நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம்
போவோமா புதையுண்டு சாவோமா…!
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள்
வடக்கு வீதியில் சின்ன மேளம்
கிழக்கே மேளச் சமா
தெற்கே காவடி
மேற்கே கச்சான் கடைகளென
தேர்தல் திருவிழா
அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு
வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும்
விடுதலையை வென்று தருபவராகவும்
சிலர் ஒருபடி மேலே போய்
தாயகத்தை தோண்டி
பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும்
ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள்
மூடைகளின் அளவுகளில்
வேறுபாடிருந்தாலும் எல்லாம்
புளுகுமூடைகள்தான்
தொடுத்த வில்லிற்கும்
கொடுத்த விலைக்கும்
ஈடுதான் என்ன
மாகாண சபைதானா
ஆளுனர் தலையசைத்தால்தான்
மூத்திரமே பெய்யலாம்
கோவணம் இறுக்குவதற்கும்
கொழும்பில்தான் அனுமதியாம்
போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை
கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை
நீதிமான் சொல்கிறார்
மாகாண சபை மூன்றாம் கட்ட போராம்
மூக்குடைபடப் போவது யாரென்று இப்போதே தெரிகிறது
கூலிக்கு வந்தவன் குடியிருக்க
உரிமைக்காரன் தெருவில் நிற்கிறான்
வீதிக்கே போகாத பரம்பரையின்
விதி மாறிக்கிடக்கிறது.
விதிமாற்ற எழுந்த
புனிதர்களை விதைத்தோம் பூமியெல்லாம்
விதைத்த நிலத்தை உழுதது கொத்திப்பேய்
வீழ்ந்தவர்க்கே இந்நிலையென்றால்
வாழ்பவர் நிலையோ
வதைபடும் நிலை
அழுத விழியும் சிந்திய குருதியும்
கானல் நீராய் விடுதலையும்
இன்னும் மற்க்கவில்லை
மீண்டெழவே முடியவில்லை
எந்த நோவுமறியாதவர் எல்லாம்
சபையேற வந்துள்ளார்
காலிழந்தவர் கையிழந்தவர் துணையிழந்தவர்
சேயிழந்தவர் தாயிழந்தவர் எல்லாம்
அனலிடைத் தூங்க
கப்பம் பெற்றவர் கள்ளத்தோணிகள்
காட்டிக்கொடுத்தவர் கூட்டிக்கொடுத்தவர்
தலையாட்டிகள் முகமூடிகள் எல்லாம்
அரியணைக்காய் அரிதாரம் பூசி வந்துள்ளார்
மாயப்பொய்கையில் இறங்கி
தாமரைபறிப்பதாய் இவர்கள் உளறுவார்கள்
இவர்கள் காட்டும்
பொய்மானின் பின்னால் போனாயென்றால்
உடுப்பிழந்து
இடுப்பாடை துறந்து
உள்ளத்து உணர்விழந்து
அம்மணமாய் ஆவதன்றி வேறொன்றும் வாராது
ஆடுபவர் மத்தியில்
ஓரிரு வீரர் முகங்களும்
சாம்பாரில் போடும் கறிவேப்பிலைபோல்
வென்றபின் இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்
கறிவேப்பிலையாடா தமிழா நீ
கரும் வேங்கையன்றோ
என்ன கொடுமையப்பா
இதற்கா ஆசைப்பட்டாய் தமிழா…..?
என்ன இழிவடா உனக்கு …..?
எத்தனைபேர் தாளத்துக்கு ஆடப் போகிறாய்
தனியரசென்றான் அடங்காத் தமிழன்
பெருந்தலைவனோ ஐம்பதுக்கு ஐம்பதென்றான்
இணைப்பாட்சியென்றார் தந்தை
மாவட்டசபைக்கிணங்கினார் தானைத்தளபதி
ஓடிப்போன ஒரிசா வீரனோ
மாகாணசபையையே இழித்துரைத்தான்
நாயாய் கிடந்த வாழ்வுதறி
பேயாய் நீ களம் புகுந்தாய்
மிதிபட்டுக்கிடந்தவன்
மேல்நோக்கியெழுந்தாய்
திசையதிர்ந்தது
கட்டில்லா வாழ்வு பெற்றோம்
காமம் கலக்கா கதியடைந்தோம்
நள்ளிரவிலும் நமது நங்கையர் நாற்பது பவுணணிந்து
நாட்டுக்கூத்து பாக்கச்சென்றது அந்தப் பொற்காலம்
எழுந்து நின்ற எம்மை ஏறிமிதித்தனர்
பாதிக்கு பக்கத்துவீட்டானும்
பனிநாட்டானும் காலில் போட்டு நசுக்கினான்
பாதியுயிர்போனது
மானமுள்ளவன் வீழ்ந்தான்
மீதமுள்ளவன் நடைப்பிணமானான்
மீண்டெழவே முடியா மனச்சோர்வானோம்
பாதிவழி கடந்த பயணம்
மீதிவழி போவோமா வந்தவழியே திரும்புவோமா
வந்தவனுக்கெல்லாம்
வெற்றிலை மடித்துக்கொடுத்துவிட்டு
அவன் நீட்டும் எலும்புக்காய் யாசிப்போமா
மாகாண சபையென்பது
பொய்மான்
மெய்யறியாவிட்டால் வினை வந்து சேரும்
கடந்தகாலத்தை கண்ணெறிந்து பார்
பழிசுமந்த படிப்பினை தெரியும்
உடைவாள்மட்டும்தான் இழந்துள்ளாய் இன்னும்
ஓர்மம் இழக்கவில்லை
விடுதலைக்கான வழி தேடு
முட்பாதைதான் முன்னெற முயல்
விடுதலை என்பது வல்லை மைந்தனுக்கு மட்டுமல்ல
உனக்கும் வேண்டும் உன் பிஞ்சுகள் வாழவேண்டும்
நெஞ்சை நிமிர்த்து
வீழ்ந்தான் தமிழன் என்பது பழியல்ல
வீழ்ந்தவன் எழாமல் மாண்டான் என்பதே தீராப்பழி
விடுதலைக்கு நீ படிக்கட்டாகு
உன்கொள்ளுப்பேரன் உன் வரலாற்றை படிக்கட்டும்
உன் பெண் வயிற்றுப் பேர்த்திக்கு
சீதனமாய் கொஞ்சம் சுதந்திரம் கொடு
அம்மப்பா அடங்கிவாழவில்லை என்பதே
அவர்களுக்குப் பெருமை
கவசம் தரி
நான்காண்டாய் வாழ்ந்த
இழிவு அழியட்டும்
முன்னேறு
விட்ட இடம் தெரிகிறது
கிட்டப்போனாயென்றால்
விட்ட பிழை தெரியும்
கூட்டிக்கழித்து பெருக்கி கணக்கிடு
திட்டமிடு திமிருடன்
முன்னேறு
இருள் கொஞ்சம் அதிகம்தான்
ஆனால் ஒளி உன் கண்களில் உள்ளதன்றோ….!
