அப்பாவித் தமிழக மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும், ஏமாற்றுவதற்கும் தேர்தலில் வாக்குப் பொறுக்கிக் கொள்வதற்கும் தமிழக இந்திய அரசுகள் போடும் நாடகத்தை மக்கள் ஓரளவு புரிந்துகொண்டுள்ளார்கள். இந்தத் தொடர் நாடகங்களின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இலங்கை சிறையில் உள்ள 90 மீனவர்களை மீட்பதற்கு தூதரக அதிகாரிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இலங்கை கடற்படையின் சட்டவிரோத கடத்தல், கைது குறித்து தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் விலங்குகள் போல சிறைவக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை விடுவித்து சுதந்திரமாக வாழ விடுமாறும், குறைந்தபட்சம் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கும் குழந்தைகளுக்குப் குடியுரிமை வழங்குமாறும் மாணவர்கள் தமிழகத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜெயலலிதாவிற்கு, மூவர் தூக்கு விவகாரத்தில் அரசுக்கு ஆதரவளிக்கும் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதுவது ஒரு தேர்தல் கால பொழுதுபோக்கு.
ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த 70 மீனவர்கள் இலங்கை சிறையில் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது குறித்து நான் ஏற்கனவே 17.06.2013, 08.07.2013, 01.08.2013 மற்றும் 02.08.2013 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு உயர்மட்ட தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஏழை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இலங்கை சிறையில் தவிக்கும்போது மற்றொரு சம்பவம் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 20 மீனவர்களை இலங்கைக் கடற்படை கடத்தி சென்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை அத்துமீறி கடத்தி சென்றிருக்கிறார்கள். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 5 எந்திர படகுகளில் கடந்த 3-ம் தேதி மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்களை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் 04.08.2013 அன்று காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகிவரும் வேதனை சம்பவங்கள் குறித்து தங்கள் கவனத்திற்கு தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் அப்பாவி தமிழக மீனவர்களின் நிலையை மத்திய அரசு கண்டுக் கொள்ளாததால் இலங்கைக் கடற்படையினரின் மிருகத் தனமான தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது.
மத்திய அரசின் பாராமுகம் தமிழக மீனவர்களை மிருகத்தனமாக நடத்துவதற்கான தைரியத்தை இலங்கை கடற்படையினருக்கு அளித்திருக்கிறது. தொடர்ந்து இலங்கை அரசால் கடத்தல், கைது மற்றும் சிறை போன்ற அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்களிடையே பதற்றமும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மட்டுமின்றி இலங்கை மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை சமூக விரோதிகளாலும் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகிவரும் மீனவர்கள் நெருக்கடியான நிலையில் மத்திய அரசு தங்களை கைவிட்டுவிட்டது என்றும், தங்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நட்பில்லாத நாட்டின் தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடரும் நிலையில் திறமையான தூதரக நடவடிக்கை மூலம் அதனை சமாளிக்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களை நாங்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் என்று கடுமையான எச்சரிக்கையை தூதரக வழியாக இலங்கை அரசுக்கு விடுக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இப்பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இலங்கை சிறையில் உள்ள 90 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தாங்கள் பாரம்பரியமாக பாக். ஜலசந்தியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பதற்கு இலங்கை அரசுடன் தூதரக அளவில் உடனடியாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
கோடாநாட்டில் இருந்து கொண்டு டில்லிக்கு கடிதம் எழுதும் முன்னை நாள் கொள்கை பரப்பு செயலாளர் ஏன் சற்று தமிழ்நாட்டின் வட-தெற்கு கரையோரம் சென்று தான் அன்பாக நேசிக்கும்… மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு… அவர்களை இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்கலாமே…???
பாரம்பரியமாக மீன்பிடிப்பவர்கட்கு தெரியாத கடல் எல்லை இல்லை. இதற்க்கெல்லாம் GPS தேவையில்லை.
போர்க்காலத்தில் இலங்கை மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கைக் கடல் பரப்பில் மீன் பிடித்து (அள்ளி) ருசி கண்டவர்கள்… தற்போது தொடர்ந்து இலங்கை மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.
அதுசரி தற்போதும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கள்ளக்கடத்தல் பொருட்கள் பிடிபடுவதாக செய்திகள் வருகின்றன…
இவற்றை யார் செய்கிறார்கள்…???
நில ஆக்கிரமிப்பு… குடியேற்றம் என்று அறிக்கை விடும் சுரேஷ், மாவை போன்றவர்களோ… கூத்தமைப்பில் தொங்கும் மற்ற வௌவால்களோ ஏன் இந்த மீனவர் பிரச்சனையில் தலையிட்டு தீர்த்து வைக்க முயலவில்லை.
இவர்கள்தான் இப்போ வாக்கு கேட்டு தமிழ் மாகாண சபை அமைத்து தமிழர்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கப்போகிரார்கள்..???
