இலங்கையில் அரசியல் கைதிகள் கொசுக்கள் போல அடித்தே கொல்லப்படுகின்றனர். சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளோடு இணைந்து பல் தேசியக் கம்பனிகள் அப்பாவி மக்களின் நிலங்களைப் பறித்துக் கொள்கின்றன. சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுவடுகள் இடம் தெரியாமல் அழிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இடையில் சில விடயங்களில் முரண்பாடு காணப்பட்ட போதிலும் இரு தரப்பு உறவுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு பதவியைப் பொறுப்பேற்ற போது பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை சில ஆயிரமாக குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது தொடர்பிலும் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இன்னும் பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டிய நிலமை காணப்படுவதாகவும், அதற்கான உதவிகளை வழங்கத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பத்தை பகிர்ந்து தருமாறு குரங்கிடம் பூனைகள் கொடுத்துக் காத்திருந்த கதையை, அரங்கேற்றிப் பார்ப்பதற்கு அமெரிக்கா இலங்கையில் மேடைபோடுகின்றது. மகிந்த ஏமாறும் பூனையல்ல அதிலும் காட்டுப்பூனை. ஆப்பத்துடன் குரங்கையும் விழுங்கி ஏப்பம்விடும் வல்லமை கொண்டதா பார்க்கலாம்.
Here we go again. The President talked about the Electric Chair and that is only in New York, USA. The only Federal Penitentiary for capital punishment is in Terre Haute, Indiana, USA. Dr. Bill at 812-237-2418.