/////போராட்ட தலைமை மீதும் தலைவர் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அவரை இன்னும் உயரத்தில் வைத்து பார்க்க வைத்தது….
S.Nithiananthan
Posted on 08/01/2013 at 10:58
//// is he ….lost
/////மாவீரர்களுக்கு வணக்கம் செய்ய அவர் முன்மொழிய கம்பன் கழக தலைவர் அதை ஏற்றுக் கொள்ளாமையால் அக் கழகத்திலிருந்து அவர் வெளியேறியிருக்கின்றார். உன்னதமான மனிதர்.CVW—S.Nithiananthan
Posted on 08/01/2013 at 10:58
//// now he is writing against CVW . what is happening . is he being forced by Srilankan forces ? or is he lost?
சந்திர மௌலீசன் சகோதரனே தட்டுத்தடுமாறி நடக்கும் சிறு குழந்தையை விழுந்துவிடப்போகிறாய் என்று தந்தை எச்சரிப்பது பிள்ளை விழுந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையில்தான். இதே போன்று கூட்டமைப்புக் குழந்தையும் தடம் மாறிவிடக்கூடாதே என்ற எச்சரிப்புத்தான் இது.
you may think that way but actually what you are doing is trying alienate voters.
இந்த அண்டிக் கெடுக்கும் அசகாய சூரர்கள் பற்றி எனது அனுபவப் பதிவுகள் இரண்டை குறிப்பிட்டு தொடருவோம் ,
கனகாலத்துக்கு முந்திய கதை இது ,
போராட்டத்தில் தீவிரமாக இருந்த ஒரு பொடியனை (இப்ப அவர் பாதிரியாராக இருக்கின்றார் ) புடிச்சு ,ஏண்டா போராட்டத்துக்கு வந்தனீ , என்ன செய்ய திட்டம் எனக் கேட்டேன் , அவன் சொன்னான் உந்த படிச்ச பணக்காரங்கள் சனத்தை நல்லா ஏமாத்திறாங்கள் உதுக்கு முடிவு கட்டவேணும் எண்டான் . அவன் சொன்ன வேதனைக் கதைதான் இது,
அது இப்பவும் தொடர்வதாகவே நான் நினைகின்றேன் .
அவனது அம்மா ஒரு படிச்ச பணக்கார பெரிய மனுஷன் வீட்டில் வேலைக் காரியாக வேலை செய்து வந்தா , கிடுகு பின்னுறது முதல் வீடுவேலைகள் செய்வதுண்டு . பெரியவற்றை ஆக்கினை தாங்கேலாமல் இவனும் நேரம் கிடைக்கும் பொழுது அவரிட்டை வேலைக்கு போவானாம் . பள்ளிக் க்கூடம் லீவு , எங்கை போட்டான் ம் கூட்டிவந்து நாலு வேலை செய்தால் குடும்பத்துக்கு உதவும் எண்டு அவர்தாயிடம் ஆக்கினை . தாய்க்கும் மோனுக்கும் இந்த விசயத்திலை அடிக்கடி சண்டை வருவாம் . அம்மா பாவம் அந்த பணக்காரனின் கதையை கேட்டு ஏனோடை சண்டை பிடிக்கும் எண்டான் அவன் . ஒருவாறாக இடறுப்பட்டு 10 ஆம் வகுப்பு வரை படிச்சிட்டான் . .
தாயின்ரை ஆக்கினை தாங்கேலாமல் 10 ஆம் வகுப்பு முடிய ஆர்ட்ஸ் படிக்கிறதோ , சயன்ஸ் படிக்கிறதோ எண்டு முடிவு செய்ய அம்மாவின் ஆலோசனைக்கு ஏற்ப அம்மாவுடன் பெரியவர் வீட்டுக்கு போனான் அவன் . பெரியவர் சொன்னாராம் , இந்த காலத்திலை பட்டப்படிப்பு படிச்சுட்டு எத்தினை பேர் வேலையில்லாமல் இருக்கினம் , சும்மா விசர் வேலையை விட்டுட்டு , அம்மாவுக்கு உதவியா உவன் வந்து வேலை செய்தால் நல்லது எண்டாராம் . அன்றுதான் தாய்க்கு புரிஞ்சுதாம் . ஐயா இவ்வளவு நாளும் வைத்த இலக்கு என்ன எண்டு .
இவனுகளோடை இடறுப்பட்டு களைச்சுப் போய் அவன் இப்பொழுது ஒரு பாதிரியாராக இருக்கின்றான் .
