இலங்கைக் கடற்படையினருக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலியில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்து டி.கே. ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச் சந்திப்பின் போது இந்திய அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் நான்காண்டு தொழில்நுட்பப் பட்டப்படிப்பை இலங்கைக் கடற்படைக்கும் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக இலங்கையின் கடற்படைக்கு என பிரித்தானிய அரசு ஆயுதங்களை விற்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அவுஸ்திரேலிய அரசு இரண்டு கடற்படைக் கப்பல்களை இலவசமாக வழங்கியிருந்தது.
இலங்கையின் இனப்படுகொலை இயந்திரமான கடற்படையைப் பலப்படுத்தி இந்துசமுத்திரப் பிராந்தியத்தை இராணுவ வலயமாக்குவது ஏகபோக வல்லரசுகளின் நோக்கமான என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பவித் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களைக் கூட ஆயுதபலத்துடன் கொன்றொழிக்கும் இலங்கைக் கடற்படைக்கு இந்திய அரசு பயிற்சி வழங்க முன்வந்தமை குறித்த அதிர்வலைகள் தமிழ் நாட்டில் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
அவுஸ்திரேலிய இந்துசமுத்திர கடலை கட்டுப்படுத்த இலங்கைக்கே தகுதி உண்டு அகதிகளை கட்டுப்படுத்த கப்பல் கொடுத்தது நல்ல சிந்தனை. மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என்பது அரசியளாள் லாபம் அடையும் அரசியள் யாபாரிகளின் தந்திரம் .ஆகையாள் மீடியாக்களை திசை திருப்பும் அரசியள் மனேபாவம். வெளிநாட்டிள் இப்படிப்பட்ட ஈனச்செயள்கள் நடக்கின்றதா..? எத்தனை நாடுகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளது .மக்களுக்கு மீண்கள் மலிவாகவும் கிடைக்கிறது அனைத்தையும் நாம் முட்டாள் தனமாக சிந்திக்க கூடாது ….அதற்காக என்னை துரோகி என்று பட்டம் சுமத்தவேண்ட்டம் சிந்திக்க வேண்டிய கடமை உங்களுடையதும் கூட .இலங்கை ரானுவத்துக்கு சீனாவிலோ.பாகிஸ்தானிலோ.அமரிக்கவிலோ.ஈரோப்பிலோ .அவுஸ்திரேலியவிலோ.கொடுக்கப்பட்டாள் உங்கள் மனம் ஏர்க்குமா……?