17.01.2009.
Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ – ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற கண்டனப் போராட்டத்திலேயே இலங்கை அரசின் மீதான கடுமையான கண்டனம் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற்இ கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல்இ எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கும் தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது தெரிந்ததே.
சண்டே லீடர் அசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உட்பட இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்! ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ் சிங்கள் முஸ்லிம் மலையக மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! சாதாரண மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்! ஏனைய சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும்! என்பவற்றை முன் வைத்து இப்போராட்டம் நடாத்தப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தில் தமிழர்கள் அல்லாத பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இனங்களுக்கு இடையேயான நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பினரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். ‘நாங்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்தைக் கண்டித்து இடம்பெற்ற போராட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட பதாகைகளை இப்போராட்டத்திற்கும் எடுத்து வந்தோம். அன்றும் சரி இன்றும் சரி மகிந்த அரசு தனது பாசிசப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது’ என்று அவ்வமைப்பின் உறுப்பினர் சபா நாவலன் தெரிவித்தார். ‘ஆறு மாதங்களுக்கு முன் அந்த வசனங்களை எழுதும் போதிருந்த மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் இன்னும் இன்னும் மிகுதியாகிச் சென்று இன்று லசந்த போன்றவர்களின் கொலைகளில் முடிந்து உள்ளது என்று தெரிவித்தார் சபா நாவலன்.
இக் கண்டன போராட்டத்தில் ரி பி சி பணிப்பாளர் ராம்ராஐ,தமிழ் ஜனநாயக காங்கிரஸ் ஐயதேவன், சிறீலங்கா முஸ்லீம் போறம் நஐ முகமட் , மசுரா, தமிழ் தகவல் நடுவம் வரதகுமார் , சொலிடாரிற்றி போர் பீஸ் சாள்ஸ், மற்றும் எஸ் . எல் .டி. எப் முதலானோர் கலந்துகொண்டனர்.
அங்கு வந்திருந்த எஸ்எல்டிஎப் முக்கியஸ்தர் ஒருவர் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனலின் பனரை கழற்றி அநாகரீமாகச் செயற்பட்டதாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் அமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை சொலிடாரிற்றி போர் பீஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
‘Stop! War on Journalists’ என்ற பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, சுயாதீன ஊடக இயக்கம், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஆகிய அமைப்புகள் இப்பிரசுரத்தை வெளியிட்டு இருந்தன.
//ஆறு மாதங்களுக்கு முன் அந்த வசனங்களை எழுதும் போதிருந்த மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் இன்னும் இன்னும் மிகுதியாகிச் சென்று இன்று லசந்த போன்றவர்களின் கொலைகளில் முடிந்து உள்ளது //
ஆறு மாதத்திற்கு முதல் எஸ்.எல்.டீ.எப் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நிராகரித்தபோது பாண்டியன் போன்றவர்கள் குரலெழுப்பினார்கள். இதே கோசங்கள் எழுதப்பட்ட இனக்களிடையே சமத்துவத்துக்கான முன்னணி பாவனை செய்த பனர்களையே எஸ்.எல்.டி.எப் இரும் காவிய படிநின்றதை அவதானித்த பலர், இதே எஸ்.எல்.டி.எப் குழு அரசாங்கத்தை ஆதரித்து பாசிசத்தை வளர்த்து விட்டதால் தான் இன்று லசந்தவும் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்தனர். லசந்த கொல்லப்பட்டதற்கு இவர்கள் போன்றோரும் மறைமுகமான காரணங்களாக அமைய, சமத்துவதுக்கான முன்னணியின் அதே கோசங்களுடன் வந்த எஸ்.எல்.டி.எப் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியது கேலிக்கூத்தாக இருந்ததாகக் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தக் கேலிக்கூத்தின் உருவேறிய உச்ச வடிவமாக நிர்மலா ராசசிங்கம் கொடி பிடுங்கியதும் அமைந்தது. போராட்டத்துக்கு ஆதரவாக வந்த வெள்ளைக்கார அமைப்பின் கொடியைப் புடுங்கி தனது தாதாத் தனத்தை வெளிப்படுத்திய நிர்மலா, அந்தக் கொடியைத் தனது சட்டைப் பைக்குள் செருகிக் கொண்டார்.
எதிர்ப்பு நிகழ்வுக்கு வந்திருந்த வெள்ளைக் காரர்கள் திகைத்துப் போனதுடன், சண்டை வரலாம் என்ற பயத்தில் நிகழ்வுக்கு முதல் வெளியேறி விட்டார்கள்.