இது அண்டிக்கெடுக்கிற ஒருவகை , ,
இன்னொண்டை பார்ப்பம் ,
எனக்கு திருமணம் நடந்து சில வாரங்களில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் என்னை அன்பாக விருந்துக்கு அழைத்தார் . நல்ல உபசாரம் .அப்பிடி உபசாரம் யாரும் செய்ய இல்லை . தனியக் கூப்பிட்டு அன்பொழுக அவர் சொன்னார் டே உன்ரை குடும்பம் நல்லா இருக்க வேணுமெண்டதுக்காக சொல்லுறன் ,நீ படிச்சனீ , கேக்கிற எண்டால் கேள் என்று துவங்கியவர் சொன்னார் , உன்ரை மனுசிக்கு கார் பழக்காதை , கார் வாங்கிக் குடாதை ….எண்டு “நல்லாலோசனை” தொடர்ந்தது. . நான் சரியான பண்புடன் குடும்பம் எப்பிடி நடத்துறது எண்டு நான் பார்க்கின்றேன் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் இருந்து விலகிவிட்டேன் .
சரி மனுசி காரும் பழகி , புத்தம் புது காரும் வாங்கிச்சு . ஒருநாள் மாலைப் பொழுது மனுசி காருக்கை இருக்கு , அவ இருக்கிறதை காணாத இருவர் வெளியிலை காருக்கை நிண்டு என்ன கதைச்சவை தெரியுமே , உந்த காரை கொழுத்த வேணும் எண்டு கதைக்கினமாம் . பாவம் என்ரை மனுசி பண்பா நாலு வார்த்தை சொன்னதாம் .
அன்றுதான் எனக்கு புரிஞ்சுது , சனியனுகளோடை கதைக்காமல் , தொடர்பில்லாமல் விட்டாலும் தொடரும் எண்டு .
இது அண்டிக் கெடுக்க பார்க்கறது அது முடியாட்டில் அதுக்கு மேலை முயற்சித்து அழித்து விட முயற்சிப்பது .
இந்த வகையான ஆக்கள் விடுதலைப் போராட்டத்துள் இருப்பினம் எண்டது எதிர்பார்க்க கூடியதே !!!!
அவையளைப் பற்றித்தான் கதைக்க போறன்,
மேலே சொன்ன “குடும்பத்தை” அண் டிக் கெடுக்கிறவை மாதிரி சுதந்திரப் போராட்ட “குடும்பத்தை” அண்டிக் கெடுக்கிறவை நிச்சயமாக இருப்பினம். அதுக்கு அவைக்கு கொடுப்பனவுகளும் இருக்கலாம் . இதைப்பற்றிதான் கதைக்கப் போறன் .
எந்த விடுதலைப் போராட்டத்திலும் , எந்த அரசியல் முன்னெடுப்புக்களிலும் “அண்டிக்கெடுக்கிற” தரப்பினரின் உளவியல் போர் யுக்திகள் இருக்கும் . இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
இந்த உளவியல் போர் யுக்திகளில் “ஊடுருவல்” வேலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன . இந்த ஊடுருவல்களை இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்கலாம்.
முதலாவது இராணுவ பிரிவுக்குள் ஊடுருவல். இரண்டாவது அரசியல் பிரிவுக்குள் ஊடுருவல் ஆகும் . இந்த இரண்டு வகை அண்டிக்கெடுக்கிறவர்களும் வெளிப்பார்வைக்கு உதவ வருபவர்கள் போலவே தோன்றுவார்கள் . சாதாரண நிலை உறுப்பினர்களாக முதன் முதல் இணைவர் .
அமைப்பின் , மக்களின் மனங்களைக் கவரவல்ல காரியங்களை நிறைவேற்றி தீர்மானிக்கும் சக்திகளாக அல்லது தீர்மானிக்கும் சக்திகளை அண்மித்தவர்களாக இவர்கள் இலகுவில் மாறிவிடுவார்கள்.
அதெப்படி இவர்களால் தீர்மானிக்கும் சக்திகளை இலகுவில் அண்மிக்க முடிகின்றது என்கின்றீர்களா? கண்ணை மூடி ஒருகணம் சிந்தித்து பாருங்கள். எப்படி முடியும் ? சாத்தியமான “பொறிமுறைகளை” உங்களால் அடையாளம் காண முடிகின்றதா?
முடியவில்லையா? இதனைதான் நான் சொல்ல வருகின்றேன் . அண்டிக்கெடுக்கிறவர்கள் இருக்கலாம் , நிச்சயம் இருக்கும் , அதை நாம் தடுக்க வேண்டும் எனத் தெரிந்திருந்தும் . அது பற்றி நாம் சிந்திக்காதவர்களாக , அந்த திசையில் திட்டம் எதுவும் இல்லாதவர்களாக இருக்கின்றோம் என்பதே என் சிற்றறிவுக்கு எட்டிய விடயம் .
சரி குறித்த அரசியல் “அண் டிக்கெடுத்தல்” எவ்வாறு நடத்தப்படலாம் எனப் பார்ப்போம்.
இந்த அரசியல் “அண் டிக்கெடுத்தல்” வகையினரை மேலும் பல உபபிரிவுகளாக பிரிக்கலாம்.
நேரடியாக குறித்த ஊடுருவலாளியே ஊடுருவுதல் , அல்லது ஏற்கனவே அமைப்பில் உள்ள ஒருவரை கையாளுதல் நேரடியாக கூலியாக மாற்றி விடுதல் . கையாளுதல் என்பது இரண்டாம் மூண்டாம் தர அல்லது அதற்கு கீழுள்ள உறுப்பினர்களூடாக நடைபெறலாம்.
இவர்கள் ,ப்லவேறு வகையான மனித பலவீனங்களைக் கொண்டவர்களாக இருப்தற்கான வாய்ப்புக்கள் அதிகம் . எதையும் இலகுவில் நம்பும் தன்மை , ஏமாந்து போதல் , பணம் , பிரபல்யம் , சுய இறுமாப்பு , ஊர் சாதி போன்ற கீழ்த்தரமான ஆழமன்க் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களாக இவர்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருகும் . இந்த பலவீனங்களை எதிரி இலகுவாக கையாளுவான்.
1) அதிசயிக்க தக்க வகையிலான இராஜதந்திர தொடர்புகள் .
2) சிறந்த எழுத்தாற்றல் .
3) சிறந்த பேச்சாற்றல்.
4) ஆறுபோல் ஓடும் பணம்.
