Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இறுதிக்கட்ட யுத்தம் -விக்கிலீக்ஸ் முக்கிய தகவல்கள் – அமரிக்காவிற்குத் தெரிந்தே இனப்படுகொலை நடந்தது!

இனியொரு... by இனியொரு...
05/10/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

வன்னி இறுதிக் கட்டயுத்தம் – விக்கிலீக்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!

மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான-விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்தன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரை:

2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும்,அது அனைத்துலகின் கண்டனங்களுக் கும் போர் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட் டுக்களுக்கும் இட்டுச் செல்லுமென பிளேக் ,லங் கையின் அன்றைய வெளியுறவு அமைச்சரு டனான சந்திப்பின் போது எச்சரித்துள்ளார்.

அதேநேரம் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரேயொரு மேற்குலக நாடான நோர்வே போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

இரத்தக் களரியைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் ,யன்றதைச் செய்ததாகவே உணருகின்றோம். ஆனபோதும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதைப் பார்க்கும்போது மிகவும் விரக்தியாக இருந்தது என்கிறார் இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர் ரோர் ஹார்ரெம்.

போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என 2009 மே மாதம் இலங் கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்தக் கூற்று உண்மையல்ல என்பதையும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும் எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கத் தூதுவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

பேரழிவைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பிளேக் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார். காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என அரச தலைவரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச பிளேக்கிடம் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைவதற்கு தயாராகவுள்ளதாக விடுதலைப் புலிகளின் தலைமை நோர்வேக்கு கூறியிருந்ததாகவும் சரணடைவை மேற்கொள்ள செஞ்சிலுவைச் சங்க உலங்கு வானூர்தியை அனுப்புமாறும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் பிளேக் கேட்டபோது, இப்போது நாங்கள் அந்தக் கட்டத்தை கடந்து விட்டோம் என்று கோத்தபாய பதிலளித்துள்ளார்.

பேரழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த ராஜதந்திரிகள் கொண்டிருந்த கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண் டிருந்தனர். நோர்வே வெளியுறவு அமைச் சகத்தின் தலைவர் ஜான் எக்லாண்ட் அக் கருத்தினை கொண்டிருந்தவர்களில் ஒருவரா வார். இது ஏலவே எச்சரிக்கப்பட்ட, அதேவேளை அனைவரும் தடுத்து நிறுத்தத் தவறிய பேரழிவின் வரலாறு. இது அனைத்துலக சமூகத் திற்கு சாதகமாக ஒரு வரலாறு அல்ல என்றார் அவர்.

2009இன் ஆரம்பத்திலிருந்து போர் முடி புக்கு வந்த மே 18 வரையான காலப்பகுதி களிலும் அதன் பின்னர் நடந்தேறிய முக்கிய சம்பவங்களை விக்கிலீக்ஸில் இருந்து ஆப்தன் போஸ்தன் கால வரிசையில் தொகுத்து வெளி யிட்டுள்ளது. அவை வருமாறு, 5 பெப்ரவரி 2009 : தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது கடின மாகி வருவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரோர் ஹார் ரெம் அமெரிக்க ராஜதந் திரிகளுக்கு தெரிவிக்கின்றார்.

5 மார்ச் 2009 : விடுதலைப் புலிகள் தாம் முறியடிக்கப்பட்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சரணடைவினை ஒரு தெரிவாக ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. பொது மக்கள் தங்கியுள்ள இடங்களை நோக்கி இலங்கைப் படைகள் ஆட்லறி தாக்குதல்களை மேற்கொள்வதை பசில் ராஜபக்ச ஒப் புக்கொள்கிறார் போன்ற தகவல்களை ரோர் ஹார்ரெம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றார்.

19 மார்ச் 2009 : அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை பலியாக்க முனைவதாகவும் அவ்வாறு நிகழுமானால் அனைத்துலக கண்டனங்களுக்கும் போர் மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் அது இட்டுச் செல்லும் என அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக், இலங்கை வெளியுறவு அமைச்சர் போகொல்லாகமவை எச்சரிக்கிறார்.

27 ஏப்ரல் 2009 : இலங்கையின் வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளை சந்திப்பதற்கான அழைப்பினை விடுக்கிறார். இணைத்தலைமை நாடுகள் அங்கம் வகிக்கும் நோர்வே அழைக்கப்படவில்லை. இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக இனி நோர்வே பார்க்கப்படமாட்டாது என போகொல்லாகம தெரிவித்தார். ஏனைய மூன்று நாடுகளின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றுவதாக அவர் கூறினார்.

5 மே 2009 : செய்ம்மதி மூலம் பெறப் பட்ட ஒளிப்படங்கள் மகிந்த ராஜபக்­விற்கு அமெரிக்காவினால் காட்டப்படுகின்றது. பொதுமக்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வல யங்களுக்குள் ஆட்லெறித்தாக்குதல்கள் நடத்தப்பட்ட தடயங்கள் ஒளிப்படங்களில் காண்பிக்கப்படுகின்றது. போர்க்கள நிலைமை கள் தொடர்பாக தன்னைவிட அமெரிக்காவுக்கு அதிக தகவல்கள் தெரிந்திருப்பதாக மகிந்த ராஜபக்­ ஒப்புக்கொள்கிறார்.