இநத நிலமைகளை அனுமானித்து தான் பல நபர்கள் அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை.அதில் அடியேனும் அடங்குகிறேன்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பினரின் (கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல்) கொடியை பிடித்து கிழித்தெறிந்தற்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? ஐயாமாரே கொடிகிழித்ததோடு விடயம் முடிந்துவிட்டதற்காக சந்தோசப்படுங்கள். முன்னாள் புலிகள் அராஐகத்தை விட்டொழித்துவிட்டதாக தப்புக் கணக்குபோடுகிறீர்கள்.கவனம்.” யாழ் வேளாள மையவாத ஆணாதிக்க மேலாண்மை ” ஆண்களிடம் மாத்திரம்
அல்ல நிர்மலா ராசசிங்கம் போன்ற மேட்டுக்குடிக பெண்களிடமும் தாரளமாக உள்ளதென்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. நிர்மலா ராசசிங்கம் போன்றவர்களின் அரசியல் சமூக செயல்பாடுகளை வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வது அவசியம். இவ்வாறன ஆய்வுகளும் விமர்சனங்களுமே இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த உதவும். காலத்திற்குக் காலம் இலங்கையின் அதிகார வர்க்கத்திற்கு துணை நின்று இலங்கை இன முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களுக்கு அநீதி இழைத்து அவர்களின் துயரங்களில் சுயநல அரசியல் நடாத்திய யாழ் மேட்டுக்குடி அரசியல் பாரம்ப ரியத்தின் இன்றைய தொடர்ச்சிதான் நிர்மலா ராசசிங்கம் போன்றவர்களின் இன்றைய இந்த நடத்தைகளாகும்.இவற்றை அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தாமல் வெறுமனவே குடுமிச் சண்டை பிடித்துத்துக்கொணடிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. சற்று யோசியுங்கள்.
கோசிமீன் நீங்கள் சொல்வது சரியானது இலங்கையின் இனப்பிரச்சனை ஏறத்தாழ 1921ம் ஆண்டிலிருந்து 88 வருடங்களுக்கு மேலாக நிலவிவருகின்ற பிரச்சனை எனலாம். பிரச்சனையை தீர்ப்பதற்கு காலத்திற்குக் காலம் பல்வேறு முயற்ச்சிகள் எடுக்கப்பட்டன.பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.ஆனால் இம் எல்லா முயற்ச்சிகளும் தமிழர் தரப்பிலுள்ள உயர்வர்க்கத்தினரின் சொந்த சுயநல அரசியலால் தோல்வியுற்றன.ஆனால் தமிழர் தரப்பு உயர்வர்க்கத்தினர் சொந்த நலன்களை பூர்த்தி செய்வதில் அதிகார வர்க்கத்தோடு வர்க்க உறவுகளை பேணிக்கொண்டனர். சேர்.பொன். அருணாசலம் தொடங்கி இங்கிலாந்து நிர்மலா வரை இதுதான் கதையாகிறது. இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏன் போதியளவு வெற்றியைத்தரவில்லை என்பன போன்ற விடயங்களை ஆராய்வதற்கூடாக சேர் பொன் அருணாசலம் தொடங்கி நிர்மலாவரை புரையோடிப்போன நீங்கள் கூறுகின்ற மேட்டுக்குடி அரசியலின் துரோகத்தை பேரம்பேசும் அரசியலை அம்பலப்படுத்த முடியும் எனவே இவ்வரலாற்றினை தனிநபர் தாக்குதல் இன்றி ஆராய்வது அவசியமாக உள்ளது.
வரன். கொழும்பு
மேட்டுக்குடி வர்க்கங்கள் செய்த பிழைகள் நிறையவிருக்கு. ஆனால் அதுக்காக நிர்மலாவை அதுக்குள்ளை சேர்க்க வேண்டாம். அவங்க மேட்டுக்குடி வர்க்கமில்லை. மேல்தட்டு……… …..வர்க்கம்.
உந்த உயர் ஸ்தானிகர் ஆலயத்திற்குள்ளேயே போய் மகிந்தாவோட கட்டிப் பிடிச்சு படம் எடுத்த நிர்மலா -ராகவன் கோஸ்டடி இப்ப என்னடா என்றால் மகிந்தாவிற்க எதிராக கொடி பிடித்தவர்களாம் ஆருக்கு விடுறாங்கள் கயிறு எங்க நிர்மலா வெளியே வந்து சொல்லட்டும் பார்ப்போம்.
இவர்களின் நொக்கம் ஒன்றும் தமிழ் மக்கள் அல்ல.
எஸ்சில் இணையத்தளததில் ராகவன் நர்மலா கெபஸ்டியினர் நாம் செய்ததாக ஒரு படம் காட்டியுள்ளார் அதில் இவர்கள் கூட்டிப் போவர்கள் குளிரோடிப் போயிருக்க சி டபிள்யு ஜ காரர்கள் உரத்த சத்தம் போட அதை படம் பிடித்து கொண்டுவந்து தாங்கள் செய்ததாக படம் காட்டும் வித்தைகளை புலிகளழல் இருந்து வந்தவர்கள் தாம் இன்னும் புலியின் குணங்களை விட்டுவிடவில்லை என நன்றாக தெரிவிக்கிறார்கள். வீடியோவை நன்கு அவதானிக்கவும். இவர்கள் சிடபிள்யு செய்யும் நாளை தெரிவு செய்ததே தாங்கள்(புலிகள்) மற்றவர்கள் செய்வதை கையாக் பண்ணவே – இந்த ராகவன் கோஸ்டி ஏன் கட்டிப்பிடித்த மகிந்தாவை கொஞசம் இறுக்கி கட்டிப்பிடித்து லசந்தாவின் கொலையாளியை கோட்டுக்கு கொண்டுவரலாமே.
பெரும் பகிடி எஸ்சிலுக்கு ஒரு பெரிய செய்தியாவது கிடைச்சதே யாருடைய வீடியோவை யார் தந்தது என்றெல்லாம் யோசிக்காமல் ஓட்டம் காட்டுகிறார்கள் சிந்திக்க வைக்கப்படும்.