இந்த வசதிகளை எதிரி தான் நேரடியாகவோ மறமுகமாகவோ செய்து கொடுப்பான்.
இது எவருக்கும் தெரியாமல் இருக்கும் . சம்பந்த பட்டவருக்கு கூட தெரியாமல் இருக்க வாய்ப்பு உன்டு.
எப்படி இவையெல்லாம் இந்த மனுசன் செய்யிறான் , எமது வெற்றிக்காக சுழண்டு வேலை செய்கின்றான் என வியக்குமளவுக்கு அபரிமிதமான சாதனையாளர்களாக இவர்கள் முதலில் இடம் பிடிப்பார்கள். (முக்கிய குறிப்பு :- சில விசுவாசமான சாதனையாளர்களும் இருப்பார்கள் . இப்படி வியக்கத்தக்க சாதனை படைப்பவர் எல்லாம் ஊடுருவலாளர் என்று நான் சொல்ல வரவில்லை விசுவாசமான சாதனியாளர்கள் மத்தியில் இவர்களும் கலந்திருப்பார்கள் என்ப்தை தான் குறிப்பிடுகின்றேன்.) கொஞ்சம் லோக்கலா சொல்லுற எண்டால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதுதான்.
இப்படி ஒருவர் தான் சூப்ப்பர் Spy Glen . இவர் லண்டன் கிளையுள் ஊடுருவி செயலகத்தில் பிரதம ஆளாக மாறினார் என்பதை அவரே இப்பொழுது புத்தகமாக எழுதி உள்ளார் . வெறும் 100 பவுண்டுகளை அன்றைய பொறுப்பாளருக்கு செக் ஒன்றின் மூலம் நன்கொடையாக தெருவோர கபே ஒன்றில் கொடுத்து தன அண்டிக் கெடுக்கும் வேலையை ஆரம்பித்தேன் என்று சொல்லும் அவர் . இறுதியில் முதலாவது சமாதான பேச்சுவார்த்தையை தென்னாபிரிக்காவில் நடாத்துவது பற்றிய ஆலோசனை மின் ஞ்ச்சலை முதலில் பெருமளவுக்கு உயர்ந்தார் . அவரே தனது புத்தகத்தில் சொல்லுகின்றார் “வன்னியில் இருந்து வரும் தகவல்களை முதலில் பெரும்
தரத்துக்கு உயர்ந்தாராம் ” வரும் அறிக்கைகளின் பிரதியை உடனுக்குடன் சிறீலங்கா அரசுக்கு கொடுத்தாராம் . அவர் எழுதிய அந்த புத்தகத்தின் பெயர் War of the web by Super Spy Glen Jenvy
அப்படியானால் பொன் போல மின்னும் இந்த “அண்டிக் கெடுப்பவர்கள ” எப்படி அடையாளம் காணப் போகின்றோம்? என்பது பற்றிய ஒரு கட்டுரைத் தொடர்தான் இது . இந்த துறையில் நான் நிபுணன் அல்ல .. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அண்டிக் கேடுக்கிறவை செய்த புண்ணியம் என்ன தெரியுமே , கிரிமினல் சட்டம் பற்றி படிக்க போனனான் . அதிலை குற்றமனம் (Criminal Mind ) இதைப்பற்றி படிப்பிச்சவை . எனக்கு முழுசா விளங்கேல்லை . அதிலை Pragmatic Analysis of legal proofs of Criminal intent (ISBN9789027227164) இந்த புத்தகம் ஒருவரின் செயல்களில் இருந்து குற்ற மனத்தை அடையாளம் கண்டு அதை சட்ட பூர்வமாக நிரூபிக்கும் வகையை விளக்குகின்றது . இஸ்ரேலிய பல்கலைக் கழ பாட நூல் இது . . மீதியை அடுத்த வாரம் பார்ப்போம் .
ஒரு பேப்பரில் வெளியான கட்டுரையில் சில திருத்தங்கள் http://www.orupaper.com/Issue/issue-192/படங்களுடன் .
தாங்கள் எச்சரிப்பதாகத் தெரியவில்லை. நடைபாதைபோடுமட்டும் நடக்கவே கூடாதென்கிறீர். அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். நீதியரசரை வெற்றிபெற வைத்தால் நட்டமேதும் வராது. இந்நிலையிலும் தாழத் தமிழனுக்கு என்ன இருக்கிறது. தகுதியும் திறமையும் உள்ள ஒருவன் மூலம் சர்வதேசத்துக்கு உண்மையை மறுபடியும் உரைத்துப் பார்ப்போமே.
////Posted on 08/14/2013 at 08:57
S.Nithiananthan=====சந்திர மௌலீசன் சகோதரனே தட்டுத்தடுமாறி நடக்கும் சிறு குழந்தையை விழுந்துவிடப்போகிறாய் என்று தந்தை எச்சரிப்பது பிள்ளை விழுந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையில்தான். இதே போன்று கூட்டமைப்புக் குழந்தையும் தடம் மாறிவிடக்கூடாதே என்ற எச்சரிப்புத்தான் இது. /////
நீதி தேவன் குணானிதி ஐயா விக்கினேஸ்வரன் ஒன்றும் IQ-EQ-GQ குறைந்தவர் அல்ல . உமக்கு குழந்தையாக . உமது வரிகளில் சொல்வதானால்
அவர் ////Reply
//////////////
S.Nithiananthan
Posted on 08/01/2013 at 10:58
நீதிதேவன் விக்னேஸ்வரன் அய்யாவை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் நேற்று (புதன் ) கிடைத்தது. யாழ் சிவில் சமூகம் ஏற்படுத்தியிருந்த சந்திப்பொன்றில் எனக்கும் இடம் கிடைத்து சென்றிருந்தேன். உன்னதமான மனிதர் . அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட தீட்சன்யமானகுரல் எதையும் நிதானமாக அதே நேரம் ஆணித்தரமாக முன் வைக்கும் திறமை. போராட்ட தலைமை மீதும் தலைவர் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அவரை இன்னும் உயரத்தில் வைத்து பார்க்க வைத்தது. மாவீரர்களுக்கு வணக்கம் செய்ய அவர் முன்மொழிய கம்பன் கழக தலைவர் அதை ஏற்றுக் கொள்ளாமையால் அக் கழகத்திலிருந்து அவர் வெளியேறியிருக்கின்றார். உன்னதமான மனிதர். /////
அவரைப் பார்த்து நீர் எழுதிய வரிகள் உம்மை இராணுவம் அச்சுறுத்தி எழுத வைக்கிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது .
