22.01.2009.
வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது.
மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீலங்கா அரசு இனவாத அரசு சாதிய வாத அரசு என்பதை நீருபித்துள்ளது. அருணாசலம் இராமநாதன் கதிர்காமர் போன்ற வேளாள எடுபிடிகளின் பெயர்களில் குடியேற்ற கிராமங்களுக்கு பெயர்கள் வைக்கிறது. எமது இலங்கைத் தலித் தலைவர்களான தந்தை டானியல் யோவேல்போல் எம்.சி.சுப்பிரமணியம் தர்மகுலசிங்கம் எஸ். ரி நாகரத்தினம் போன்ற எம் தலைவர்கள் பெயர்கள் இந்த இனவாத சாதிய அரசுக்கு ஞாபகத்தில் வரவில்லை.சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக இலங்கைத் தலித் மக்களாகிய நாம் ஒன்றிணைந்து எதிர்ப்பை காட்டுவோம் வாரீர்.
/எதிர்ப்பை காட்டுவோம் வாரீர்./
மணியண்ணை எங்க வாறது? பிரான்சுக்கோ?
மிளகாய் அரைக்கிறதுக்கு தலித் மக்களா கிடைத்தார்கள்? இன்னும் கொலைவெறி அடங்கவில்லையா?
ஒடுக்கப்பட்ட மக்களின் லிடுதலைக்காக போராடிய இப்போராளிகளின் பெயர் தலித கம்பனிகளில் இருக்கும் பலருக்கே தெரியாது! எப்படி மகிந்தாவிற்கு தெரியும்? அது சரி மணியண்ணை சிங்கள அரசு> இனவாத- சாதியவாத அரசென்று இப்பதான் கண்டுபிடிபிடித்திருக்கிறியள் போல கிடக்கு! தலித்பித்தம் தலைக்கேறினால் பகுப்பாய்வுகளும் தடுமாறியே வரும்! முதலில் உங்கள் தடுமாற்றத்திற்கான போராட்டம் பலமுனைகளில் பலதளங்களில் முன்னெடுக்கப்படவேணடும்!
சீதாஎலிய/ இராமநாதபுரம் இதுகள் போல கற்பனையில பிறந்த கதாபாத்திரங்கள் பெயாpலயே ஊர்கள்? ஏதோ நிஜத்தில தமிழ் சிங்கள அரசியலோட இணைந்து வாழ்ந்த நபர்களில இந்த மூணு பேரும் தான் மகிந்தவின் சிந்தனைக்கு முதலில் தொpந்த பெயர்களாக்கும் விடுங்கோவன் பெயாpல என்ன கிடக்குது.
அடுத்தடுத்து கிராமம் அமைக்கும் போது உங்க லிஸ்ட மகிந்தயிட்ட குடுங்க மணியண்ண.
குடுக்கயிக்க நீங்கள் சொன்ன பேர்வழிகளை போராட்டத்துக்கு அறிமுகம் செய்தவர்களையும் கொஞ்சம் நன்றியோட நினைச்சுப் பாருங்கோ!
கரவலைக்குப் போயிட்டுக் காசோட வந்தவனை காசு அழியட்டும் எண்டு கூத்தாசை காட்டுவது போல இருக்கு மணியண்ணை!
நிச்சயமா அடிச்சுச் சொல்லுவன் நீங்கள் சாதி வெள்ளாளனண்ணை!
குழப்புறியள்.!!!!!!
//நிச்சயமா அடிச்சுச் சொல்லுவன் நீங்கள் சாதி வெள்ளாளனண்ணை//
சாரணியன் நீங்க எப்ப பார்த்தாலும் பிழையாகவும் தவறாகவுமே சிந்திக்கிறீர்கள். நான் வேளாள தலித்தியவாதி இல்லை. என் பிறப்பு யாழ்ப்பாண தலித் என்பதை எங்கையும் ஓர்மமாக சொல்ல வைக்கும். மகிந்தா அரசு உங்களுக்கு பெரிசு. எனக்கு என் மக்கள் பெரிசு. அவர்கள் வாழ்க்கை பெரிசு. என் மக்களை யாழ்ப்பாண வேளாளாகளும் மகிந்த அரசும் எப்படி கைகோர்த்து எங்களை அடிமையாக்குகிறது என்பதைக்கு எங்களை பேயன்கள் ஆக்குகிறது என்பதற்கு இந்த கிராமத் திட்டம் உதாரணம். மகிந்தா பயித்தியத்திலிருந்து விடுபடுங்கள். மக்களை பற்றி சிந்தியுங்கள்.