இலங்கையில் யுத்தத்தை நடத்தி இனவழிப்பை மேற்கொவதற்கு மகிந்த ராஜபக்சவை நியமித்த மேற்கு ஏகபோக அரசுகள் அதற்கு எதிரான அணியையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன. புதிய புரட்சிகர மக்கள் சக்திகள் உருவாகிவிடக்க் கூடாது என்ற காரணத்தால் யுத்ததை நடத்திக்கொண்டிருந்த மேற்கு நாடுகள் தனது அடியாள் அமைப்புக்களான மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ,நா போன்றவற்றின் ஊடாக யுத்ததிற்கு எதிரான தலைமையைக் கையகப்படுத்திக்கொண்டன.
இவற்றிற்கு எதிராக மக்கள் தலைமை தோன்ற வேண்டும் என்று கூறியவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர்.
புதிய தலைமை தோன்றாமல் பிரபாகரனது பெயராலும், புலிகளின் அடையாளத்தாலும் மற்றொரு பகுதி மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது. இடதுசாரித் தலைமைகள் தோன்றாமலிருக்க முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுசாரி அமைப்புக்கள் ஏகாதிபத்தியங்களின் துணையோடு தோற்றுவிக்கப்பட்டன.
முதலில் இனப்படுகொலையை நடத்துவது, பின்னர் இனப்படுகொலைக்கு எதிரானவர்களைத் தனது பிடிக்குள் கொண்டுவருவது, இறுதியாக இனக்கொலைக்குத் தலைமை வகித்த ராஜபக்சவை அழித்து முழு நாட்டையும் சுரண்டுவது என்ற படிமுறைகளின் இறுதிக்கட்டமே இலங்கையில் நடைபெறும் இன்றைய தேர்தல்.
இலங்கையிலும் புலம்பயர் நாடுகளில்ம் உதிரிகளாக உருவாகிவந்த புரட்சிகரக் கூறுகள் அனைத்தும் பாராளுமன்றச் சகதிக்குள் இழுக்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் இன்று மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபாலவும், புரட்சிகரக் கூறுகளுக்கு எதிராக நாகமுவ போன்றவர்களும் ஏகாதிபத்தியங்களால் களமிறக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற அரசியலுக்கு வெளியில் எதுவும் கிடையாது என்ற மாயையை இலங்கையில் அதீத முக்கியத்துவம் வழங்கப்படும் இத் தேர்தல் ஏற்படுத்துகிறது.
இனப்படுகொலையைப் போர்க்குற்றமாக்கி, இன்று மைத்திரிபால ஆதரவாளர்களின் உரிமையாக்கிவிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையும் இப்போது தேர்தலில் தலையிடுகிறது. பாராளுமன்ற ஆட்சிமுறையும் நவகாலனித்துவ ஜனநாயகமும் சரியானது என்று கூறும் மன்னிப்புச் சபை நாளை பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரினாலும் வியப்பில்லை.
ஜனவரி 8 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியலில் பங்குபெறுவதற்கான மக்களின் உரிமை மதிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகளுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது என்பதற்கு இதைவிட வேறு ஊதாரணங்கள் தேவையில்லை.