இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அவசரமாக அகற்றிக் கொள்வது ஆரோக்கியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு சாரார் தொடர்ந்தும் ஈழம் பற்றிய கோரிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் இயங்கி வந்த சகல இயக்கங்களினதும் ஆயுதங்கள் முற்று முழுதாக களையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Over all they do not know what to do with many things especially in the North and East.