வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன.
நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்கு வரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. இது யுத்த காலத்துக்குப் பிறகு, வவுனியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உலகத்தின் இன்றைய நிலைமையாகும்.
தொழிலொன்றைச் செய்தல், உணவு பானங்களைத் தயாரித்தல், வீடுகளைக் கட்டுதல், மகிழ்வாக இருத்தல், வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளல் போன்ற இன்னும் மக்களிடையே மறைந்துவிடாத அனைத்தும் சாதாரணமாகப் பொதுமக்கள் சமூகமொன்றுக்குள் மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த நடவடிக்கைகளாகும். யுத்தத்தின் காரணமாக மேற்சொன்ன நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியான தடங்கல்கள் ஏற்படுவதே பொதுமக்கள் சமூகத்துக்குத் தலைவலியாக அமைகிறது. இன்னுமொரு புறத்தில் ஏதேனுமொரு குழுவினரது வாழ்க்கை முறைகளுக்கு, நடைமுறையிலிருக்கும் அரசியல் நிலைமையானது தடங்கலாக அமைவதற்கு எதிராகத்தான் யுத்தமொன்று உருவாகிறது.
யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரைப் போலவே, யுத்தகாலத்திலும்கூட வவுனியாவைத் தாண்டிய உலகத்தின் மீது சுமத்தப்பட்ட தடங்கல்கள் காரணமாக மனித உயிர்களைத் தியாகம்செய்ய நேர்ந்தது. இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் யுத்தம் முடிவுற்ற பிற்பாடு மீள அளிக்கப்படும் எனச் சொல்லப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையானது, வவுனியாவைத் தாண்டிய உலகுக்கு மீள அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வியாக உள்ளது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்க்கும்போது, அவ்வாறான அமைதியான வாழ்க்கையொன்று அங்குத் தென்படுவதில்லை.
வவுனியாவைத் தாண்டிய மக்களது வாழ்க்கை எதிர்பார்த்த இடத்தை விடவும் மிகவும் கீழேயே இன்றும் உள்ளதென்பதை, இலங்கையை முன்மாதிரியாகப் பார்ப்பவர்களிடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஏ9 வீதியில் அமைந்திருக்கும் அனேகமான உணவகங்களில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிப்பதும் தேநீர் தயாரிப்பதும் இராணுவத்தினராலேயே நடைபெறுகின்றன. மிகவும் ஒழுங்கான முறையில், தூய்மையாக (இராணுவ ஒழுங்குகளுக்கு அமைய) நடாத்தப்பட்டுவரும் இந்த உணவகங்களின் உரிமையாளர்கள் வேறு யாருமல்ல, பாதுகாப்பு அமைச்சுதான்.
இவ்வாறு இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது யுத்தத்தின் பிறகு மக்களுக்கு மீள அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரங்களும்தாம்.
அநுராதபுரம் ஸ்ரீ மஹாபோதியை வணங்கச் செல்கையில் பிரபாகரனைக் கொன்ற இடத்தையும் பார்த்துவிட்டு வரவென இப்பொழுதும் வரிசையாகச் சென்றுகொண்டிருக்கும் தெற்கின் மக்களால் இந்த உணவகங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. பாதுகாப்பு அமைச்சானது, இந்த வருமானத்தின் மூலம் இம்மக்களை அச்சுறுத்தவெனவே இன்னுமின்னும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இல்லாவிடில் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேமிக்கிறது. யுத்தத்தின் பிறகு ஏ9 வீதியோரத்தில் கடையொன்றை நிறுவிக்கொள்ளக் கனவுகண்ட மனிதன் இராணுவ உணவகமொன்றில் சிங்களத் தேநீரைச் சுவைத்துவிட்டு வீடு செல்கிறான்.
இராணுவமானது மாலை நான்கு மணி தாண்டியதன் பிறகு விளையாடத் தொடங்குகிறது. மைதானங்களில் விளையாடப் பந்துகளை எடுக்கிறது. ஏ9 வீதியில் சைக்கிள்களில் ஓடுகிறது. எனினும் விளையாடக்கூடிய சாதாரண இளைஞர், யுவதிகளைக் காண முடியவில்லை. ஒன்று, விளையாடியவர்கள் இன்னும் அகதி முகாம்களில் இருக்கக்கூடும். இல்லாவிடில் வீட்டைவிட்டும் வெளியே வராதிருக்கக்கூடும்.
