இலங்கையின் வட்க்கிலும் கிழக்கிலும் இப்போது மலையகத்திலும் இராணுவ ஆட்சி நடைபெற்றுவருகின்றது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற நிலையில் இராணுவ ஆகிரமிப்புத் தொடர்கிறது. இந்த நிலையில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்க அரசின் 2012ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மீது உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, “தேச பாதுகாப்புக் கருதி மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவ முகாம்கள் ஒருபோதும் நாம் அகற்றப்போவதில்லை” என்று பேசியுள்ளார்.
கிளிநொச்சியில் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதும் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என குடும்ப சர்வாதிகாரி மகிந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.