13 மே 2009 : இலங்கை விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொள்ளாதுவிடின் அது ஒரு வரலாற்றுத்தவறு என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்துகின்றது. பாது காப்பு அவையின் ஒரு அமர்வில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன தீர் மானம் நிறைவேற்ற முயன்றபோது சீன மற்றும் ரஷ்யா எதிர்க்கிறது.

17 மே 2009 : பேரழிவைத் தடுக்கும் நோக் கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பிளேக் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டார். காயப்பட்டவர்கள் மற்றும் ,றந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதி அனைத்துலக செஞ் சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோகரும் அவரது சகோ தரருமான பசில் ராஜபக்­ பிளேக்கிடம் தெரி வித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடையச் சென்றபோது சரணடைவை உறுதிப்படுத்த எதையுமே செய்யவில்லை என வெளியுறவு அரசியல் ஆலோசகர் பாலித ஹோகன முன்னர் தெரி வித்தார். ஆனால் பிறிறொரு சந்தர்ப்பத்தில் அதற்கு முரணாக ஹோகன கூறியமையை பிளேக் கவனத்தில் எடுத்துள்ளார்.

27 மே 2009 : ஐக்கிய நாடுகளின் அவை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். ,டம் பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டி ருந்த முகாம்களின் நிலைமைகள் மிக மோச மாக உள்ளதாக அவர் கூறுகிறார்.

01 யூன் 2009 : அடுத்த ஐந்து ஆண்டுகளில் படைத்துறை ஆளணிகளை இரட்டிப் பாக்கும் திட்டத்தினை அரசாங்கம் கொண்டி ருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ,ரகசிய ஆவணத்திலிருந்து தெரியவருகின்றது.

15 யூலை 2009 : அனைத்துலக மனி தாபிமான சட்டங்களை ,லங்கை அரச படை கள் கடுமையாக மீறியதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. பொது மக்களுடன் கலந்திருந்ததாக விடுதலைப் புலிகள் கண்டிக்கப்படுகின்றனர். ஆனால் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்க ளாக பயன்படுத்தினரா என்பது தொடர்பாக முடிபெடுப்பது கடினம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களை காயப்பட்டவர்களுக்கு மருந்து வழங்கும் மற் றும் குருதி செலுத்தும் பணிகளை முன்னெ டுக்க விடாது அரசாங்கம் தடுத்துள்ளது. எனவே ,றந்த சிறுவர்களின் தொகையை கணக்கிடுவதை தாம் கைவிட்டதாக செஞ்சிலு வைச் சங்கத்தின் தெற்காசியத் தலைவர் கூறுகிறார்.

31 ஓகஸ்ட் 2009 : அமெரிக்க வெளியு றவு அமைச்சகத்தைச் சேர்ந்த போர்க்குற்றங் களுக்கான பொறுப்பதிகாரி கிளின் வில்லி யம்சனுக்கும் நோர்வேக்கும் இடையில் ஒஸ்லோ வில் சந்திப்பு நிகழ்கிறது. போர்ப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாதிருந்த மையால் போர் மீறல்கள் தொடர்பான தடயங் கள்-சாட்சியங்களை பெறுவதில் சிக்கல்கள் ,ருப்பதாகவும் கூறிய கிளின் வில்லியம்சன் ,றுதி நாளில் நடந்தவை தொடர்பான தகவல் களை நோர்வேயிடம் கேட்டிருந்தார். விடு தலைப் புலிகளின் அரசியல் தலைமை மீதான கொலைகள் சந்தேகத்திற்கிடமானவை என நோர்வே ,ராஜ தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

18 செப்ரம்பர் 2009 : அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக தான் குழப்பம் அடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்­ விசனம் கொள்கிறார். பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு முதலில் கூறிய அமெரிக்கா, தான் அதைச் செய்து முடித்துள்ள போது விமர்சிப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ராஜபக்­ கூறு கிறார்.

26 ஓக்டோபர் 2009 : போர் மீறல்கள் தொடர்பான அமெரிக்க செனட் அவையின் அறிக்கையைப் பெறுவதற்கு ,லங்கை அர சாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் முன் வரவில்லை.

17 டிசம்பர் 2009 மகிந்த ராஜபக்ச நாட் டை தவறான பாதையில் இட்டுச்சென்றுவிட்ட தாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டுகிறார். ராஜபக்­ குடும்பத்தினை படிப்பறிவற்ற – பண் பாடற்ற பாதகர்கள் என வர்ணிக்கிறார். நாட் டின் அரசியல் காலநிலை பழிவாங்கல் அச் சுறுத்தல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக வும் எவருமே அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலையில் ,ல்லை எனவும் கவலை தெரி விக்கின்றார்.

2 பெப்ரவரி 2010 : சரணடைய முனைந்த போது விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதான குற்றச் சாட்டு பொய்யானது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்கின்றார். இந்த விபரங்களை விக்கிலீக்ஸ் ஆவணங்களை மேற்கோள்காட்டி நோர்வே நாளிதழ் ஆப்தன்போஸ்தன் தனது கட்டுரையில் வெளியிட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மே 18ம் திகதி அணிதிரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

Comments 1

  1. Pingback: Indli.com
  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...