனச் சுத்திகரிப்பு தங்கு தடையின்றி நடைபெறுகிறது.









Who is this Colonel Hariharan anyway? We must take his advice with a pinch of salt.