இலங்கை தமிழர்களுக்கு நிதி மற்றும் பொருளுதவி செய்யுமாறு தமிழக மக்களை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். உதவிகளை வழங்குவோர் தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவற்றை வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி உதவி செய்ய விரும்புவோர் SRILANKAN TAMILS என்ற தலைப்பில் காசோலைகள் அல்லது வரைவோலைகளை தலைமை செயலாளர், தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், சென்னை } 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் முதல்வர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இந்தியா 800 டன் உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இந்த பொருட்களை சேகரிக்க முதல்வர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.