சில ஆண்டுகளுக்கு முன்னர் தனி ஈழம் கோரி ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய கருணா இன்று போலிஸ் அதிகாரங்கள் தேவையற்றது என்கிறார். இலங்கை இந்திய அரசுகளின் பின்னால் அறிக்கை நாடகம் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாதா அமைச்சர் மேர்வின் டி சில்வாவின் தமிழ் முகம் போன்று செயற்படும் கருணா கொலை, ஆள்கடத்தல், ஆள்மாறாட்டம் போன்ற பல குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்.
மாகாணங்களுக்கு காணி அதிகாரத்தை வழங்குவது ஓரளவிற்கு சாத்தியமாகும் விடயம் என்றாலும், பொலிஸ் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக கூட்டமைப்பினர் எவ்விதமான நன்மையை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போகின்றனர் என்ற கேள்வியைக் கேட்டதுடன் , 75 சதவீதமான சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெறுவது சாத்தியமற்ற விடயம் எனவும் பிரதியமைச்சர் கருணா குறிப்பிட்டார்.