/////
நீதி தேவன் குணானிதி ஐயா விக்கினேஸ்வரன் ஒன்றும் IQ-EQ-GQ குறைந்தவர் அல்ல . உமக்கு குழந்தையாக . உமது வரிகளில் சொல்வதானால்
அவர் ////
முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனையும் என்னையும் சிண்டு முடிய வேண்டாம்.
அவர்பற்றி உயர்ந்த எண்ணங்களையே வைத்திருக்கின்றேன். ஆனால் எல்லோரையும் எச்சரிக்க வேண்டிய கடமை உள்ளது.
நாற்பத்தி மூன்று வருடங்கள் தாயகத்தில் இருக்கும் எனக்கு அத் தகுதி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
“எங்களுக்கென்று ஒரு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்வோமாயின் அதிகாரங்களை தர முடியாது என அரசாங்கம் சொல்ல முடியாது.
இதுவும் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதுதான். தேர்தலுக்கு முன் சொல்வதை தேர்தலின் பின் செய்யவும் வேண்டும் தாயகத் தமிழன் இனி ஏமாறத் தயாராக இல்லை
கூட்டமைப்பிலிருந்து விலகி அரசுடன் இணைந்தவர்கள் விபரம்
பியசேனா
றெமிடியஸ்
சிவகுமார் (வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்)
இந்த லிஸ்ட்டில் வேறு யாரும் வந்துவிடக்கூடாது
நாங்கள் கேட்பதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுப்பார்களானால் நாங்கள் அனைத்துலக அளவில் நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிக்க வேண்டி வரும்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் அரசாங்கம் செயற்பட்டால், பேரம் பேசுவதற்கு நாங்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.” By – Hon Mr Vikneswaran
வட மாகாண தேர்தலில் வாக்களிப்பது அதனை ஏற்றுக் கொள்வதற்கு அல்ல .
முற்றிலும் மாறாக எமது ஏகோபித்த எதிர்ப்பை ஜனநாயக் ரீதியாக பிரகடனப்படுத்த . முதன்மை வேட்பாளர் சொன்னது போல் இது இடது கையால் கொடுத்து வலது கையால் எடுக்கும் வெற்றுக் கடதாசி என சொன்னதை மக்கள் அங்கீகாரம் ஆக்க மட்டுமே இந்த தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும் .
சர்வதேச ஆதரவின்றி ஜனநாயக ரீதியாக 30 வருடம் போராடி தோல்வி அடைந்திருக்கின்றோம் இருக்கின்றோம் .
சர்வதேச ஆதரவின்றி 30 வருடம் ஆயுதப் போராட்டம் நடாத்தி தோல்வி அடைந்திருக்கின்றோம்.
சர்வதேச ஆதரவுடன் “அறுவைச் சிகிச்சை தான் வழி” என்பதில் மார்றுக் கருத்து இல்லை . அதற்கு முன் நிபந்தனை சர்வதேச கண்காணிப்பில் ஜனநாய முறைகள் தோல்வியடைய வேண்டும்
==============================================
ஒரு சிங்களக் கூட்டுக் கட்சி வெற்றி பெற்றால் அது எமது உரிமைப் போரின் கடைசி அத்தியாயமாக அமையும் . இந்த வரலாற்றுத் தவறுக்கு துணை போக வேண்டாம் சர்வதேச பார்வையில் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டது என்பதை நாம் நிருபித்ததாக வேண்டும் .
அந்த ஆயுதப் போரை சம்பந்தன் ஆட்கள் எடுக்கப் போவதில்லை .
ஆனால் அவர்களின் எல்லை வரை அவர்கள் செல்ல அனுமதிப்பதே சர்வதேச ஆதரவுடன் அறுவைச் சிகிச்சைக்கு நாம் தயாராக உதவும் .
குறிப்பு :—-ஐயா விக்கினேஸ்வரன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் இங்கு பார்க்கலாம் .க்ட்ட்ப்://ட்ம்ந்ட்ம்ந்.ப்லொக்ச்பொட்.cஒ.உக்/செஅர்ச்/லபெல்/Jஉச்டிcஎ%20C%20V%20Wஇக்னெச்நரன்
கீழே உள்ள வரிகளால் ஐயா விக்கினெஸ்வரனை கிண்டல் பன்ணி இருக்கிறார். சனித் தியான ந்அன்
////நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம்/// எண்டிருக்கிறார் இதைச் சொன்னது
விக்கினேஸ்வரன் தான். இது அவரைக் கிண்டல் பண்ணும் வரிதான் .
///நீதிமான் சொல்கிறார் மாகாண சபை மூன்றாம் கட்ட போராம்/// எண்டிருக்கின்றார் இதைச் சொன்னதும் விக்கினேஸ்வரன் தான். இது அவரைக் கிண்டல் பண்ணும் வரிதான் .
பிறகு என்னடா எண்டால்
/////அவர் (விக்கினெஸ்வரன்) பற்றி உயர்ந்த எண்ணங்களையே வைத்திருக்கின்றேன்//// என்று கும்மி அடித்திருக்கின்றார் .
ஒருக்கா கறுப்பு எண்ணுறார் பிறகு வெள்ளை எண்ணுறார். அப்ப கறுப்பு வெள்ளையோ?
நல்லா தவாக்கூடிய கவி தான் !!!