அனுராதபுரம், மாத்தறை, அவிஸ்ஸாவெல்லையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் (இராணுவப் படையினர்) ஓமந்தை மைதானங்களில் பந்து விளையாடுகையில் ஓமந்தை இளைஞர், யுவதிகள் அகதிமுகாம்களுக்குள்ளோ வீடுகளுக்குள்ளோ அடங்கியிருக்கக்கூடும்.
ஓமந்தைக் கொண்டாட்டங்கள் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மஹரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன. இராணுவமானது, மதத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு அடிக்கொன்றாக நிறுவப்பட்டிருக்கும் பௌத்தக் குறியீடுகளின் காரணமாகத் தாம் வேற்று மனிதர்கள் என்றே மக்களுக்குத் தோன்றுகிறது.
இப்புத்தர் சிலைகளுக்குப் பக்கத்திலேயே ‘ஒரே இனம், ஒரே நாடு’ என ஆங்கிலத்திலும் தமிழிலும் விசாலமான விளம்பரக் கட்அவுட்கள் நிறுவப்பட்டுள்ளன. சிலவேளை, இராணுவமானது ‘ஒரே இனம், ஒரே நாடு’ என்பதில் சிங்களப் பௌத்தர்களை மட்டுமே காண்பதாக இருக்கக்கூடும்.
ஆகவே இவ்வாறு தெற்கிலிருந்து சென்றுள்ள இராணுவமானது வவுனியாவைத் தாண்டி இன்னுமொரு தெற்கை உருவாக்குகையில் அப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
இன்று வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறாயினும் அப்பிரதேசங்களில் இன்னுமொரு தெற்கு உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பது மட்டும் தெளிவானது. இராணுவத்தின் தெற்கு மனிதர்கள் வடக்கில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிக்கையில், பந்து விளையாடுகையில், புத்தரை வணங்குகையில் அப்பிரதேசத்து மக்கள் ‘வாய்ச் சொல் தவறினால் மரணம்’ என்பதை நன்கு அறிந்திருப்பதால் அமைதியாக இருக்கின்றனர்.
தெற்கின் கலாசாரங்கள் எந்தளவு வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றதெனில் இன்று தெற்கின் குளியல் இடங்களிலும் கூரைகளிலும் பதுங்கியிருக்கும் ‘கிறீஸ் பூதங்கள்’கூட* வடக்குக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள், சந்தோஷங்கள், சமயம் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் இப்போது இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதோடு, இன்று உண்மையில் வடக்கில் பொதுமக்களது வாழ்க்கையை வாழ்வது இராணுவத்தினர் மட்டுமே. சாதாரண வாழ்க்கையொன்றைக் கனவுகண்ட மக்கள் யுத்தகாலத்தைப் போலவே இப்பொழுதும் தமது வாழ்க்கையைத் தியாகம்செய்தபடியிருக்கிறார்கள்.
இங்குக் காணப்படும் முக்கிய அம்சமானது தெற்கின் வாழ்க்கையை வடக்கில் கழிப்பதற்காக அரசாங்கத்தால் இராணுவத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதாகும். ஆகவே இராணுவமானது அந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள இன்னுமின்னும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டும், பந்து விளையாட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவ வேண்டும், கிறீஸைப் பூசிக்கொள்ள வேண்டும்.
சிங்கள மொழி மூலம்: கெரபொத்தா
தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
Published on: Dec 17, 2011 @ 1:02
இதற்க்காகத் தா னே எம் இனத்தின் கருங்காலிகள் அயராது உழைத்தார்கள். இனி அழுது என்ன பயன். இந்த அசிங்க அநாகரிகங்களை விரட்டுவதற்கு வழி என்ன என்பதனை யோசிப்போமா?
இலங்கை ராணுவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கியுள்ளீர்கள். நன்றி.
