இந்த வருட முதல் மாத காலப்பகுதியினுள் 597 பேர் அகதிகள் தூதுவராலயத்தின் உதவியுடன் தமது முன்னைய இருப்பிடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை மாவட்டத்திலேயே குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, மன்னார் மாவட்டத்தில் சுமார் 400 பேர் தன்னிச்சையாகவும், தமது பழைய இருப்பிடத்திற்கு சென்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தூதுவராலயம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர கடந்த 2009 ம் ஆண்டு மே மாத மோதலி;ன் பின்னர் இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த 3 ஆயிரத்து 200 இலங்கை அகதிகள் நாடுதிரும்பவும் ஐக்கிய நாடுகளின் அகதிக்கான அமைப்பு துணை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதுவராலயத்தினால், அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களுக்கு அமைய கடந்த 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியினில் 1 லட்சத்து 46 ஆயிரம் அகதிகள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 64 நாடுகளில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களில் 32 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ள 112 முகாம்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 32 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த கணிக்கத் தக்க புள்ளிவிபரம் ஒன்றை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.