////நாற்பத்தி மூன்று வருடங்கள் தாயகத்தில் இருக்கும் எனக்கு அத் தகுதி இருப்பதாக நான் நினைக்கிறேன்.S.Nithiananthan //// இது தான் கருத்து சொல்ல தகுதி என்றால் கிறிமினல் டக்சக்கு உம்மை விட அதிக தகுதி இருக்கு . மண்டுத் தனமான கருத்து இது . உம்மடை வயதை விட அதிக காலம் ஈழத் தமிழர் அரசியலில் செலவழிதுக் கொண்டிருப்பவன் சொல்கின்றேன் சாதி /ஊர்/வயது இதுகள் கருத்து சொல்லும் உரிமையை தீர்மானிப்பவை அல்ல.
னெற்று முளத்த மளைக்கு முளைத்த காளான் உம்ம்மை பேசவேண்டாம் எண்டு சொல்லவில்லை அளந்து பேசும்!! அறிந்து பேசும் !!!
1972 ஆம் ஆண்டு குடியரசு தினதன்று பாடசாலை பகிச்கரிப்புக்கு யாழ சாவகச்சேரி இந்துக் கல்லூரி மானவர்களை “துரத்திய” நாள் எனது முதலாவது “செயல்பாட்டை” ஆரம்பித்தவன் யோ!!
சந்திரமௌலீசன் எதுக்கு கிடந்து துடிக்கீறீர்கள். உங்கள் குணாநிதியை கொண்டாடுங்கள் கும்பிடுங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. மற்றவர்களை கும்பிடச்சொல்லிக் கூற உங்களுக்கு உரிமை இல்லை. ஐயா உமக்கு சிறீலங்கா குடியுரிமை இன்னும் இருக்கா (எனக்கு இருக்கு) உங்கள் தமிழ் சிரிக்க வைக்கிறது கோத்தாவின் கைக்கூலி ஆள்தானே நீர் சிங்கள புலனாய்வாளர்கள்தான் இப்படி தமிழ்க் கொலை செய்வார்கள் (னெற்று முளத்த மளைக்கு முளைத்த காளான் )
தமிழ் தெரியாதவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை எனக்கில்லை
விக்கினேஸ்வரனின் பேரப்பிள்ளைகள் தமிழ்ப் பெயருடன் உள்ளார்களா? தமிழன் என்ற அடையாளம் அவர்களுக்கு இருக்கிறதா? ஆகக்குறைந்தது தமிழ் மொழியாவது பேசுவார்களா கேட்டுச் சொல்லும் மௌலீஸ்வரன்
இதென்னடா வம்பா போச்சுது, ஒருவன் மேஜரான் தனது பிள்ளைக்கே என்னெ செய்யவேண்டும் வேண்டாமென்ன்று சொல்ல முடியாத காலமிது, இதுல போயி பேரன் பேத்திக்கு என்ன பெயர் வெச்சானீயுன்னு கேட்டா. இந்த லூசுத்தனதுக்கு ஒரு முடிவே இல்லியா. கருணானிதிட மகளே அப்பன டாட் எங்கிறகால்மப்பா இது.
//////நித்தியானந்தன். ச
Posted on 08/16/2013 at 07:21
விக்கினேஸ்வரனின் பேரப்பிள்ளைகள் தமிழ்ப் பெயருடன் உள்ளார்களா? தமிழன் என்ற அடையாளம் அவர்களுக்கு இருக்கிறதா? ஆகக்குறைந்தது தமிழ் மொழியாவது பேசுவார்களா கேட்டுச் சொல்லும் மௌலீஸ்வரன்
/////////////=======================எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..
1) உமக்குத் தெரியுமா ? மார்க்ஸ் ஒரு ஜெர்மன் பிரஜை ஆனால் ரஸியாவில் தான் அவரது கொள்கை கொடிகட்டிப் பறந்தது .
2) உமக்குத் தெரியுமா ? செகுவேரா ஒரு ஆர்ஜன்டீன பிரஜை கியூபாவில் தான் முதலில் கொடிகட்டிப் பறந்தார் தெரியுமா?
3) வின்சன்ட் சேர்சிலில் தாயார் அமெரிக்கன் என்பது உமக்குத் தெரியுமா ?
4) ஒபமா மாமா கறுப்பர் எண்ட்து உமக்குத் தெரிஞ்சிருக்கும் .
5) சோனியா மாமி இத்தாலியன் எண்டது தெரிஞ்சிருக்கும் .
6) எம்ஜிஆர் மலைகத்தில் பிறந்தவர் உமக்கு தெரியுமோ?
7)திராவிடர் கழகம் உருவாக்கி , திமுக , அதிமுக வழி திறந்த , ஈ.வே.ரா பெரியார் தமிழர் அல்ல அவர் ஒரு தெலுங்கர் எண்டது தெரியுமோ?
8) முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி பிரெஞ்சு பரம்பரை இல்லை என்பது எமக்குத் தெரியுமா ?
9) பிரித்தானிய மகாராணி ஜெர்மன் பரம்பரை என்பது உமக்குத் தெரியுமா ?
இவ்வளவு வாசிக்க எழுத தெரிஞ்ச எனக்கு தமிழ் எழுத தெரியாமல் நான் இருக்கிறேன் என் நீங்கள் நினைத்தால் நல்லது தானே. பெரிய “கவி” யே!!
go and watch the new film Dealing with idiots !!! (2013 ) HD மடையர்களுடன் பழகுதல் பற்றி ஒரு நகைச்சுவைப் படம் வெளியாகி இருக்கின்றது .
ஒரு பழமொழியையும் படித்தேன் .
When in doubt, make a fool of yourself. There is a microscopically thin line between being brilliantly creative and acting like the most gigantic idiot on earth. So what the hell, leap.
Cynthia Heimel
Read more at http://www.brainyquote.com/quotes/keywords/leap.html#OcfuQaPCxYspFkjt.99
உயர்திரு நித்தியானந்தன் அவர்களே ,
நீங்கள் உங்கள் உள்ளக் கிடைக்கையை அழகான வரிகளில் சொல்லியிருக்கின்றீர்கள்.