சந்திரன் ராஜா போன்ற கருத்தாளர்கள் இவ்விடத்திலும் தமது கருத்துக்களை பதிவு செய்வதில் ஏன் பின்னடிக்கின்றனர் அல்லது பார்வை குறைபாடு உடைய ஒருவர் குறுகிய துவாரம் ஒன்றின் ஊடாக பார்த்து எதுவும் தெரியவில்லை எனக் கூறும் நிலைமையில் உள்ளனர்???? உங்களது மனநிலை கெளிம பாற பிட்ட கொட்டுவா மட்டும் தானா? அன்றி கோட்டே ராச்சியத்தின் கீழ் ஒரே இனம் ஒரே நாடு தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வா?
ஏன் அவர் பதில் தர வேண்டும், இறுதி யுத்தம் என்று உங்களிடம் பணம் கேட்டவர்களிடம் கேளுங்கள், பதில் தருவார்கள்,
வீரன் போன்றவர்களிடம் இதற்கு நிச்சயம் பதில் இருக்காது. ஏன் என்றால் ” பானையில் இருந்தால்தானே , அகப்பையில் வருவதற்கு “. புலிகளின் சில தவறுகளை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு அவர்களின் போராட்டத்தின் பெரும்நியாயங்களை அறிய முயற்சிக்கவுமில்லை, அதில் ஆர்வமும் இல்லை. வீரன் போன்றவர்கள்
யாழ்பாணத்தில் மேட்டுக்குடி மக்கள் மாத்திரம் வாழ்கிறார்களா? அல்லது, அன்றி அதனால் தமிழர்கள் எல்லோரும் மேட்டுகுடிகளா? யாழ்பாணத்தில் மேட்டுக்குடி மக்கள் வாழ்வதால் அனைத்து தமிழ் மக்களும் ஒரே தண்டனையையும் அவலத்தையும் பெற வேண்டுமா? என்பதையும் சந்திரன் ராயா தனது பதிலில் தெளிவுறுத்த வேண்டும். கெரபொத்தா விளங்கி கொள்ளும் அளவிற்கு எமது கரப் பொத்தான்கள் எதனையும் விளங்கி கொள்வதில்லை. இதுவும் ஒரு மேட்டிமை விசுவாசம் தான்.
ஐயா போராட்டம் தவறான வழியில் புலிகலாலந்டத்தப்பட்டதால் அது தோற்று விட்டது, கொலை செய்வதன் மூலம் விடுதலை பெரலாம் என்று அவர்கள் எண்ணியதால் இந்தநிலை, ராஜபக்சவை சர்வதேசநீதி மன்றத்தில்நிறுத்துவதாக சொல்வது எல்லாம் கண்துடைப்பே, அப்படி செய்வதனாலும் இன்னும் 20 வருடம் போகலாம், அதற்குள் வடக்கும் கிழக்கும் சிங்கள பிரதேசமாகும், மலையகம் உற்பட, அவர்கள் தாங்கள்நினைத்ததை செய்து விட்டனர், வழி சமைத்து கொடுத்தவர்கள் வெளிநாட்டு தமிழர்களும், புலிகலும்,நீங்கள் வேண்டுமானால் கூட்டம் போட்டு ராஜபக்சவை திட்டலாம், இணையத்தள்த்தில் எழுதலாம், அதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் குறையலாம், வெறு ஒன்றும்நடக்காது, இந்த யாழ்பாணிகளின் போராட்டம் இப்படி தான் முடியும் என்று எனக்கு 87 ஆண்டே தெரியும், இனீமேல் இரண்டாம் மூன்றாம் தர பிரசையாக இருக்க பழகுவதை தவிர வேறு ஒன்றும்நீங்கள் வெளிநாட்ட்டில் இருந்து கிழிக்க முடியாது
“ஜயா போராட்டம் தவறான வழியில் புலிகளால் நடத்தப்பட்டது ” > வீரன்.
புலிகளால் போராட்டம் தவறாக வழிநடத்தப்படுகின்றது என்று தெரிந்தபின்பும்நீர் ஏன் வீட்டில் படுத்துக் கிடந்தனீர்- வீதிக்கு வந்து , மக்களைஒன்று திரட்டிப் போராடி இருக்கலாம் தானே. எப்படி செய்வீர்கள்: உண்மையிலேயே உம்மைப் போன்ற்வர்களிற்கு இன , மண் பற்று அல்லது விடுதலை உணர்வு இருந்தால்தானே.