பிற்குறிப்பு:
இன்று தமிழ்நாட்டு மீனவர்களினால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் (முக்கியமாக நாகர்கோவில்… பருத்தித்துறை… தொடக்கம்… மாதகல்… தலைமன்னார் வரை) அன்று இல்லாவிட்டால்… இன்று கூத்தமைப்பில் கூத்தடிக்கும் குறுநில தாதாக்களாக இருந்த ஆயுத அமைப்புகளோ… கூத்தட்டிக்க கூத்தமைப்பை உருவாக்கிய வன்னிநில சிற்றசனோ கடல் கடந்து இருக்கமுடியாது…!!!
நன்றி கெட்டவர்கள்!
தமிழ்நாட்டிற்கு செல்பவர்கள்… இந்திய அரசியல் வாதிகளுடன் டில்லியில் தமது இருப்பை காப்பாற்ற பேச்சுவார்த்தை நடாத்துபவர்கள்…தொடரும் இலங்கை-இந்திய மீனவர் பிரச்சனையையை தீர்க்க முயற்சி எடுக்காதது ஏன்…??? (முக்கியமாக இன்று இவர்கள் வாக்கு கேட்கும் வடக்கு மக்கள்)
இவர்கள் தான் மக்களைப் பிரதிநிதிப் படுத்தப் போகிறார்கள்…!!!
இது வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை…!!!
இவர்கள் தான் மக்களைப் பிரதிநிதிப் படுத்தப் போகிறார்கள்…!!!
இதுதானா அரசியல் ஜனநாயகம்…???
Currently there are 114 Indian fishermen and 21 fishing boats in Sri Lankan custody.
Sri Lankan High Commissioner Prasad Kariyawasam was summoned to the South Block on Wednesday and a formal démarche made against the large number of Indian fishermen languishing in Sri Lankan custody for periods up to two months.
The démarche reflected India’s exasperation over the absence of any movement on the release of the fishermen despite several high-level interventions.
It was also pointed out that the delay in their release not only deprives them of their livelihood but also causes anxiety to their family members. Currently there are 114 Indian fishermen and 21 fishing boats in Sri Lankan custody.
An official source pointed out that the demarche follows the issue being previously raised with Sri Lankan Minister of Economic Development Basil Rajapaksa during his visit to New Delhi in July and by National Security Advisor Shiv Shankar Menon during his Sri Lanka visit the same month. And while the démarche was being served in New Delhi, Indian High Commissioner Yash Sinha raised the matter formally with the Sri Lankan Foreign Ministry in Colombo on Wednesday.
The official said the Consulate-General of India in Jaffna has been providing them with basic necessities and medical attention whenever required.
கருணாநிதி பாணியில் ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியதுதான்… டில்லியின் South Blockஇற்கு இலங்கையின் உயர் இஸ்தானிகர் அழைக்கப்பட்டு இலங்கையில்… இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் கைது செய்யப்பட்ட 114 மீனவர்களையும்… 21 மீன் பிடிப் படகுகளையும்… விடுதலை செய்யும்படி… கோரிக்கை விடப்பட்டது.
தற்போது பசி எடுக்கும் வரை உண்ணாவிரத புகழ் கருணாநிதி, தமிழக உடன்பிறப்புக்களை சோர்வடையாமல் உசுப்பேத்தி… கட்சியை உயிருடன் வைத்திருக்கும் நோக்கமாக… செய்தித்தாள்களில்… தொலைகாட்சிகளில் தன்னை செம்மொழித் தமிழனாக காட்டுவதர்க்கு… “இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள ”காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும், TESO அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.” எனவும்…
சென்னையின் காலநிலை நன்றாயிருக்கும் நிலையில்…தனது ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தவுள்ளார் எனவும் அறியப்படுகிறது.
இலங்கைத் தமிழர்…. தமிழக மீனவர்…. மேல் உண்மையில் அக்கறை இருந்தால் … நேர்மையாக அர்பணிப்புடன் செயல்பட்டால்… இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திட… தமிழக மீனவர்களை பாதுகாத்திட தமிழ்நாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்துபவர்கள்… தமிழக மீனவர்களை பாதுகாத்திட பாரம்பரியமாக கடல் தொழில் செய்யும் மீனவர்களை எல்லை தாண்டி இலங்கைத் தமிழர் மீன் பிடிக்கும் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுரை கூறலாமே…???
இலங்கைத் தமிழர் மேல் அதீத அக்கறை கொண்டவர் தமிழக அகதி முகாம்களில் வாடும் உடன்பிறப்புக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாமே…????
எல்லாம் மனம் இருந்தால் இடமுண்டு…!!!
தற்போது இவர்களின் வழியை எமது அரசியல்வாதிகளும் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்!
எதிரிக்கு எதிரி நண்பன்; நண்பனுக்கு நண்பன் எதிரி….
எல்லாம் பிழைப்பு அரசியலாகிவிட்டது… ஹ்ம்ம்….