05.01.2009.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ கோணத்தில் மட்டுமாக தீர்வுகாண முடியாது என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்த பின்னர் இந்திய அரசு வெளியிடும் முதல் கருத்து இது.
“இராணுவ ரீதியிலான வெற்றி என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசியல் ரீதியான அம்சமும் உள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் நலமுடன் வாழும் வகையில் ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அந்தப் பாதையில் முன்னேற்றம் இல்லாமல் அங்கு அரசியல் தீர்வு குறித்து பேச இயலாது.” என்று ஷிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.
தவிர இந்தப் பிரச்சினையில் மனிதாபிமான கோணத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த கோணத்திலும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இந்தியா அக்கறை காட்டிவருகிறது என்றும் ஷிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.