“கொலை செய்வதன் மூலம் விடுதலை பெறலாம் என்று புலிகள் எண்ணியதால்”->வெத்து வீரன்.
உலகில் எத்தனைநாடுகளின் விடுதலை ” கொலை” செய்வதன் மூலமே பெறப்பட்டு இருக்கின்றது என்று உமக்குத் தெரியாதா ? தவறானவர்களைக் கொன்று சரியான விடுதலையை அடைவது தப்பில்லை. உம்மைப் போன்ற்வர்களிற்கு , ஒரு தமிழன் இன்னுமொரு தமிழனை ஆளக்கூடாது , ஆனால் சிங்களவன் தமிழனை ஆளலாம். அடிமையாய் வைத்திருக்கலாம். அவனுக்கு சேவகம் செய்து யாசித்துக் கிடப்பீர்கள்:
“றாயபக்சவை சர்வதேசநிதிமன்றில் நீதி மன்றில் நிறுத்துவது கண்துடைப்பு>
சேர்பிய முஸ்லிம்களை படுகொலை செய்த குற்றத்திற்க்காக மிலோசவிற் சுமார் 20 வருடங்களிற்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார். காலமும் நேரமும் சரியாக வரும்போதுநிச்சயம் றாயபக்சவும் கைது செய்யப்படுவார். அதுவரை புலம்பெயர் போராட்டம் தொடரும். இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உம்மைப் போல வாய் பேச்சுடன்நாம்நின்றுவிடவில்லை.
” யாழ்ப்பாணிகளின் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று எனக்கு 87 ஆம் ஆண்டே தெரியும்> விசரன் மன்னிகவும் வீரன்
“யாழ் மக்களை விட , விடுதலைக்கு வன்னி, கிழக்கு மக்கள் பெரும் விலை கொடுத்தது உண்மை என்றாலும், தமிழனுக்கான விடுதலைப் போராட்டம் எந்த வடிவத்திலும் , எப்போது வந்தாலும் அது யாழ் மண்ணை விடுத்து விடுதலை பெறாது என்பதே உண்மை , யதார்த்தம் . படிப்பிலிம் சரி , விடுதலைக்கானா அடித்தளததை வித்திட்டதலும் சரி யாழ் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்;
வீரன் , நாய்க்கு ஏன் போர்த் தேங்காய்.நீர் தொடர்ந்து அடிமை வாழ்வைத் தொடரலாம். மண் விடுதலையை, போராட்டத்தைநாம் பார்த்துக்கொள்வோம். உலகில் எத்தனையோ னாடுகள் தங்கள் மண் விடுதலைக்காகாநூற்றாண்டு காலம் போராடி விடுதலை பெற்று இருக்கிறார்கள் என்பதை படித்துத் தெரிந்து கொள்ளவும். அல்லது படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். 35 வருடங்களில் எல்லாம் முடிந்து விட்டதே என்று நாம் , இதில்நிச்சயம் உம்மைச் சேர்த்து அல்ல, ஒரு போதும் மூலையில் முடங்கிக் கிடக்க மாட்டோம்.
” தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்”
” மாவீரர்களை நினைவு கூறுவோம் ” உறவுகளே.
