இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க கோரி காரைக்காலில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 65 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் 74 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்களுக்கு இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 139 பேரையும் விடுவிக்க கோரி காரைக்கால் மீனவர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட நாகை மாவட்ட மீனவர்களில் 34 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 7ந் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற மீனவர்கள் திரிகோண மலையிலுள்ள இலங்கை கடற்படை முகாமில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களில் இலங்கை கடற்படையின் அடுத்தடுத்த தாக்குதல் மற்றும் சிறைபிடிப்புகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை வளங்களை நவீன படகுகள் மூலம் அபகரித்துச் செல்வது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றது என்பது உண்மை. அதே வேளை தமிழக மீனவர்களின் எல்லையை நிர்ணயிப்பதும் அதற்குரிய விதிமுறைகளை உருவாக்கிக்கிக்கொள்வதும் ஒன்றும் கடினமான செயல்பாடல்ல.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிக் கடல்வளங்களை அபகரித்து செல்வதை இந்திய அரசும் இலங்கை அரசும் விரும்புகின்றன.
சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழக மற்றும் வட கிழக்கு மீனவர்களின் பங்கு 70 களிலிருந்தே காணப்பட்டது. இந்த இரு மீனவ சமூகங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன.
கைது செய்தலும் , உண்ணாவிரத ஏற்பாடும் இந்திய சிறீலங்க உளவு நிறுவனங்களின் சதி என்றே நான் கருதுகின்றேன்.
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டங்களில் புதிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழகத்தில் போராட்டங்களும் தீடிரென முழைப்பதும் மானில அரசி மௌனமாய் இருப்பதும் பல தடவைகள் நடந்துள்ளது , சில உதாரணங்கள் ,
2012 இல் முருகன் விடுதலை வழக்கு , பெரியாறு அணை , தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு , சாதி ஒழிப்பு இப்பிடி எல்லா முக்கிய காலகட்டத்திலும் நடக்கு .செப்டம்பருக்குள் திருமுருகன் காந்தியும் சீமானும் நிச்சயம் ஏதோ ஒரு கரகம் ஆரம்பிப்பினம் . பந்தயம் கட்ட எவராவது ரெடியா?
திடிரென உருவாக்கப்படும் இந்த போரட்டங்கள் தொடாரமல் குறிப்பிட்ட சம்பவ முடிவுடன் அனைந்து போவதை அவதானிக்க முடிகின்றது .
பதட்ட சூழ்நிலை கையாளும் முறைகளில் சம்பந்தப் பட்டோரை வேறு காரியங்களுக்கு இழுத்து செல்லுதல் என்பது முக்கியமானது .
. இதை இந்திய சிறீலங்க அரசுகள் தனித்தும் இணைந்தும் செய்யும் . மறுக்க முடியாத போர்தந்திரம் இது . சிம்பிளா சொன்னால் பின் வேலிக்கை கருவாட்டுத் துண்டைப் போட்டால் வீட்டு நாய்கள் கருவாடோடை பின்னுக்கு நிக்க முன் பக்கத்தாலை “காரியத்தை ” முடிக்க வேண்டியது தானே!!!
There is an Indian Consulate General in Jaffna. So, there is easy access to the diplomatic channels to make use of to solve problems. This is now a recurrent problems. All are experienced well enough to hande matters in a very professional way.