மனிதாபிமான உதவிகள் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் நேரடியாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை என அறிவித்துள்ளது.
மனிதாபிமான உதவிகளாக வழங்கப்பட்ட நிதிகளை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தியதாக பிரித்தானிய எதிர்க்கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்நடவடிக்கைத் தொடர்பில் பிரித்தானிய பொதுச்சபையால் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட் டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கைக்கு பிரித்தானியா பாரியளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்றபோது இலங்கைக்கு ஆயுத விற்பனைசெய்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். லிபியமக்கள் எழுச்சிக்கு எதிராகப் படுகொலைகள் நிகழ்வதாகக் கூறி அந்த நாட்டை ஆக்கிரமித்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். இலங்கை இனப்படுகொலையை தொடர்பான குற்றச் சாட்டுக்களை இலங்கையே தீர்க்கவேண்டும் என்றும் இலங்கை அரசு போர்க்குற்றம் குறித்த விசாரணைகளைத் தானே மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருவதும் தெரிந்தததே.
இலங்கையில் ராஜபச்கச பாசிசம் மற்றும் பேரினவாதத்திற்கு எதிராக உலக மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் மக்களை அணிதிரட்டிப் போராடுவதும் அதனூடாக வல்லரசுகளின் வியாபார நலன்கள் சார்ந்த அக்கறையை நிராகரிப்பதுமே இன்றைய தேவை என்பதை இவை அனைத்தும் வலியுறுத்துகின்றன.