இலங்கையில் தமிழர் விடுதலைக்கான போராட்டம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று, அந்தக்காலமுதலே போராட்டம் சரியான முறையில் நடாத்தப்பட்டபோது கொலையுண்டது நூறுவீதமும் தமிழர்களே. அதனால் அது கொலைகளாகத் தெரியவில்லை. போராட்டமும் தவறானதாகத் தெரியவில்லை. ஆனால் இன்று சிங்கள இராணுவத்தையும், சிங்கள காடையர்களையும், தமிழரிடையே உள்ள கோடாரிக்காம்புகளையும் அழிக்க முயன்றதால் அதனைத் தவறாகவும் கொலைகளாகவும் காட்சிப்படுத்த சிலர் அரும்பாடுபடுகிறார்கள். தமிழர் போராட்டம் வெற்றிபெறும் தருணத்தில் பிரபாகரனால் தவறான வழியில் நடாத்தப்பட்டு அது தோற்று விட்டதாக செய்திகள் பரப்புவதற்கு வீரன் போன்றவர்கள் முனைப்புடன் செயல்படுகிறார்கள். இதன் உண்மைக்காரணம் வேறாகவும் இருக்கலாம். நான் முன்பு குறிப்பிட்டது போல், கூட இருந்து குழிபறிப்போர் பெயரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடுகிறது. காட்டிக்கொடுப்போர் பலர் இருந்தாலும், வரலாற்றில் ஒருவரே இடம்பெறமுடியும். இராவணன் வரலாற்றில் ஒரு விபீடணன். கட்டப்பொம்மன் வரலாற்றில் ஒரு எட்டப்பன். சங்கிலியன் வரலாற்றில் ஒரு காக்கைவன்னியன். பிரபாகரன் வரலாற்றில் இடம்பெறுவதற்கு வீரன்போன்றவர்களும் போட்டியில் இறங்கியுள்ளதாகக் கொள்ளலாம். யாருக்கு அதிட்டம் அடிக்கிறதோ யாரறிவார் பராபரனே. உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரன் மாரடொனா இந்தியாவுக்கு வருகை தந்தபோது, பிரபாகரன் என்ற பெயரைக்கண்டதுமே அப்பெயருடையவனைக் கட்டிப்பிடித்து பரவசமடைந்ததாக செய்தியொன்றை இணையமொன்றில் படித்தேன், http://www.jvpnews.com/srilanka/2444.html பிரபாகரன் உலக சரித்திரத்தில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. பிரபாகரன் வரலாற்றில் ஒரு…………யார்???
SINHALA RACISM,CRUELTY,ARROGANCE,IDIOTISM,HATRED,LEALOUSY NEVER STOP! THESE ARE THE ROOT CAUSES OF THE CONFLICT! THOSE WHO NEVER UNDERSTAND THIS NEVER LISTEN!NEVER THINK! NEVER CHANGE! ALMIGHTY GOD PUNISH THEM ALL VERY SOON.!!!
JEALOUSY…UNWANTED FEAR ,INSECURITY,PARANOIA…BASIC PROBLEMS AMONG SINHALA LEADERS,POLICE,BUREAUCRATS,ARMY,THUGS…!!! THEY NEED PSYCO TREATMENT FROM UN/WHO…!!!
நன்றி கெரபொத்தா, உன் அறிவின் பார்வைக்கு தெரிவது veeran,chandran.raja போன்ற பெயர்களில் வலம் வரும் புல்லுருவிகளுக்கு எப்போதுமே தெரியப்போவதில்லை. காக்கைக்கு கனவிலும் எப்போதும் அதுதானாம் நினைவாம் என்பதுதான் அவர்கள் நிலை. எனினும்,பாவம் அவர்கள் குறைபட்டும் பயனில்லை மாற்று வலுவுள்ளோர் என்பதினால்.
புலன் பெயர்ந்த மன்னிக்கவும் புலம் பெயர்ந்த அரிச்சந்திரன் இங்கு வந்து போராட்டத்தை ஆரம்பிக்கலாமே
நிச்சயமாக, உம்மைப் போன்ற புண்ணாக்குகளின் புலன்களை அடக்குவதற்கும் அரிச்சந்திரன்களுடன் அரிச்சந்திரன்கள் இணைவார்கள்.
பூவோடு சேர்ந்த நாரும் கைலாசம் போகும்.
கூட இருந்து குழிபறிப்போர் பலர் இருந்தாலும்,
வரலாற்றில் ஒருவரே இடம்பெறுவார்கள்.
இராவணன் வரலாற்றில் ஒரு விபீடணன்.
கட்டப்பொம்மன் வரலாற்றில் ஒரு எட்டப்பன்.
சங்கிலியன் வரலாற்றில் ஒரு காக்கைவன்னியன்.
பிரபாகரன் வரலாற்றில் இடம்பெற போட்டியோ போட்டி
அப்படி ஒரு போட்டி.
அசோக மன்னன் முழு இந்தியாவையும் புத்த நாடாக மாற்றவில்லையா பின்பு குப்தன் வந்து மறுபடியும் இந்துநாடாக மாற்றினாரல்லவா.யாவிற்கும் ஒரு முடிவுண்டு அந்த நேரம் நிச்சயம் வரும்.