உங்கள் வரிகளில் உள்ள கருத்துக்களை 100% எவரும் ஏ ற் றுக்கொள்ள வேண்டும் அன்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எவருக்கும் நீங்கள் பதில் கூற வேண்டியதில்லை
எனக்கு உங்கள் வரிகளில் 95% ஏற்புடையதாக இருக்கின்றது. அதற்காக எனக்குப் பிடிக்காத அந்த 5% வரிகளை நான் பெரிதுபடுத்தவில்லை நாம் 95% உடன்படுகின்றோம் என்பதுதான் முக்கியம்.
எனக்குப் பிடிக்காத அந்த 5% வரிகளுக்காக 95% எனக்குப் பிடித்த வரிகளை கூறிய உங்களுடன் நான் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன் . உங்களை நண்பனாக்க விரும்புகின்றேன்
நான் அந்த 5% பற்றிக் கேள்விகள் கேட்டாலும் நீங்கள் அதற்குப் பதிலளித்து உங்கள் நிலையத் தாழ்த்த வேண்டாம்
நான் ஆத்திரத்தில்.. போதிய விளக்கமின்றி … ஏதாவது கூறவேண்டும் என்ற உந்துதலில் … உங்களை விமர்சித்தாலும் ” தெரு நாய் குரைப்பது அதன் குலத் தொழில் ” என்ற தெளிவுடன் நீங்கள் எனது கூச்சலை உதாசீனம் செயிதுவிடுங்கள் .
நீங்கள் 10 ம் வகுப்புக்கு கணித பாடம் எடுத்தால் 9ம் வகுப்பு முடித்தவனுக்கு உங்கள் போதனை புரியும் . அங்கு தவறுதலாக 4ம் வகுப்பு கணிதபாடம் முடித்தவன் இருந்தால் … அவனுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல முயன்றால் ….. இந்த ஒருவனுக்காக மற்றைய மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் படுவார்கள்.
அனால் கணிதம் பற்றி ஒன்றுமறியாத குழந்தைகளின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறி அவர்களை வெல்ல முடியாது. ஆனால் அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் அவமானப்பட வேண்டி வரலாம்
நீங்கள் தயவு செய்து… இங்கு வரும் குறிப்புகளுக்குப் பதிலளித்து உங்கள் நேரத்தையும் மதிப்பையும் செலவழியாமல் …. அடுத்த கவிதையை இங்கு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
எனது கருத்துக்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்னைத் திட்ட விரும்புபவர்கள் எனது kuddy60@gmail.com விலாசத்திற்கு உங்கள் வசை பாடலை அனுப்பலாம்
////ஐயா உமக்கு சிறீலங்கா குடியுரிமை இன்னும் இருக்கா (எனக்கு இருக்கு)//// எண்டு சொல்லியிருக்கின்றீர்கள் .
உங்களுக்கு சிங்கள பவுத்த எகாதிபத்திய குடியரசின் குடியுரிமையையும் பெரிசா இருக்கலாம் நான் அப்படி அல்ல .
சிங்கள பவுத்த குடியரசையும் அதன் அடக்கு முறைச் சட்டங்களையும் எதிர்த்து 1972 இல் சோலபரியின் 29 ஆவது சரத்து நீக்கப்பட்ட சிங்கள பவுத்த பேரின வாத குடியரசுக்கு எதிராக போர்க்குணம் கொண்டெழுந்ததால். சிங்கள பவுத்த இனவெறி அரசினால் அரச எதிரியாக்கப்பட்டவன் என்பதையிட்டு நான் கவலை கொள்ளவில்லை.
எனக்கு அந்த குடியுரிமை தேவையில்லை. முடிந்தால் தமிழீழ குடிமக்னாக வருவேன். இல்லையேல் எனது ஆசைகள் என்னுடன் இங்கேயே மரணிக்கும் . உங்களைப் போல முதுகில் குத்தும் ஆட்கள் இருக்கும் வரை தமிழீழம் சாத்தியமில்லை .
நேர்மை அற்றவர்கள் யாராய் இருந்தாலும் இறுக்கமான நடவடிக்கை எடுத்த பொழுது தான் எமது விடுதலை இயக்கம் பலம் பெற்றது .
மாத்தையாவை போட்டுத் தள்ள துணிந்த நாம் கருணா வகையறாக்களை சண்டையில் வீரன் என்பதற்காக போட்டுத் தள்ள தயங்கினோம் .
புலம் பெயர் தேசத்தில் அயோக்கியர்களை அரவணைத்தோம் . அவர்கள் பணம் ஈட்ட்டினார்கள் . ஒருபகுதியை கொடுத்தார்கள் .
விளைவு தான் கீழே படமும் ஏனைய அழிவுகளும் .
இது எவரும் மறுக்க முடியாத உணமை .
அந்த தயக்க பாதையில் இருந்து மீண்டு இனிமேலாவது யாராய் இருந்தாலும் பிழை என்றால் பிழை என நாம் முடிவெடுக்க தயங்கினால் தமிழினம் முற்றாக அழியும் .
போட்டுத் தள்ளும் காலம் போய் விட்டதென்றால் விலக்கிவைப்போம் . உம்மைப் போல ஐயா விக்கினேச்வரன் அற்புத மான மனிதர் ஆனால் பொய் பேசுகின்றார் என்ற அர்த்ததில் இரண்டை நாக்கு அயோக்கியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள் It is not easy to catch criminals . we have to have long conversation with them . most of the time they will plan and talk but in long conversation THEY WILL SLIP AND GIVE OUT SIGNS OF THEIR CRIMINAL MIND . A GOOD INVESTIGATOR WILL IDENTIFY THOSE WORDS AND DEVOLOPE FURTHE . I STRONGLY BELEIVE THAT 99% OF WHAT YOU SAY IS TRUE BUT YOUR CRIMINAL MIND SLIPED OUT BY THE BACK STABING WORDS ஐயா விக்கினேச்வரன் அற்புத மான மனிதர் ஆனால் பொய் பேசுகின்றார் என்ற அர்த்ததில் இரண்டை நாக்கு அயோக்கியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள் read this book if wish to learn how criminal are caught =Justice Wigneswaran will easily identify guys like =====A Pragmatic Analysis of Legal Proofs of Criminal Intent .
