Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

“இராணுவ ஆசிரியர்கள்” என்பது இராணுவ மயமாக்கலின் உச்சகட்டம் : மனோ கணேசன்

இனியொரு... by இனியொரு...
01/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

– யாழ், வன்னி எம்பீக்களும், ஆசிரியர் சங்கங்களும் உடன் களமிறங்க வேண்டும் என்கிறார் மனோ கணேசன்

கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம். இது நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள, இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசையே அப்பட்டமாக மீறுகிறது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை உடனடியாக சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐநா அமைப்பின் கீழ் வரும் யூனேஸ்கோ (UNESCO) என்ற ஐநா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து இதுபற்றி தமது சர்வதேச ஆசிரிய அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கை இராணுவம் முதலில் எந்தவித சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் இல்லாமல் பெண்களை இராணுவத்துக்கு சேர்த்தது. இப்போது வட மாகாண கல்வி அமைச்சு மூலமாக இந்த இராணுவ ஆசிரியர் செயல் முன்னெடுக்கப்படுகிறது.

பாடசாலைகளில் சிங்கள மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை போதிக்க ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் இராணுவ ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், கல்வி போதிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் முன்னுக்கு பின் முரணாக தெரிவிப்பது விசித்திரமானது.

தென்னிலங்கையிலும் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் இங்கு இராணுவ வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக பணிக்கு அமர்த்தப்படுவதில்லை.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவுமானால் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்வி தகைமை மற்றும் பயிற்சி பெற்றுள்ளவர்கள் இருக்கின்றார்கள். நிறைய பட்டதாரிகள் தொழில் நியமனங்களுக்காக காத்திருக்கிறார்கள். பல்வேறு பாடாசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற பல ஆசிரியர்கள் உரிய நியமனங்களுக்காக காத்திருக்கின்றார்கள். இவற்றை கணக்கில் எடுக்காமல், பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஒரு காரணமாக கொண்டு பாடசாலைகளுக்குள் இராணுவ ஆசிரியர்களை கொண்டு செல்வது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.

கல்வித்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்குள் வருகிறது. வடக்கில் மாகாணசபை இல்லை என்ற காரணத்தால் முன்னாள் இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி சட்டத்தை தனது கையில் எடுத்துகொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார். இந்த நடவடிக்கையை மாகாணசபை அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியாது. மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படவும் முடியாது. உண்மையில் வடக்கில் மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் இது இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்காணிப்புகளின் கீழ் வருகிறது.

எனவே கிளிநொச்சி மாவட்டம் உள்வரும் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும், முல்லைத்தீவு மாவட்டம் உள்வரும் வன்னி தேர்தல் மாவட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் இது தொடர்பாக கட்சி அரசியல் பேதங்கள் இல்லாமல் உடனடியாக களமிறங்கி இந்த நடவடிக்கையை எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என நான் கேட்டுகொள்கிறேன்.

உண்மையில் இந்த அரசாங்கம் கதை வசனம் எழுதி தயாரித்து சர்வதேசத்தில் திரையிட்ட கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சிபாரிசுகளையே இந்த நடவடிக்கை மீறுகிறது. அந்த அறிக்கையில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று குறைப்பதை விடுத்து இந்த அரசாங்கம் தமிழ் சமூகத்தின் அனைத்து அம்சங்களிளும் இராணுவத்தை திணிக்கிறது.

இதை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துமூலம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் இதை உடனடியாக கொழும்பில் உள்ள ஐநா அமைப்பின் கீழ் வரும் யூனேஸ்கோ (UNESCO) என்ற ஐநா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும் நான் கேட்டுகொள்கிறேன்.

அதேபோல் முல்லை, துணுக்காய், கிளிநொச்சி கல்வி வலயங்களில் நடைபெற ஆரம்பித்துள்ள இந்த சட்ட விரோத நடவடிக்கையை தொழில்ரீதியாக எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும், இதுபற்றி ஆசிரிய தொழிற்சங்கங்கள் தமது சர்வதேச ஆசிரிய அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும் நான் கேட்டுகொள்கிறேன்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
போர்க்குற்ற வழக்கில் கைதான நேபாள கேணல் : கம்யூனிஸ்ட் கட்சி பிரித்தானிய அரசிற்குக் கண்டனம்

போர்க்குற்ற வழக்கில் கைதான நேபாள கேணல் : கம்யூனிஸ்ட் கட்சி பிரித்தானிய அரசிற்குக் கண்டனம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...