இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள், அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தர இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.
இலங்கை எதிர்ப்பாக்கும் அனைத்து உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார்.