கூலிக்கு மாரடிக்கும் அடிமைகள் எங்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்,சில நாட்களாக டக்ளஸ்,கருணா,பிள்ளையான் போன்றவா்கள் குலைப்பது அதிகமாக உள்ளதை கவனிக்க முடிகிறது இதன் அா்த்தம் எங்கோ இவா்களின் நிலைப்பாட்டிற்கு ஆபத்து ஆரம்பமாகிவிட்டது என்றே உணரமுடிகிறது.
டக்ளசுக்கு ……….செய்யும் சந்திரன் ராஜா தன்ரை அரசியல் அறிவுத் திறமையை இதிலையும் வந்து கருத்து சொல்லலாமே .
கோடரிக் காம்பு கதை அவருக்கு தெரியும் என நினைக்கின்றேன் . சொன்னப்ப்போலை சந்திரன் ராசா அறியவேண்டிய செய்தி ஒன்று வந்திருக்கு வேறை ஒழுங்கையிலை சந்திரன் ராசாவைக் கண்டால் ஒருக்கா இந்த செய்தியை சொல்லுங்கோ .
இதுவும் புலிகள் தன காரணம் எண்டு சொல்லுவார் . …………..
அமைச்சர் டக்ளஸை யாழ்ப்பாணத்தில் ஓரங்கட்டும் அரசாங்கம்!- குழப்பத்தில் அமைச்சர்
[ சனிக்கிழமை, 10 நவம்பர் 2012, 05:35.05 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்பதற்கு அடையாளமாகவும் வெளிகொண்டு வருவதாகவும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவின் ஊழல் மோசடிகளைத் தொடர்ந்து, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு என்ற போர்வையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் குழுவொன்று அண்மையில் தற்காலிகமாக ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் இக்குழுவை சட்டபூர்வமாக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சின் ஊடாக அமைச்சர் மேற்கொண்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சு அமைச்சருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
சட்டபூர்வமாக்க சுமார் 26 பேர் கொண்டதாக அமைச்சர் அனுப்பி வைத்த குழுவோடு மேலும் பலரது பெயர்கள் சேர்க்கப்பட்டு 53 பேரின் பெயர்கள் இணைக்கப்பட்ட பட்டியல் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இது “நம்ம அரசு” என்று சொல்லிக் கொள்ளும் அமைச்சருக்கு தெரியாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் என்றும் கூறிக்கொள்ளும் தங்கராஜா என்பவரதும் அவருக்கு வேண்டிய சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுமே இவ்வாறு புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இப்புதிய பட்டியல் கிடைக்கப்பெற்ற நிலையில் குழப்பமடைந்த அமைச்சர், அடிக்கடி யாழ். போதனா வைத்தியசாலையில் நடாத்திவரும் அபிவிருத்திக் குழு கூட்டங்களை ஒரங்கட்டி வைத்துள்ளார். அரசாங்கத்தின் இச்செய்தியானது அமைச்சரின் நாற்காலி ஆட்டங்காண வைத்துள்ளது என பரவலாகப் பேசப்படுகின்றது.
இதேவேளை வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் விடயத்திலும் அமைச்சர் மூக்கை நுழைத்து கடைசியாக அடிவாங்கியது பத்தாமல் அவரை நம்பி காலைவைத்த பதில் அதிபரை வீட்டில் பாத்திரங்கழுவ வைத்துள்ளார் என்பதும் பழைய செய்திதான்.
புலிகளை காட்டிக் கொடுத்தவர்களும் உலகின் 30க்கு மேற்பட்ட நாடுகளும் தமது இராணுவ வர்த்தக நலன்கருதிக் கொன்றெ◌ாழித்தனர் என்பதே உண்மை வரலாறு. புலிகளீன் தவறான வழி நடத்தல் எனப் பொத்தாம் பொதுவாகப் பேசி எவரும் தமம்மைப் புத்திசாலிகள் எனக் கூறுவதில் வககிர உணர;வுதான் தெரிகிறது. உண்மைகளை நிச்சயம் வரலாறு பதிவு செய்யும். அப்போது சம்பந்தனும் சந்திரகாசனும் விநாயமூர்த்தியும் டக்லசும் ஒன்றாகவே பதிவு செய்யப்படுவர்.