/////உங்கள் வரிகளில் 95% ஏற்புடையதாக இருக்கின்றது. அதற்காக எனக்குப் பிடிக்காத அந்த 5% வரிகளை நான் பெரிதுபடுத்தவில்லை-Sivas ///////When Karuna nay was thrown out he was 99 % persent correct simmilarly when Mathaiya was shot he was 99% correct . When sudaram was shot he was 99 % correct , same to patric and michel , do you think these decisions are wrong? we have to see the impact of that 1% not the persentage mathematics is different from real life . We think 5 times Zero is Zero . do you know there is no such think as zero . that is why any number divided by zero is infinity because Zero is a very very small decimal number.
Nithi is giving தேனில் கலந்த நஞ்சு. He is back backstabbers. on the one hand he praise CVW on the other hand he identifies him as a cheat . this is where back satbbing is exposed . this is a serious contradiction although it is jut one line from entire poem .============if we ignore it ie turn our back you will get stabbed ========Dealing with backstabbers, there was one thing I learned. They’re only powerful when you got your back turned
Read more at http://www.brainyquote.com/quotes/quotes/e/eminem387441.html#Z65cq7uAaYfFSqyI.99
/////உங்கள் வரிகளில் 95% ஏற்புடையதாக இருக்கின்றது. அதற்காக எனக்குப் பிடிக்காத அந்த 5% வரிகளை நான் பெரிதுபடுத்தவில்லை-Sivas ///////When Karuna nay was thrown out he was 99 % persent correct simmilarly when Mathaiya was shot he was 99% correct . When sudaram was shot he was 99 % correct , same to patric and michel , do you think these decisions are wrong? we have to see the impact of that 1% not the persentage mathematics is different from real life . We think 5 times Zero is Zero . do you know there is no such think as zero . that is why any number divided by zero is infinity because Zero is a very very small decimal number.
Nithi is giving தேனில் கலந்த நஞ்சு. He is back backstabbers. on the one hand he praise CVW on the other hand he identifies him as a cheat . this is where back satbbing is exposed . this is a serious contradiction although it is jut one line from entire poem .============if we ignore it ie turn our back you will get stabbed ========Dealing with backstabbers, there was one thing I learned. They’re only powerful when you got your back turned
Read more at http://www.brainyquote.com/quotes/quotes/e/eminem387441.html#Z65cq7uAaYfFSqyI.99 நேர்மை அற்றவர்கள் யாராய் இருந்தாலும் இறுக்கமான நடவடிக்கை எடுத்த பொழுது தான் எமது விடுதலை இயக்கம் பலம் பெற்றது .
மாத்தையாவை போட்டுத் தள்ள துணிந்த நாம் கருணா வகையறாக்களை சண்டையில் வீரன் என்பதற்காக போட்டுத் தள்ள தயங்கினோம் .
புலம் பெயர் தேசத்தில் அயோக்கியர்களை அரவணைத்தோம் . அவர்கள் பணம் ஈட்ட்டினார்கள் . ஒருபகுதியை கொடுத்தார்கள் .
இதன் விளைச்சல் தான் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அழிவுகள்
இது எவரும் மறுக்க முடியாத உணமை .
அந்த தயக்க பாதையில் இருந்து மீண்டு இனிமேலாவது யாராய் இருந்தாலும் பிழை என்றால் பிழை என நாம் முடிவெடுக்க தயங்கினால் தமிழினம் முற்றாக அழியும் .
போட்டுத் தள்ளும் காலம் போய் விட்டதென்றால் விலக்கிவைப்போம் . அயோக்கியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள் .
ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு வேறான முடிவை எதிர் பார்ப்பது பைத்தியக் காரத்தனம்
Mr Sivas ///////அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார்.
உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். ”
Mr Sivas ///// என்று நீர் விடுதலைப் புலிகள் தலமை படிக்காத மொக்கு என பட்டம் சூட்டி எழுகிதினது நினைவிருக்கா ? என்னிடம் ஆதாரம் இருக்கு . இப்ப எனக்குத் தெரியுது முதுகும் குத்தும் நித்தியானந்தன் மீது உமக்கு ஏன் கரிசனை என்று . இனி ஒரு வாச்கர்களே இப்ப புரியுதா ஒண்ணும் இரண்டல்ல இவர் சொன்ன கணக்கு பாடம் ஒண்ணும் ஒண்ணும் ஒண்டாய் சேரும் . அது சரி குலோபல் ரெலிகொம் பிசினஸ் எப்ப்டிப் போகுது சிவாஸ் எஞ்சினியர் அண்ணே? பெரும்பாலான புத்தகப் படிப்பில் பட்டம் பெற்றவன் படித்ததை நினைவில் நிறுத்தி எழுத தெரிந்தவன் . அது புத்திசாலித் தனம் அல்ல . இது குறிப்பாக ஈழத் தமிழரிடம் உள்ள ஒரு மூட நம்பிக்கை சட்டத் தரணி, எஞ்சினியர் , டாக்குத்தர் எண்டவுடன் புத்திசாலி எண்டு நம்புரது முழுமையான மூடத்தனம் அண்ணே!!!.
இனப்படுகொலை நடக்குது எண்டதை புரிந்து கொண்டு ஆயுதப் போரே வழி எண்டு 1970 களில் ஆயுதப் போருக்கு புறப்பட்டாங்களே அவங்கள் புத்திசாலிகள். பட்டம் பெற்றவனுகள் எவனும் அதில் இருக்கவும் இல்லை . அந்தளவுக்கு அவங்கள் புரியிற மூளைசாலிகளும் இல்லை . குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்டா !!!! சமூக வாழ்வில் முழுநேரமாக 30 வருடம் கழித்த தலைவர் எத்த்தனை பேராசிரியரை விடவும் சமூகவியல் புரிஞ்சவர்